Published:Updated:

''விஜய் என்கூட போட்டோ எடுத்துக்க ஆசைப்பட்டார்!"- 'ப.பாண்டி' ரின்ஸன்

தார்மிக் லீ
''விஜய் என்கூட போட்டோ எடுத்துக்க ஆசைப்பட்டார்!"- 'ப.பாண்டி' ரின்ஸன்
''விஜய் என்கூட போட்டோ எடுத்துக்க ஆசைப்பட்டார்!"- 'ப.பாண்டி' ரின்ஸன்

''விஜய் என்கூட போட்டோ எடுத்துக்க ஆசைப்பட்டார்!"- 'ப.பாண்டி' ரின்ஸன்

'பவர் பாண்டி' படத்தில் கதை சீரியஸா போகும்போது ஆங்காங்கே வந்து ராஜ்கிரணைக் கலாய்த்து ஜாலியாக கவுன்டர்களைக் கொடுத்த மில்லிமீட்டர் ரின்ஸனிடம் ஒரு ஜாலி பேட்டி! 

''மில்லிமீட்டர் டு சென்டிமீட்டர் சேஞ்ச்-ஓவர் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்க பாஸ்?''

"பேட்டி கொடுக்குறது எக்ஸாம்க்கு முதல் பெஞ்ச்ல உட்கார்ந்து எழுதுற மாதிரி இருக்கு" என சிரித்துக்கொண்டே பேசத் தொடங்கினார் 'மில்லிமீட்டர்'.  

''நான் ப்ளஸ் 2 வரைக்கும்தான் படிச்சேன். அதுவுமே காப்பியடிச்சுதான் ப்ரோ பாஸ் ஆனேன். ஒரு கஷ்டத்துனாலதான் மீடியாவுக்கு உள்ளே வந்தேன். ஜெயா டி.வில 'லிட்டில் மாஸ்டர்'னு ஒரு ப்ரோகிராம்ல கலந்துகிட்டேன். அதுல டைட்டில் வின் பண்ணினா அஞ்சு லட்சம் பரிசுனு சொன்னாங்க. அப்போ வீட்டுக்கும் காசு தேவைப்பட்டதால் கலந்துக்கிட்டேன். சின்ன வயசுல கோவில் திருவிழா, சாவு இது மாதிரி இடங்கள்லதான் ஆடியிருக்கேன். நம்ம ஏன் டி.வி ஷோல நடக்குற போட்டியில் கலந்துக்கக் கூடாதுனுதான் அப்பாகிட்ட சொல்லி அந்த ஷோவுல கலந்துக்கிட்டேன். ஆரம்பத்துல எனக்கு டான்ஸ் சொல்லிக் கொடுக்க யாருமே இல்ல. அப்புறம் தட்டுத் தடுமாறி ஃபைனல்ஸ் போனதுக்கு அப்புறம்தான் எனக்கு ஒரு மாஸ்டர் போட்டாங்க. கடைசில ஃபைனல்ஸும் ஜெயிச்சிட்டேன். வின் பண்ணினா காசு வரும்னு பார்த்தா அந்த அஞ்சு லட்சத்துக்குமே பொருளாவே கொடுத்துட்டாங்க. பிறகு, காசு கையில வராததும் எனக்குப் பெருசா தெரியல. எல்லாரும் கை தட்டிப் பாராட்டினது, ஸ்டேஜ்ல பெர்ஃபார்ம் பண்ணினதால மீடியா மேல எனக்கு ஆசை வந்திடுச்சு. 'சிம்பு' அண்ணா நடுவரா இருந்தப்போ 'ஜோடி நம்பர்-1'ல 'பப்ளூ' கூட ஆடுனேன். அதைப் பார்த்துட்டு ஒரு நாள் 'சிம்பு' அண்ணா எனக்கு போன் பண்ணி 'என்னோட படத்துல நீ ஆடனும்'னு சொன்னார். மொதல்ல நான் நம்பவே இல்ல. எனக்கு என்ன பேசுறதுன்னே தெரியல. அப்புறம்தான் 'காளை' படத்துல ஒரு பாட்டுல அவர்கூட ஆடுனேன். அதைப் பார்த்துட்டு நெல்சன் அண்ணா மூலமா விஜய் டி.வி 'பாய்ஸ் vs கேர்ள்ஸ்' பெர்ஃபார்ம் பண்ற வாய்ப்பு வந்தது. அங்க போனதுக்கு அப்புறம்தான் 'சிவா' அண்ணா கூட ஒரு நல்ல பழக்கம் ஏற்பட்டுச்சு. சினிமா வாய்ப்புகளும் நிறைய வந்துச்சு. சம்பாதிச்சு அக்காவுக்குக் கல்யாணம் பண்ணினதுதான் என்னோட வாழ்க்கையில் நான்  பண்ணின உருப்படியான விஷயம். 

''நண்பன் பட அனுபவம்..?''

''எந்திரன் பட ஆடிஷனுக்குப் போயிருந்தேன். படத்தோட கடைசியில் ஒரு பொண்ணு பண்ணின ரோல் நான்தான் பண்ண வேண்டியது. ஆனா அதுக்கு அப்புறம் அந்த சீன்ல பொண்ணுதான் வேணும்னு சொல்லிட்டாங்க. அது முடிச்சுட்டு 'நண்பன்' பட ஆடிஷனுக்குப் போயிருந்தேன். அதுல அட்லீ அண்ணா மூலமா அந்தப் படத்துல நடிக்கிற வாய்ப்புக் கிடைச்சது. ஷூட்டிங்ல எவ்வளவு டேக் போனாலும் 'ஷங்கர்' சார் என்னோட தோள் மேல கை போட்டு 'கூலா பண்ணு... ஒண்ணும் பிரச்னை இல்லை'ன்னு சாதாரணமா எடுத்துச் சொன்னார். அப்புறம், விஜய் அண்ணா செம கேரக்டர் அவருக்கும் என்னை ரொம்பப் பிடிக்கும் அவரோட ஃபேமிலிக்கும் ரொம்பப் பிடிக்கும். அவர் பிறந்தநாள் அன்னிக்கு ஒரு வருஷம் கூட மிஸ் பண்ணாம எல்லா தடவையும் விஷ் பண்ணுவேன். அவரும் 'தாங்க்ஸ் மில்லிமீட்டர்'னுதான் சொல்லுவார். எப்போ பேசுனாலும் அதையே சொல்லித்தான் என்னைக் கூப்பிடுவார். ஷங்கர் சாரும் அப்படிச் சொல்லித்தான் கூப்பிடுவார். நான் யார் கூட சேர்ந்தும் போட்டோ எடுக்க மாட்டேன். நான் பெரிய ஆளா வந்ததுக்கு அப்புறம்  என்னோட சேர்ந்து எடுத்துக்கட்டும்ங்கிறதுதான் என்னோட கொள்கை. இதை ஷங்கர் சார்கிட்ட சொல்லியிருக்கேன். ஷூட்டிங் முடிச்சிட்டு விஜய் அண்ணா கூட எல்லாரும் போட்டோ எடுத்துக்குவாங்க. அதை நான்தான் எடுப்பேன். 'இவன் மட்டும் என்ன நம்ம கூட போட்டோவே எடுக்க மாட்றான்'னு விஜய் அண்ணாவே என்கிட்ட வந்து கேட்டார். பக்கத்துல இருக்க ஷங்கர் சார் இதான் காரணம்னு உண்மையைச் சொல்லிட்டார். என்கிட்டே வந்து 'எனக்கு இப்போ உன்னோட ஒரு போட்டோ எடுத்துக்கணும்... எடுக்கலாமா?'னு கேட்டார். என்னோட லைஃப்லேயே மறக்க முடியாத விஷயம்னா இதுதான். ரிலீஸுக்கு அப்புறம் எனக்கு ஒரு அடையாளமா அந்த படம் இருந்துச்சு.''     

'' 'பவர் பாண்டி' படத்துல ராஜ்கிரணை 'போய்யா... வாய்யா'னு எப்படி பயப்படாம டீல் பண்ணியிருக்கீங்களே..?"

"யாரு பயப்படாம பேசுனது... நானா?"னு கேட்டு அந்த அனுபவங்களைச் சொல்ல ஆரம்பித்தார்.

''பவர் பாண்டி படமே நான் பண்ண வேணாம்னுதான் மொதல்ல நினைச்சேன். ஒரு நாள் எனக்கு ஒரு போன் வந்தது. 'தம்பி... நான் தனுஷ் பேசுறேன்'னு சொன்னாங்க. யாரோ விளையாடுறாங்கனு பதிலுக்கு 'அப்டியா நான் சிம்பு பேசுறேன்'னு சொல்லி கலாய்ச்சிட்டு போனை கட் பண்ணிட்டேன். அப்பறம் இன்னொரு கால் வந்துச்சு. 'தம்பி பவர் பாண்டி படத்துக்கு இது மாதிரி ஆடிஷன் இருக்கு... வா'னு சொன்னாங்க. உடனே  தனுஷ் அண்ணாவுக்கு கால் பண்ணி 'சாரி சார் நான் கண்டிப்பா வரேன்'னு சொன்னேன். அங்க ஆடிஷன்ல ஒரு டயலாக் சொல்லச் சொன்னாங்க 'மாஸ்டர் நீ உன்னோட பையன் வாழ்க்கையையும், உன் பேரப் புள்ளைங்க வாழ்க்கையை மட்டும்தான் வாழ்றியே தவிர உன் வாழ்க்கையை வாழ மாட்ற'னு வரும். அதை பீர் குடிச்சிக்கிட்டே சொல்லணும்னு சொன்னாங்க. எனக்கு அது ஒரு பக்கம் பயமா இருந்தாலும் அவரை எப்படி 'வா... போ...'னு பேச முடியும்ங்கிற பயம்தான் பெருசா இருந்துச்சு. எப்படியும் செலக்ட் ஆக மாட்டேன் சும்மா பண்ணி விடுவோம்னு பண்ணேன். பார்த்தா அந்த ரோல் எனக்கே வந்திடுச்சு. ஷூட்டிங் ஸ்பாட் வந்த அப்புறம்தான் படம் முழுக்க நான் அவரை வாய்யா போய்யா, யோவ் மாஸ்டர்னு எல்லாம் கூப்பிடுற மாதிரி டயலாக் இருந்ததைப் பார்த்துட்டு எனக்கு பதட்டம் ஆகிடுச்சு. நான் ஒரு கட்டத்துக்கு மேல 'ராஜ்கிரண்' சார் கிட்டே சொல்லிட்டேன். 'சார் என்ன மன்னிச்சிருங்க இப்படியெல்லாம் பேசுறதுக்கு'னு சொன்னேன். அதுக்கு அவர் ரொம்ப சிம்பிளா 'இதான்யா நடிப்பு இதுல என்ன இருக்கு'னு ரொம்ப அன்பா சொன்னார். அப்புறம் ஷூட்டிங் போகப் போக எனக்கு அவர் உண்மையிலேயே ஃப்ரெண்ட் ஆகிட்டார். பெரிய டயலாக் பேச வராத டைம்ல 'தனுஷ் ஒரு டூ மினிட்ஸ் ரெஸ்ட்'னு சொல்லி என்னைக் காப்பாற்றினார் ராஜ்கிரண் சார். அவர்கூட நடிச்சது ரொம்பவே வித்தியாசமான அனுபவமா இருந்துச்சு. இவ்வளவு சிம்பிளான ஒரு மனிதரை நான் பார்த்ததே இல்ல.''  

''ஆக்டர் தனுஷ் டு டைரக்டர் தனுஷ் எப்படி?''

''தனுஷ் அண்ணனை ஒரு நடிகரா பார்த்திருக்கேன். டைரக்டர் தனுஷ் அண்ணன் டோட்டலா வேற மாதிரி. எந்த சீன் எடுத்தாலும் அந்தப் படத்துல நடிக்கிற சின்னக் குழந்தைக்குக்கூட மொதல்ல அவர் நடிச்சுக் காட்டிட்டு அப்புறம்தான் டேக் போவார். எந்த சீன் பண்ணாலும் ஒரே டேக்ல 'ஓகே ரின்ஸன்'னு சொல்லிடுவார். எனக்கு டவுட்டா இருக்கும்... நாம உண்மையிலேயே நல்லாதான் பண்றோமான்னு. அப்புறம் படம் ரிலீஸ் ஆகி மூணு நாள் நான் படம் பார்க்கவே இல்லை. அப்புறம் தனுஷ் அண்ணா எனக்கு போன் பண்ணி படம் பார்க்க வரச் சொன்னார். என்னைப் பார்த்ததும் கட்டிப்பிடிச்சு முத்தம் கொடுத்து 'சூப்பரா பண்ணியிருக்க ரின்ஸன்'னு சொன்னார். நான் பயந்துக்கிட்டே 'ரெஸ்பான்ஸ் எப்படி அண்ணா இருக்கு'னு கேட்டேன். 'தியேட்டரே நீ வந்த சீனுக்கு க்ளாப் பண்ணிச்சு... படம் ஃபுல்லா எமோஷனா போய்கிட்டு இருந்தப்போ நீ வந்ததும் ஆடியன்ஸ்கிட்ட சிரிப்பு தெரியுது'னு சொன்னார்.''  

''எதிர்கால ஆசைகள்?'' 

''நண்பன் படம் முடிச்ச அப்புறம் எனக்கு டைரக்‌ஷன் பண்ணனும்னு ஆசை இருந்துச்சு. ஆனா என்னை நம்பியெல்லாம் யார் தயாரிப்பானு நினைச்சு அந்த ஆசையை விட்டுட்டேன். அப்புறம் 'துருவங்கள் பதினாறு' கார்த்தி, '8 தோட்டாக்கள்' ஶ்ரீ கணேஷ் இவங்களையெல்லாம் பார்க்கும்போது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. கண்டிப்பா எனக்குப் படம் டைரக்ட் பண்ணலாம்னு தோணுது. அதே மாதிரி நல்ல ஸ்க்ரிப்ட் இருந்தா மட்டும்தான் நடிக்கவும் செய்வேன். என்னோட பெர்ஃபார்மென்ஸ் பார்த்துட்டு தனுஷ் அண்ணா உன்னை வெச்சுப் படம் எடுக்கணும்னு சொன்னார். அது சீக்கரமே நடக்கணும்னு ஆசை இருக்கு. 

அவ்வளவுதான்.''  எனச் சொல்லி முடித்தார் 'மில்லிமீட்டர்' ரின்ஸன்.

- தார்மிக் லீ 

அடுத்த கட்டுரைக்கு