வெளியிடப்பட்ட நேரம்: 20:51 (19/04/2017)

கடைசி தொடர்பு:21:10 (19/04/2017)

அடுத்த படத்துக்கு ஆள் தேடும் தனுஷின் அந்த ஸ்டேட்டஸ்... தகுதி என்னன்னு தெரியுமா?!

 

ஸ்டேட்டஸ்ஸ்டேட்டஸ்

 

 

 

 

 

'பிரேமம்' புகழ் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் அடுத்ததாக எடுக்கப்போற படத்துக்கு ஆட்கள் தேவைன்னு போட்ட இந்த போஸ்ட் வைரலோ வைரல் ஆகிடுச்சு. அவர் மட்டும்தான் போஸ்ட் போடணுமா என்ன? இப்போ 'பவர்பாண்டி'யில இயக்குநரா அறிமுகம் ஆகிருக்குற தனுஷ் அடுத்த படத்துக்கு ஆள் தேடுனா எப்படி இருக்குமுன்னு சும்மா ஒரு திங்கிங் கேம் மக்களே. அதுதான் இது.

 


 

ஸ்டேட்டஸ்

பாய்ஸ் அண்ட் கேர்ள்ஸ் ஐயாம் டைரக்ட் தி நெக்ஸ்ட் மூவி

அந்தக்கதை புதுசா இருக்கா இல்லை பழசா இருக்கான்னு படத்தைப் பார்த்துட்டு நீங்கதான் சொல்லணும்.
சில ஆட்கள் படத்துக்காக தேவைப்படுகிறார்கள். தகுதிகள் இருக்குறவங்க அப்ளை பண்ணலாம் தகுதி இருக்கிறவங்ககிட்ட மேட்டரை சப்ளை பண்ணலாம்.

1.மியூசிக் டைரக்டர்கள் தேவை:
ஆடியன்ஸுக்கு புரியாத மாதிரி மியூசிக் போடுற ஆளா இருந்தா சந்தோசம். ஏன்னா இப்ப அதுதான் ட்ரெண்ட். பெயர் கொடுக்க விரும்புகிற மியூசிக் டைரக்டர்கள் பிரைவஸி மெயின்டன் பண்ணனும். ஏன்னா இப்ப மிஸ்டர் எக்ஸ்தான் ட்ரெண்ட். Y னுலாம் கேள்வி கேட்கக்கூடாது. ஏன்னா இதுதான் ட்ரெண்ட் .


வயசு:  25 வயசுல இருந்து 30வயசுக்குள்ளேயோ 30வயசுல இருந்து 25 வயசுக்குள்ளேயோ இருந்தா டபுள் சந்தோசம். யூடியூப்பில் அதிகமாக உலாவுற ஆளாக இருக்கணும்.

2.உதவி இயக்குநர்கள் தேவை :
அடுத்ததா அஸிஸ்டென்ட் டைரக்டர்கள் மேட்டருக்கு வர்றேன். அஸிஸ்டென்ட் டைரக்டர்கள் அதிகமாக தேவைப்படுகிறார்கள் அது படத்துக்கு; ஆனா இந்தப்படத்துக்கு ரெண்டு அல்லது மூணுபேர் இருந்தாவே போதும்கிறதால ரெண்டு அல்லது மூணு பேர் இருந்தாலே போதும்.


முக்கியமான விசயம் இன்ஜினியரிங் படிச்சி முடிச்சிட்டு வேலை கிடைக்காமல் இருக்குறவங்களுக்கு அஸிஸ்டெண்ட் டைரக்டரா முன்னுரிமை கொடுக்கப்படும். அரியரே  கம்ப்ளீட் பண்ணாம வச்சிருக்கவங்களுக்கு முன்னுரிமையில் முன்னுரிமை கொடுக்கப்படும்.

3.ஹீரோயின் தேவை:

ரெண்டாவது படத்துக்கு மூணாவதா தேவைப்படுறது ஹீரோயின்தான். ஹீரோயின் புதுமுகமாக இருக்கணும். கெட்டப் சேஞ்ச் ஓவர் பண்ணி நடிக்கத்தெரியணும். சைல்ட்வுட் கேரக்டர்ல ஹீரோவோட ரோல்ல ஹீரோயினே ஹீரோவாக மாறி நடிக்கத்தெரியணும். ஆனால் நடிக்கத்தெரியாத பொண்ணாக இருந்தால் பெட்டர், ஏன்னா இப்ப அதுதான் ட்ரெண்ட்.


#Note மியூசிக் பிட்டை கூகுள்ட்ரைவ்ல  அனுப்புனா மட்டும் அது புதுசுன்னு நம்பமாட்டோம். ஏன்னா நாங்களும் சினிமாவுல தான் இருக்கோம். யூடியூப்ல கோல்டு விருதுலாம் வேற வாங்கிருக்கோம். காப்பிகேட் சாங்க்லாம் எதுன்னு எங்களுக்கு நல்லாவே தெரியும். அதனால பாத்துப்பண்ணுங்க.
mail id:  இதுதான் 2vadhupadathukuaaluthe2kintrom@dhanush.com .

இந்த லெட்டரை தங்க்லீஷுல எழுதுறவங்களுக்கு படத்துல சப்டைட்டில் வொர்க் கொடுக்கப்படும்னு எதிர்பார்க்கலாம். ஆனா கொடுக்கப்படுமான்னு அப்புறம்தான் முடிவு செய்யப்படும்.


ஜெ.வி.பிரவீன்குமார்