Published:Updated:

விஜய்யும் அஜித்தும் நண்பர்கள் அல்ல, ஃபேமிலி..! - இது தமிழ் `ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்'

தார்மிக் லீ
விஜய்யும் அஜித்தும் நண்பர்கள் அல்ல, ஃபேமிலி..! - இது தமிழ் `ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்'
விஜய்யும் அஜித்தும் நண்பர்கள் அல்ல, ஃபேமிலி..! - இது தமிழ் `ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்'

ப்படியே இந்த 'ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்' படத்தை நம்ம ஊர் சாயலில்... அதாவது தமிழ் சினிமாவில் பெப்பர் தூவி, காரசாரமா சுடச்சுட ரெடி பண்ணியிருந்தா எப்படி இருந்திருக்கும்?

அஜித் (விநாயக்), விஜய் (ஜெக்தீஷ்), விக்ரம் (சீயான்), அனுஷ்கா (காவியா), ஆர்யா, கண்மணி (நித்யா மேனன்), ஜெயம் ரவி (மித்ரன் ஐ.பி.எஸ்) எல்லோரும் ஒரே குடும்பம். விநாயக்-காவ்யா இருவரும் ஊர் சுற்றிக்கொண்டு ஜாலியாக வாழ்ந்து வருகின்றனர். விநாயக்கின் சொந்தக்காரப் பையன் கார் ரேஸ் பிரச்னையில் மாட்டிக்கொள்கிறான். கார் ரேஸ் என்று சொன்னவுடன் வான்ட்டடாக வண்டியில் ஏறுகிறார் விநாயக். சிறப்புத் தோற்றத்தில் வந்த ஆக்‌ஷன் கிங்குடன் கார் ரேஸ் நடக்கிறது. ஆக்‌ஷன் கிங்கின் கார் டெக்கி ரகத்தைச் சேர்ந்தது... அந்த காரை நெருங்கக்கூட முடியாது. ஆனால் விநாயக்கிற்கு காரைப்பற்றி A to Z தெரியும் என்பதால் காரில் சில ஜிம்பாலக்கடி வேலைகளைச் செய்து காரை செமையாக மாற்றிவிடுகிறார். இருவரும் ரேஸுக்கு ரெடியாக 1... 2... 3... சொல்லி ரேஸை ஆரம்பிக்கிறார் காவ்யா. வீலிங் செய்து ரேஸில் சீறுகிறார் விநாயக். பரபரப்பான ரேஸில் இருவரும் ஈடுபட... 200 கிலோமீட்டர் வேகத்தில் சென்ற விநாயக் செல்லும் வழியில் விளையாடிக்கொண்டிருந்த சின்னக்குழந்தை ஒன்று திடீரென குறுக்கே வந்துவிட காரை ட்ரிஃப்ட் அடித்து உள்ளே ஏற்றிக்கொண்டு ஜாலியாகப் பேசிக்கொண்டே ரேஸை அசால்ட் செய்கிறார். திடீரென கார் தீப்பிடிக்க அதைச் சற்றும் பொருட்படுத்தாமல் அருகில் இருக்கும் குழந்தையையும் காப்பாற்றி ரேஸிலும் வென்று கெத்தாக காரைவிட்டு இறங்கி வருகிறார் விநாயக். அப்போது வரும் பன்ச் டயலாக். 'நம்மகூட இருக்கறவங்களை நாம பார்த்துக்கிட்டா... நமக்கு மேல இருப்பவன் நம்மளைப் பார்த்துக்குவான்'. அப்பறம் என்ன மக்களே இன்ட்ரோ சாங்தான்! 

ஒருபக்கம் இவர் தனது வாழ்க்கை ஜாலியாக வாழ்ந்துகொண்டிருக்க... மறுபக்கம் 'ஜெக்தீஷ்' தனது பேபி நிவியுடன் ஸ்கூலில் ஃபுட்பால் டீம் கோச்சாக வாழ்ந்துகொண்டிருக்க கதையும் ஜாலியாக நகர்கிறது. இந்த இரண்டும் இல்லாமல் மூன்றாவது பக்கம் ஹை டெக் வில்லி 'நயன்' (நயன்தாரா) இன்ட்ரோ. நயனோ உலகை அழிக்கும் நவீன மெஷின் ஒன்றை உருவாக்கும் புராஜெக்டில் இருக்கிறார். அந்த மெஷனை முழுமை செய்வதற்காக ராணுவத்தில் இருக்கும் நீர்மூழ்கிக் கப்பல் நயனுக்கு தேவைப்படுகிறது. அதை எடுக்க விநாயக்கின் உதவி தேவைப்படுகிறது. ஏனென்றால் அவர்தான் ஊருக்குள் கார் ரேஸில் பெரிய 'தல' கட்டு. சில பல சென்டிமென்டுகளை வைத்து விநாயக்கை தன் பக்கம் இழுக்கிறார் நயன். தன் குடும்பத்திற்கு எதிராகவே மாறிவிடுகிறார் விநாயக். இதை அறிந்த டீமின் ஹெட் சின்னத்தம்பி (எ) பிரபு ஃப்ளைட்டைப் பிடித்து ஊருக்கு வருகிறார். இந்த டீமிற்கு பலமே இவர்களிடம் இருக்கும் 'கடவுளின் கண்' என்றழைக்கப்படும் ஹேக்கிங் கருவிதான். அதை வைத்து யார் எங்கே இருக்கிறார்கள் என்று சுலபமாகப் பார்க்கலாம். அதை வைத்து திட்டம் தீட்டுவதற்காக ஒன்றாகக் கூடுகின்றனர் ஃப்யூரியஸ் குடும்பம். இதில் சிக்கல் என்னவென்றால் 'சீயான்' பெட்டி கேஸில் ஜெயிலில் இருக்கிறார். அவரைக் காப்பாற்றுவதற்காக 'ஜெக்தீஷ்' கிளம்புகிறார். சிலபல தில்லுமுல்லு வேலைகளைச் செய்து சீயானை ஜெக்தீஷ் காப்பாற்றி ஃப்யூரியஸ் குடும்பத்தில் சேர்ந்துவிடுகிறார். எப்படி வில்லன் கும்பலை அழிப்பது என்று திட்டம் தீட்டும் நேரத்தில் வில்லி நயனும், விநாயக்கும் எதிர்பாராதவிதமாக அந்த இடத்தையே அழித்து ஃப்யூரியஸ் டீமையும் அடித்துப் போட்டு கடவுளின் கண்ணை லவட்டிச் செல்கின்றனர்.

சேஸிங்கிற்கு கார் தேவையிருப்பதாலும் அரசாங்கத்திற்கும் இதில் சம்பந்தம் இருப்பதாலும் அங்கே முக்கியமான பொறுப்பில் இருக்கும் சின்னத்தம்பியை அணுகுகிறார்கள் ஃப்யூரியஸ் குடும்பம். அவரும் தேவையான சலுகைகளை செய்து கொடுக்கிறார். வேட்டைக்குக் கிளம்புகின்றனர் ஃப்யூரியஸ் டீம். ஹேக்கிங்கில் ஜித்தான ஆர்யா, கண்மணி (நித்யா மேனன்) இருவரும் அதைப் பார்த்துக்கொள்கின்றனர். காவ்யா, விநாயக் துரோகம் செய்துவிட்டதை நினைத்துக்கொண்டே எப்படியாவது கடவுளின் கண்ணை மீட்டெடுக்க வேண்டும் என்ற வேகத்தில் புறப்படுகிறார். அவரோடு இணைந்து 'மித்ரன் ஐ.பி.எஸ்', 'சீயான்' ஆகியோரும் கைகோக்கின்றனர். இந்த டீமை 'ஜெக்தீஷ்' தலைமை தாங்குகிறார். உலகத்தை காப்பாற்றுவதற்காகவும், விநாயக்கை மீட்கவும் வில்லன் கும்பலைத் தேடிப் புறப்படுகின்றனர். ஆனால் அங்கே சென்றபிறகுதான் நயனுக்குக் கீழே வேலை பார்க்கும் விக்டரைப் பற்றித் தெரியவருகிறது. இவர்களின் பயணத்திற்கு முட்டுக்கட்டையாகவே ஒவ்வொரு செயலையும் செய்து வருகிறார் விக்டர். எல்லாவற்றையும் கடவுளின் கண் வாயிலாக பார்த்த நயன் உலகத்தை அழிகும் நவீன மெஷினை ஏவிவிடுகிறார். அதையறிந்த ஃப்யூரியஸ் குடும்பம் விரைந்து செல்கின்றனர். இவர்கள் சென்ற அதே பாதையில் விக்டருடன் கடுமையான முறையில் சண்டையிட்டு விநாயக்கும் சேர்ந்து வருகிறார். ஷாக் ரியாக்‌ஷனோடு இந்தச் சம்பவத்தைப் பார்க்கிறார் 'நயன்'. இங்கேதான் கதையில் பெரிய ட்விஸ்ட்..!

எல்லாவற்றையும் முன்கூட்டியே சண்டையிடும் சாக்கில் ஃப்யூரியஸ் குடும்பத்திற்கு ஒட்டுமொத்த  ப்ளானையும் சொல்லிவிட்டார் விநாயக். விநாயக்கிற்கு ஓர் ஆண் குழந்தை இருப்பது அப்போதுதான் தெரிய வருகிறது. அந்தக் குழந்தையைக் கடத்திவைத்துதான் நயன், விநாயாக்கிடமிருந்து வேலை வாங்கியிருக்கிறார். இந்தப் பக்கம் சேர்ந்துவிட்ட விநாயக்கைப் பார்த்து குழந்தையை நயன் கொன்றுவிடுவாரோ என்ற சந்தேகம் எல்லோருக்கும் வரலாம். ஆனால் அதுக்கும் ப்ளான் பண்ணிவிட்டார் நம்ம விநாயக். ஆல்ரெடி ஜெக்தீஷ், விநாயக்கின் குழந்தையை மீட்க நயனின் இடத்திற்குச் சென்றுவிட்டார். குழந்தையையும் காப்பாற்றிவிட்டு 'ஐ யம் வெயிட்டிங்' என்று நயனுக்கு மெசேஜ் கொடுக்கிறார் ஜெக்தீஷ். 

க்ளைமாக்ஸில் விநாயக்குடன் சேர்ந்து ஃப்யூரியஸ் குடும்பம் உலகத்தை அழிக்கும் நவீன மெஷினைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர போராடிக்கொண்டிருக்க, மறுபக்கம் நயனுக்கு எதிராக ஜெக்தீஷ் சண்டையிட படம் சுவாரசியத்தின் உச்சத்தை அடைகிறது. ஒருவழியாக விநாயக் கார் ஓட்டுவதில் கத்துகிட்ட மொத்த வித்தையையும் முழுசா இறக்கி நவீன மெஷினை டீமின் உதவியோடு கட்டுக்குள் கொண்டு வருகிறார். மறுபக்கம் நயன், ஜெக்தீஷுக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு எஸ்கேப் ஆகிவிடுகிறார். இதற்கு முன் வரும் க்ளைமாக்ஸைப் போலவே இதிலேயும் ஃபேமிலியுடன் டைம் ஸ்பெண்ட் பண்ணும் சீக்வென்ஸ்தான். போராட்டத்தில் காப்பாற்றிய விநாயக்கின் குழந்தைக்கு 'ஜோஸப் குருவிலா' என்று பெயரிட்டதுடன் எண்ட் கார்ட் போடுகிறார் டைரக்டர். 

தப்பித்த நயனை தேடிச் செல்வதுதான் ஃப்யூரியஸ் பார்ட் 9. டு பி கன்டினியூடு...

- தார்மிக் லீ

அடுத்த கட்டுரைக்கு