Published:Updated:

'பவர் பாண்டி' மறந்த ஃபேஸ்புக் எத்திக்ஸ் எது தெரியுமா?!

'பவர் பாண்டி' மறந்த ஃபேஸ்புக் எத்திக்ஸ் எது தெரியுமா?!
'பவர் பாண்டி' மறந்த ஃபேஸ்புக் எத்திக்ஸ் எது தெரியுமா?!

பவர்பாண்டி பார்த்துட்டு ஆளாளுக்கு ஒரு டைப்பா விமர்சனம் பண்ணிட்டு இருக்காங்க. நமக்கும்கூட மக்கள் சார்பா  சில கேள்விகள் கேட்கணும்னு தோணுச்சு. அப்புறம் என்ன கேட்டுட வேண்டியதுதானே...

* ரேவதியைத் தேடி ஹைதராபாத் போகிற ராஜ்கிரண் வழியில் சில பேர் சொல்வதைக் கேட்டு ஃபேஸ்புக்கில் ஈஸியாக ரேவதியைத் தேடுகிறார். அதாவது ரேவதி பெயரையும் அவங்க அப்பா பெயரையும் சேர்த்துப்போட்டு ரெண்டே செகண்டுல கண்டுபுடிச்சிடுறார். ஆமா தெரியாமத்தான் கேட்கிறோம். ஃபேஸ்புக் யூஸ் பண்ற ஹவுஸ் வொய்ஃப் எல்லோரும் அவங்க அப்பா பேரைத்தான் வெச்சுருப்பாங்களா, இல்லை அந்தப் பேர்ல அவங்க ஒருத்தர் மட்டும்தான் இருப்பாங்களா? அட்லீஸ்ட் முகம் தெரிஞ்சிருந்தாக்கூட பரவாயில்லை. மடோனாவாக இருக்கும்போது பாத்த ஆளு ரேவதியாக மாறியும் அசால்ட்டாகக் கண்டுபிடிக்கிறதெல்லாம் 'வேற லெவல்' பாஸ். கூடவே சுத்துற பொண்ணுங்க ஐ.டி-யையே கண்டுபிடிக்க முடியலைன்னு கடுப்புல சுத்துற பசங்களுக்கு இதெல்லாம் பாத்தா காண்டாகுமா இல்லையா?

* ராஜ்கிரணோட ஃப்ளாஷ்பேக் வெர்சனே அந்த தனுஷ்தான்ங்கிறதே பெரிய ஆச்சர்யமா இருந்துச்சு. சரின்னு மனசை தேத்திக்கிட்டு பார்க்க ஆரம்பிச்சா, படத்துல ஒரு சீன் வெச்சுருக்காங்க பாருங்க ஆத்தி. அதாவது ஓப்பனிங்கிலேயே எம்ஜிஆர், ரஜினிகூடவெல்லாம் ஸ்டன்ட் மாஸ்டராக இருக்கிற பவர்பாண்டி ராஜ்கிரண் போட்டோ எடுத்து வெச்சுருக்கிற மாதிரி காட்டுறாங்க. சரி அதுல என்ன பிரச்னைங்கிறீங்களா... லீவுக்கு ஊருக்குவரும் மடோனாவும் தனுஷும் 'அடிமைப்பெண்' படம் பார்க்கிறாங்க. அப்போ வரைக்கும் தனுஷாகவே இருக்கிற ராஜ்கிரண் அடுத்த கொஞ்சநாள்களிலேயே சினிமாவுல சேர்ந்து ஸ்டன்ட் மாஸ்டர் ஆகி அந்த எம்ஜிஆருடனேயே போட்டோ எடுத்துக்கிறார். ஸப்ப்ப்பா தலை சுத்துதுல... ஏதோ சின்ன வயசு கேரக்டர்ல வேற யாரையாயாவது காட்டி இருந்தா பரவாயில்லை. எல்லோருக்கும் நல்லா அறிமுகமான தனுஷைக் காட்டிட்டு டக்குனு ராஜ்கிரணாகலாம் மாறுனா பதறுமா இல்லையா?

* ராஜ்கிரண்தான் ரேவதியை ரெண்டே நிமிஷத்துல ஃபேஸ்புக்குல தேடுறாருன்னு சொல்றீங்க சரி. ரேவதியோட அக்கவுன்டுக்கும், ராஜ்கிரணோட அக்கவுன்டுக்கும் சம்பந்தமே இல்லாத ராஜ்கிரணோட பேரன் யூஸ் பண்ற ஃபேஸ்புக் அக்கவுன்ட்ல ராஜ்கிரணும் ரேவதியும் எடுத்து அப்லோடுற போட்டோ எப்படி நியூஸ்ஃபீடுல வரும்னு கேட்கிறேன். ஸ்டேட்டஸ் போட்டா லிஸ்ட்டுல இருக்கிறவங்களுக்கே காட்ட மாட்டேங்குது. புரோட்டா வாங்கிக் கொடுத்து பொரணி கேட்கிற கதையா டீ, வடைலாம் வாங்கிக்கொடுத்து ஒரு லைக் வாங்க வேண்டியதா இருக்கு. நீங்க இவ்வளவு அசால்ட்டா அப்படி ஒரு சீனை வெச்சுட்டீங்களே...

* அப்படியே இன்னொரு சந்தேகம் பாஸ். ராஜ்கிரணைப் பாக்கணும்னு ரேவதி ட்ரை பண்ணிருக்காங்கன்னா நேரே தமிழ்நாட்டுக்கே வந்து தேடிருக்கலாமே... சினிமா உலகத்துக்கே தெரிஞ்ச அவ்வளவு பெரிய ஸ்டாரான ராஜ்கிரணை யார்கிட்ட கேட்டாலும் சொல்லியிருப்பாங்களே. நியூஸ் பார்த்துதான் நீ ஸ்டன்ட் மாஸ்டர் ஆகிட்டேன்னு தெரியும்னு சொல்றாங்க. ஆனா முதல் மெசேஜே நீ இன்னும் உயிரோடதான் இருக்குறியான்னு சீரியஸாகக் கேட்கிறாங்க. அவ்வளவு பெரிய ஆளு செத்திருந்தார்னா அதே நியூஸ்ல அது தெரியாதா.. இல்லை அந்த நியூஸ் மட்டும் ரேவதி பார்க்க மாட்டாங்கனு ஆடியன்ஸ் நினைச்சுக்கணுமா மக்களே...

சேச்சே அந்த சின்ராசு பாம்புக்கு முத்தம் கொடுத்தீங்களே கடிச்சதா னுலாம் நாங்க கேட்கமாட்டோம். ஆங்.

- ஜெ.வி.பிரவீன்குமார்

அடுத்த கட்டுரைக்கு