Published:Updated:

இதெல்லாம் நாங்க வேதாளத்துலயே பார்த்துட்டோமே.. மிஸ்டர் வின் டீசல்? `THE FATE OF THE FURIOUS' படம் எப்படி? #F8⁠

விகடன் விமர்சனக்குழு
இதெல்லாம் நாங்க வேதாளத்துலயே பார்த்துட்டோமே.. மிஸ்டர் வின் டீசல்? `THE FATE OF THE FURIOUS' படம் எப்படி? #F8⁠
இதெல்லாம் நாங்க வேதாளத்துலயே பார்த்துட்டோமே.. மிஸ்டர் வின் டீசல்? `THE FATE OF THE FURIOUS' படம் எப்படி? #F8⁠

16 ஆண்டுகளில் வெளியாகும் எட்டாவது பாகம். Fast and Furious   முக்கிய துணை கதாபாத்திரமான பால் வாக்கர் இல்லாத பாகம் என 'The Fate of the Furious' படத்திற்கு எக்கச்சக்க எதிர்பார்ப்பு. வெள்ளியன்று வெளியாக வேண்டிய திரைப்படம் , இரண்டு தினங்களுக்கு முன்பே இங்கு வெளியாக, படமோ ஆன்லைனில் ஞாயிறு வரை ஹவுஸ்ஃபுல். அடித்துப் பிடித்து, கரகோஷங்களுக்கு இடையே படம் பார்த்ததில் இருந்து.

எப்போதும் போல சேஸ் ரேஸ், நொறுங்கும் கார்கள், சிதறும் கண்ணாடிகள்தான் கதை, அது எங்கெங்கு எப்போது உடையும் என்பது திரைக்கதையாக வைத்து தான் இந்த பாகமும் உருவாகியிருக்கிறது. லெட்டி ஓர்டிஸுடன் (மைக்கேல் ரோட்ரிக்ஸ்) ஜாலியாக வாழ்ந்து வருகிறார் டோம்னிக் (வின் டீசல்). திடீரென அவர் வாழ்வின் நுழையும் சைஃபர்  ( சார்லஸ் திரோன் ) என்ற டெக்கி வில்லியின் பிடியில் சிக்குகிறார். அவள் சொல்லும் வேலையை முடிக்க வேண்டும் எனக் கட்டளை இடுகிறாள். அவளுக்காக தன் நண்பர்கள், காதலி என அனைவரையும் பகைத்துக் கொண்டு அவர்களிடமே மோதுகிறான். அவள் பேச்சை எதற்காக வின் டீசல் கேட்கிறார், கடைசியில் தன் டீமோடு மீண்டும் இணைந்து எதிரியை பழி வாங்குகிறாரா என்பதை எப்போதும் போல் அதிரடி ஆக்ஷனில் சொல்லி இருக்கும் படம் தான் Fate of the Fury 8. அதிரடி மாஸ் மசாலாவோடு இந்த முறை சற்று அதிகமாகவே சென்டிமென்ட் மசாலா தூவி இருக்கிறார்கள்.

இந்த முறை செம்ம மாஸ் மசாலா என சொல்ல காரணம் இருக்கிறது. க்யூபாவில் தன் மனைவியுடன் ஜாலி ட்ரிப்பில் இருக்கிறார் டாம். க்யூபாவில் இருக்கும் லோக்கல் ரௌடியுடன் தன் உறவினர் முட்டிக்கொள்ள, சுபயோக சுப நேரத்தில் ஆரம்பிக்கிறது ஆஸ்தான கார் சேஸ். தீத்குழம்பும், அக்கினிப்பிளம்புக்கும் இடையே ரிவர்ஸிலேயே வென்று அசத்துகிறார் டாம். அந்த ரேஸ் முடிந்ததும் 'ஓப்பனிங் சாங் எங்கடா?' எனக் கோரஸாகக் கத்துகிறார்கள் ஆடியன்ஸ். இன்னொருபுறம் தன் மகளின் விளையாட்டுக் குழுவிற்கு கோச் ஆக இருக்கிறார் டிவேன் ஜான்சன். அவரோடு மொத்த டீமும் ஒன்று சேர்கிறது. எல்லாம் சைஃபரைக் கண்டுபிடிக்க. உலகையே அழிக்க முடிகிற வல்லமை உள்ள ஆயுதத்தைக் கைப்பற்ற நினைக்கும் சைஃபர் உலகில் எங்கு இருக்கிறார் என கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு ஹைடெக் வில்லி.

படத்தை எழுதிய க்ரிஸ் மார்கன் நிறைய தமிழ்ப் படங்களைப் பார்த்து இன்ஸ்பையர் ஆகியிருப்பார் போல. ஒவ்வொரு நொடிக்கும் தன் லொகேஷனை மாற்றிக்கொண்டே இருக்கிறார் சைஃபர் (அட, உன்னைப்போல் ஒருவன் ரெபரென்ஸ்) அவரை ஜேசன் ஸ்டேத்தம், ட்வைன் ஜான்சன் குழு உலகம் முழுக்க நெட்வொர்க் வழியாக தேட, 'இந்த தெருவுல தான் இருக்கா, இந்த பில்டிங் தான், இந்த ஃப்ளோர் தான் என மாஸ் டயலாகோடு அவர்களின் இடத்துக்கே டாமோடு வந்து அள்ளு கிளப்புகிறார்கள். (இதத்தான்  வேதாளம்  படத்துலயே பார்த்துட்டோமே!)

ஃபாஸ்ட் & ப்யூரியஸ் படங்கள் என்றாலே கார் சேஸ் தான்.கார்த்திகை தீப விளக்குகளை குவித்து வைத்தது போல அந்த இடம் முழுக்க கார்கள் கார்கள்... இது என்ன இடம் என கேட்க " ஹெவன்" என்கிறார்... அப்புறம் நடப்பதெல்லாம் சொர்க்கலோக மாயாஜாலம் தான்.படம் முழுக்க கார்கள் மட்டும் தான். கார்களுக்கு அடுத்த கட்டமாக டேங்கர்களும் சில காட்சிகளில் வருகிறது.

அணு ஆயுதப் பெட்டியை வைத்திருப்பவரிடம் இருந்து அந்தப் பெட்டியை எடுப்பதுதான் டாமிற்கான அசைன்மென்ட். சாலையில் நிறுத்தப்பட்டு இருக்கும் எல்லா கார்களையும் ஆக்டிவேட் செய்கிறாள் சைஃபர். அந்த காட்சி முழுக்கவே கார்களின் அட்டகாசம் தான். பனிப்பிரதேசத்தில் நடக்கும் அந்த சண்டைக் காட்சிகள் செம. குறிப்பாக அந்த சப்மரைன் மேலே வந்ததும் அண்ணா சாலை ரோடு போல தரை பிளந்து கார்கள் மூழ்குவது மிரட்டல். ஆனாலும், ராக்கெட் லாஞ்சரைக்  காலால் எட்டி உதைத்து திசைமாற்றுவது, வெடி குண்டு எரியும் வண்டியை இடித்து திருப்பிவிட்டு அவர்களின் வண்டிகளையே துவம்சம் செய்வது என கொஞ்சம் அதீத கற்பனைகளும் இருக்கிறது. ஆனால் அதை ஏற்றுக் கொள்ளும் படி விஷுவலில் மிரட்டலாகக் காட்டியிருக்கிறார்கள்.

இவை தவிர்த்து நம்மைக் கவர்வது ஜேசன் ஸ்டாதாம் ஃப்ளைட்டில் போடும் சண்டைக்காட்சி, இயல்பாக எல்லோரையும் கவர்கிறது. கிட்டத்தட்ட ராப் பீன் ஹுட் படத்தில் ஜாக்கிசான் போடும் சண்டைக் காட்சி நினைவுக்கு வந்தாலும், சின்னச் சின்ன காமெடிகளுக்கு கைதட்டலை அள்ளுகிறார். அந்தச் சண்டைக்காட்சியில் நாம் இவர் மறுபடி வருவார் என யூகித்தாலும், க்ளைமாக்ஸில் கண்டிப்பாக அதில் ஜெயிக்கப்போவது ஜேசன் தான் எனத் தெரிந்த பின்பும் நம்மை கொஞ்சம் பயம் காட்டி பின்னால் 'சும்மா உலுலாய்க்கு' என்ற படி நம்மை அடுத்த காட்சிக்கு எடுத்து சென்றதும்   க்ளிஷே என்றாலும் படத்தின் விறுவிறுப்பில் ஒரு பாகமாக கவர்கிறது.

எளிதாக யூகிக்க முடிந்த ட்விஸ்ட்கள் தான், வின் டீசல் தவிர எந்த கதாபாத்திரத்தையும் மையப்படுத்தாமல் நகரும் கதை, மிக வலிமையான கதை எதுவும் இல்லாதது என்ற பிரச்சனைகளையும் மீறி இந்தப் பாகமும் ஈர்க்கிறது. இறுதியில் இதற்கு முந்தைய பாகத்தை அழகான சென்டிமெண்டோடு இந்த பாகத்தில் இணைத்திருந்தது அழகு. வில்லி சைஃபர் தப்பித்துப் போவதோடு படம் முடிந்திருப்பதால் அடுத்த பாகத்தில் இன்னும் வலுவான காரணத்தை வைத்து ஹீரோவின் டீமை லாக் செய்து படத்தை சுவாரஸ்யப்படுத்துவார் என நம்பலாம்.