Published:Updated:

எம்.ஜி.ஆர் பேர் வைச்சவர் நயன்தாராவுக்கு வில்லன்!

எம்.ஜி.ஆர் பேர் வைச்சவர் நயன்தாராவுக்கு வில்லன்!
எம்.ஜி.ஆர் பேர் வைச்சவர் நயன்தாராவுக்கு வில்லன்!

எம்.ஜி.ஆர் பேர் வைச்சவர் நயன்தாராவுக்கு வில்லன்!

“நான் பிறந்து இரண்டு வயசு வரைக்கும் எனக்கு பேர் வைக்கலை. எங்க அப்பா தீவிர எம்.ஜி.ஆர் ரசிகர். என் அண்ணனுக்கே எம்.ஜி.ஆர் பேர் வைக்கணும்னு ஆசைப்பட்டார். ஆனா அது நடக்காமலே போய்டுச்சு. அதுனால எனக்கு எப்படியாவது எம்.ஜி.ஆர் தான் பேர் வைக்கணுங்கிறதுல பிடிவாதமா இருந்தார். 

எம்.ஜி.ஆர் தான் பேர் வைக்கணும்னு இரண்டு வருசமா பேர் வைக்காததால, செல்லப் பேர் வைத்துதான் வீட்டுலையும் கூப்பிடுவாங்க. ஒரு நாள் எம்.ஜி.ஆர் கட்சி மீட்டிங்கிற்காக திருவான்மியூர் வந்திருந்தார். அப்போ எப்படியாவது தலைவரிடம் பேசிடணும்னு எங்க அப்பா துடிச்சிருக்கார். ஆனா அங்கிருந்த போலீஸ்காரங்க தலைவரைப் பார்க்கவிடலை. உடனே என்ன மேடை மேல தூக்கி வீசிட்டார். அதைப் பார்த்த எம்.ஜி.ஆர் சினிமாவுல பிடிக்கிற மாதிரியே என்னைப் பிடிச்சார். 

எங்க அப்பாவ மேடைக்கு கூப்பிட்டு தலைவர் செம திட்டு. ஆனா எங்க அப்பாவுக்கு செம ஆச்சர்யம். விவரத்தை கேட்டுட்டு, உன் பெயர் என்னனு என் அப்பாட்ட கேட்டிருக்கார். செல்வம்னு எங்க அப்பா சொல்ல, உடனே, வெற்றிச்செல்வன்னு எனக்குப் பேர் வச்சார் எம்.ஜி.ஆர். இந்த விஷயத்தை வீட்டுல ஒவ்வொரு முறை சொல்லும் போதும் சிலிர்த்துப் போய்டுவேன். தலைவரே பேர் வச்ச பெருமையெல்லாம் வேற லெவல் ஃபீலிங்” ஆச்சரியத்துடனே பேசுகிறார் நடிகர் வெற்றிச்செல்வன். 

தாஸ்ராமசாமி இயக்கத்தில் நயன்தாரா நடித்து சமீபத்தில் வெளியான ‘டோரா’ படத்தில் மூன்று வில்லன்களில் ஒருவர் வெற்றிச்செல்வன். படத்தில் பானிப்பூரி வில்லனாக நடித்திருக்கிறார். வடநாட்டுக்காரர் போல கெட்டப் போட்டு மிரட்டியவருக்கு சொந்த ஊர் சென்னைதான்.

“என் அப்பாவும், ‘இளமை ஊஞ்சல் ஆடுது’ மாதிரி நிறைய படங்களில் கேரக்டர் ரோல்களில் நடிச்சிருக்கார். அதுமட்டுமில்லாம எம்.ஜி.ஆர். பேர் வச்சதுனாலயே, எனக்கும் சினிமா ஆர்வம் சின்ன வயசுலயே தொடங்கிடுச்சு. சினிமாவில் சாதிக்கணும், ஆனா என்ன பண்ணனும்னு தெரியலை. ஃபைட்டரா போய்டலாம்னு நினைச்சேன்.  அதுக்காவே கராத்தே படிச்சேன். ஆனா சண்டைப் போடுறது அவ்வளவு சுலபமில்லை. உடனே சினிமாவுக்கு டப்பிங் கார்டு எடுத்துட்டு சின்னச் சின்னப் படங்களுக்கு, சீரியலுக்கெல்லாம் டப்பிங் பண்ண ஆரம்பிச்சேன். ‘இரும்புக்குதிரை’, ‘எமன்’ உள்ளிட்ட பல படங்களில் கேரக்டர் ரோல் நடிக்க ஆரம்பிச்சேன். கடைசியாதான் ‘டோரா’ படத்தில் வில்லன். 

‘களவாணி’ படத்தில் இயக்குநர் சற்குணத்திடம் அசோசியேட் இயக்குநராக தாஸ்ராமசாமி வேலை செய்துட்டு இருக்கும் போதே எனக்கு நல்ல நண்பர். தாஸ் படம் பண்ணா நிச்சயம் எனக்கு ரோல் இருக்கும்னு எனக்குத் தெரியும். ஆனா ‘டோரா’ ஸ்டார்ட் பண்ணும் போது எனக்கு ரோல் இல்லைன்னு சொல்லிட்டார். செம ஷாக்கிங் எனக்கு. வடநாட்டு பையன் மாதிரி இருக்கணும். உன் முகத்துல தமிழ் மண்ணு தான் இருக்குன்னு சொல்லிட்டார். நானே அந்த கேரக்டருக்கு நிறைய பேரை சிபாரிசு பண்ணேன். கடைசியா நானே வடநாட்டு பையன் மாதிரி கெட்டப் போட்டு போய் இயக்குநர் தாஸ்ராமசாமி முன்னாடி நின்னேன். அவரே ஷாக் ஆகிட்டார். அப்படி அமைந்தது தான் டோராவில் வில்லன் வாய்ப்பு. 

நயன்தாரா நடிப்புன்னா அவ்வளவு கவனமா இருப்பாங்க. ரொம்ப ஜாலி டைப். ரொம்ப அன்பா பேசுவாங்க. ஆனா ஷூட்டிங் நேரத்தில் மட்டும் ரொம்ப சீரியஸ். ‘டோரா’வில் என்னை கொல்லுற சீன்ல, கண்ணாடி சில் என் கழுத்துல குத்திடுச்சு. ரொம்ப ஃபீல் பண்ணாங்க. அவங்களை மாதிரி அவங்களால மட்டும் தான் நடிக்கவே முடியும். க்ரேட் வுமன் நயன்!  

டோரா படம் எனக்கு கிடைச்ச மிகப்பெரிய வாய்ப்பு. இந்தப் படத்துனால அடுத்தடுத்து நிறைய பட வாய்ப்புகளும் வர ஆரம்பிச்சிருக்கு. இதுக்கு நடுவே டப்பிங்கும் பேசிட்டிருக்கேன். எப்படியோ சினிமாவைச் சுற்றி இயங்குறதே மகிழ்ச்சி தான்.

-முத்து பகவத்- 

அடுத்த கட்டுரைக்கு