Published:Updated:

'அது' தனிப்பட்ட கருத்தல்ல, ஏ.ஆர்.முருகதாஸ் விளக்கம்

'அது' தனிப்பட்ட கருத்தல்ல, ஏ.ஆர்.முருகதாஸ் விளக்கம்
'அது' தனிப்பட்ட கருத்தல்ல, ஏ.ஆர்.முருகதாஸ் விளக்கம்

தேசிய விருது பற்றிய தனது கருத்து தனிப்பட்ட கருத்தல்ல, அது ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களின் கருத்து என கூறியுள்ளார் இயக்குநர் முருகதாஸ். மேலும் பேசி உண்மைகளை கிளற வேண்டாம் எனவும் அவர் கூறியுள்ளார். 

'அது' தனிப்பட்ட கருத்தல்ல, ஏ.ஆர்.முருகதாஸ் விளக்கம்

சமீபத்தில், தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டது. இவ்விருதுகள் நடுவர் குழுவினரின் ஒருதலைப்பட்சமாக வழங்கப்பட்டுள்ளது என விமர்சித்திருந்தார் ஏ.ஆர்.முருகதாஸ். மேலும், நடுவர்களின் செல்வாக்கும், ஒரவஞ்சனையும் மட்டுமே விருதுகளில் தெரிவதாகவும், ஒருதலை சார்பாக விருதுகள் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் பதிவிட்டிருந்தார். இதையடுத்து, ஏ.ஆர்.முருகதாஸின் கருத்தை முன்வைத்து சமூக வலைதளங்களில் விவாதங்கள் எழுந்தன. இந்நிலையில், தனது கருத்து தனிப்பட்ட கருத்தல்ல என ட்விட்டரில் கூறியுள்ளார் முருகதாஸ். இது குறித்த தனது பதிவில், 'எனது கருத்து தனிப்பட்ட கருத்தல்ல, அது ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களின் கருத்து. மேலும் விவாதித்து உண்மைகளை கிளற வேண்டாம்' என கூறியுள்ளார்.