வெளியிடப்பட்ட நேரம்: 19:51 (13/04/2017)

கடைசி தொடர்பு:19:51 (13/04/2017)

தோனிக்கும் 'ஓகே கண்மணி ' படத்துக்கும் இப்படி ஒரு சம்பந்தமா..? #UntoldStory

நம்ம சினிமாவுல முக்கோணக் காதல் மட்டும்தான் இருக்கா? இன்னும் எத்தனை எத்தனையோ டிசைன் டிசைனான வடிவங்கள்ல காதல் படங்கள் இருக்கு பாஸ்.. அதையும் வாட்ச் பண்ணுங்க...

* ஓரளவுக்கு எல்லோருக்கும் தெரிஞ்சதுதான் இந்த முக்கோணக் காதல் கதை. ஒரே பொண்ணை ரெண்டு பேர் லவ் பண்றது. ஒரே பையனை ரெண்டு பொண்ணுங்க லவ் பண்ணாலும் அதுவும் முக்கோணக் காதல்தான். ஆனா அந்த மாதிரி படங்கள்லாம் ரொம்ப ரொம்ப கம்மி. டைரக்டர்ஸ் உங்கள் ஓர வஞ்சனைகளை எல்லாம் நோட் பண்ணிக்கிட்டுத்தான் இருக்கோம். ஆங்.

* இது 'சதுரக் காதல்'. இதுக்கு எக்ஸாம்பிள் சொல்லணும்னா ரவுண்டா இருக்கிற லட்டை வெச்சுதான் சொல்லணும். ஏன்னா மூணு பேர் ஒரு பொண்ணை லவ் பண்ற 'கண்ணா லட்டு தின்ன ஆசையா' படம்தான் இதுக்கு பெர்ஃபெக்ட் மேட்ச்.

* படம் முடியறதுக்கு பத்து நிமிசம் முன்னாடி போனாப்போகுதுன்னு சொல்லிட்டு ஒரு ஃபைட் வரும். அதைத் தவிர எந்தப் பிரச்னையும் காதலர்களுக்குள்ள வராது. இதுக்குப் பேரு 'வட்டக் காதல்'னு வெச்சுருக்கோம். என்னது எக்ஸாம்பிளா, தமிழ் சினிமாவுல பல படங்கள் இந்த ஃபார்முலாதான் பாஸு. எதை வேணாலும் மனசுல நினைச்சுக்கங்க.

* மக்கள் நலக் கூட்டணி மாதிரி ஆறு பேர் கொண்ட கும்பலின் 'அறுங்கோணக் காதல்' கதைதான் இது. இதுக்கு உதாரணம் சொல்லணும்னா 'பாய்ஸ்'தான். அஞ்சு பேருமே தனித்தனியாக ஜெனிலியாவுக்கு ரூட் விட்டாலும் கடைசியில சித்தார்த்தைத்தான் ஜெனிலியா கரம் பிடிப்பாங்க. ஏன்னா சித்தார்த்துக்குத்தான் சீக்ரெட் ஆஃப் சக்சஸ் தெரியும்!

* இது கொஞ்சம் வித்தியாசமா இருக்கும். டபுள் சைடு லவ்தான். ஆனா ரெண்டு பேரும் அவ்வளவு சீக்கிரம் சேரவே மாட்டாங்க. கடைசி ஓவர் வரைக்கும் ஆட்டத்தை இழுத்துக்கிட்டுப் போற தோனி மாதிரி கடைசியாத்தான் ஒருவழியாக ஒண்ணு சேரணும்ங்கிறது இதன் எழுதப்படாத விதி. இதுக்குப் பேரு நீள்வட்டக் காதல்னு வெச்சுருக்கோம் மக்களே. ஆமா 'ஓகே கண்மணி' படம் லாம் பார்த்தீங்கதானே

* ரெண்டு பக்கமுமே காதல் ஓகே ஆகிடும். இது அரைவட்டக் காதல். ஆனா அவங்க ஒண்ணு சேருறதுக்குள்ள ஏதாச்சும் உள்ளே புகுந்து கெடுத்துடும். 7ஜி ரெயின்போ காலனி மாதிரி.

* 'தெருத்தெருவா அலையறோம் செருப்பாகத் தேயறோம் (இதெல்லாம் பெருமையா) நெருப்பாக நீயும் பார்த்தா நெஞ்சம் தாங்குமா'னு தனுஷ், கருணாஸ், மயில்சாமி,சத்தியன்னு நாலு பேரும் சேர்ந்து அஞ்சாவதாக இருக்கிற ஶ்ரீதேவியை லவ் பண்ணுவாங்களே இதான்... இதேதான் பாஸ். அந்த ஐங்கோணக் காதல் கதைங்கிறது.

* இந்த ஜானர்ல வேற சில படங்களும் வந்திருக்கு. ஆனாலும் மனசு என்னமோ ஜெஸ்ஸி ஜெஸ்ஸினுதான் சொல்லுது. 'நேர் கோட்டுக் காதல்'ங்கிற இதுல நேர் எதிரா இருக்கிற ரெண்டு பேரும் கடைசி வரை சேரவே மாட்டாங்க. ஊர்ல எவ்வளவோ பொண்ணு இருந்தும் இவர் எதுக்கு ஜெஸ்சியை லவ் பண்ணணும் மக்களே?

- ஜெ.வி.பிரவீன்குமார்