'உழவர்களின் நாயகன் தனுஷ்' - பகீர் கிளப்பும் 'பவர்பாண்டி' போஸ்டர்ஸ்

படம் நல்லாருக்கோ இல்லையோ ஆளாளுக்கு ஏதாவது பட்டம் கொடுத்துக்கிறதுதான் உலக வழக்கம். அதிலேயும் கான்ட்ரோவர்சியா ஏதாவது பேர் வைக்கிறது இப்ப ஃபேசனாவே ஆகிடுச்சுபோல. கொஞ்சநாளா சத்தமில்லாம ஓய்ஞ்சு போய்க் கிடந்தாங்க. இப்போ திரும்பவும் ஆரம்பிச்சுருக்காங்க மக்களே...

உழவர்

மக்கள் சூப்பர் ஸ்டார் லாரன்ஸ் :

இது எல்லாருக்கும் தெரிஞ்ச கதைதான். 'மொட்டை சிவா கெட்ட சிவா' படத்துக்காக சர்ப்ரைஸா லாரன்ஸுக்கு பேர் வைக்கிறோம்னு டைட்டில் கார்டுல 'மக்கள் சூப்பர் ஸ்டார்'னு போட 'என்னது இவருமா?' ஏன் இருக்குறவங்களாம் பத்தாதான்னு இணையமே கொந்தளிச்சுடுச்சு. மக்கள் சூப்பர் ஸ்டார் லாரன்ஸ்னா அப்போ ரஜினிகாந்த் யாருக்கு சூப்பர் ஸ்டாருன்னுதான் இப்போவரைக்கும் தெரியவே தெரியலை பாஸு.

புரட்சி வீரன் கார்த்தி:

பேரைப் பார்த்ததும்  ஏதோ டப்பிங் பண்ணி தமிழ்ல வந்த ஹாலிவுட் பட டைட்டில்னு நினைச்சுடாதீங்க ஃப்ரெண்ட்ஸ்; இது கார்த்திக்கு அவரோட ரசிகர்கள் வெச்சிருக்கிற பட்டமாம். அதிலேயும் 'காற்று வெளியிடை' படத்துக்கு அந்தப் பெயரில் அவ்வளவு பேனர்களை அடிச்சு வெச்சுருக்காங்க. கார்த்தி நடிச்ச எல்லாப் படங்களையும் விக்கிபீடியாவுல இருந்து கொக்கிபீடியா வரைக்கும் தேடிப்பார்த்தாச்சு. அவர் அப்படி என்னதான் 'புரட்சி' பண்ணினார் யாருக்காக புரட்சி பண்ணுனார்னு தெரியலை. ஒருவேளை இந்த 'காற்று வெளியிடை' படத்துல முதல் குழந்தை பிறந்ததுக்கு அப்புறம் கல்யாணம் பண்ணிக்கலாம்னு சொல்லுவாரே... அதை ஏதும் இந்த புரட்சி லிஸ்ட்டுல சேர்த்துட்டாங்களோ என்னவோ யாருக்குத் தெரியும்.

உழவர்

உழவர்களின் நாயகன் தனுஷ் :

சரி அதெல்லாம்தான் அப்படி இருக்குன்னு இந்த 'பவர் பாண்டி' படத்துக்குப் போனா 'உழவர்களின் நாயகன்' தனுஷ்னு ரசிகர்கள் பட்டம் கொடுத்து பேனர் அடிச்சுருக்காங்க. என்னது உழவர்களின் நாயகன் தனுஷா. இது என்னடா உழவர்களுக்கு வந்த சோதனைனு நினைச்சுக்கிட்டே சரி படத்துல ஏதும் அது பத்தி மெசேஜ் சொல்லியிருப்பார் போலன்னு படத்தைப் பார்த்தா அதிலேயும் அப்படி ஒண்ணையும் காணோம். 'உழவன்' படத்துல நடிச்சதுக்காக உழவனின் நாயகன்னு பிரபுவுக்குக் கொடுத்திருந்தா ஒரு லாஜிக் இருக்கு. அட்லீஸ்ட் 'உழவன் மகன்'ல நடிச்சாருங்கிறதுக்காக விஜயகாந்துக்கு கொடுத்திருந்தாலும் ஒரு லாஜிக் இருக்கு. ஆனா தனுஷுக்கு ஏன் உழவர்களின் நாயகன்னு பட்டம் கொடுத்தாங்கன்னுதான் சத்தியமா தெரியலை மக்களே. ஒருவேளை அடைமொழி கொடுத்தா அனுபவிக்கணும் ஆராயக் கூடாதுன்னு, சொல்லாம சொல்ல வராங்களோ என்னவோ யாருக்குத் தெரியும்... கெரகத்த.

உழவர்

இரண்டாம் உலகநாயகன் ஆர்யா :

'பவர் பாண்டி'க்கு அவங்க அப்படி பட்டம் கொடுத்தா அப்புறம் ஆர்யா ரசிகர்கள் மட்டும் சும்மா இருக்க அவங்க என்ன டொமேடோ தொக்கா, இல்லை டொமேடோ தொக்கான்னு கேட்குறேன். அவங்களும் கொடுத்துருக்காங்க மக்களே. அதுதான் இரண்டாம் உலகநாயகன்ங்கிற பட்டம். அதாவது 'இரண்டாம் உலகம்' படத்துல நாயகனாக நடிச்சதுக்காக இந்தப் பெயரை வெச்சுருப்பாங்க போல. இந்த அட்ராசிட்டீஸைலாம் பார்க்கும்போதுதான் வைரமுத்து 'மூன்றாம் உலகப்போர்' நாவல் வேற எழுதுனாரே அவருக்கு ஏன்  'மூன்றாம் உலக நாயகன் வைரமுத்து'ன்னு யாருமே போஸ்டர் அடிக்கலையேன்னு தோணுச்சு. ஹ்ம்ம்ம்.. ஆனா ஒண்ணு வருங்காலத்துல இதையெல்லாம் பார்த்துட்டு யாரு யாருக்கு என்னென்ன பட்டங்களைப் போட்டு அட்ராசிட்டீஸ் பண்ணப் போறாங்களோ தெரியலை.

- ஜெ.வி.பிரவீன்குமார்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!