Published:Updated:

மகன் சண்முகப்பாண்டியனின் ‘மதுர வீரன்’ படப்பிடிப்பைத் தொடங்கிவைத்தார் விஜயகாந்த்!

மகன் சண்முகப்பாண்டியனின் ‘மதுர வீரன்’ படப்பிடிப்பைத் தொடங்கிவைத்தார் விஜயகாந்த்!
மகன் சண்முகப்பாண்டியனின் ‘மதுர வீரன்’ படப்பிடிப்பைத் தொடங்கிவைத்தார் விஜயகாந்த்!

நடிகரும், தே.மு.தி.க கட்சித் தலைவருமான விஜயகாந்ந்தின் மகன் சண்முகப்பாண்டியன் நடிக்கும் ‘மதுர வீரன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்குகிறது.

மகன் சண்முகப்பாண்டியனின் ‘மதுர வீரன்’ படப்பிடிப்பைத் தொடங்கிவைத்தார் விஜயகாந்த்!

'சகாப்தம்' படத்தின்மூலம் சினிமாவில் அறிமுகமானவர், விஜயகாந்தின் இரண்டாவது மகன் சண்முகபாண்டியன். முதல் படம் எதிர்பார்த்த அளவு வெற்றிபெறவில்லை. தற்போது, சண்முகபாண்டியனின் அடுத்த படத்துக்கான வேலைகள் ஆரம்பித்துள்ளன. 

’வி ஸ்டூடியோஸ்’ மற்றும் ’பிஜி மீடியா வொர்க்ஸ்’ தயாரிப்பில் சண்முகபாண்டியன் நடிக்கும் 'மதுரவீரன்' படத்தின் துவக்கவிழா இன்று நடைபெற்றது. விஜயகாந்த் முன்னிலையில், பிரேமலதா விஜயகாந்த் கேமராவை ஆன்செய்ய, படப்பிடிப்பு துவங்கியது.

மகன் சண்முகப்பாண்டியனின் ‘மதுர வீரன்’ படப்பிடிப்பைத் தொடங்கிவைத்தார் விஜயகாந்த்!

தொடர்ந்து 15 நாள்கள், சென்னையில் படப்பிடிப்பு நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜி சுப்பிரமணியம் தயாரிக்க, பி.ஜி.முத்தையா இந்தப் படத்தை ஒளிப்பதிவுசெய்து, இயக்குகிறார். கதாநாயகனாக சண்முகப்பாண்டியன் நடிக்க, திரைப்படத்தின் கதாநாயகி யார் என்று இன்னும் முடிவு செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

சென்னையில் இன்று நடைபெற்ற துவக்க விழாவில், எல்.கே.சுதீஷ் மற்றும் இந்தப் படத்தில் நடிக்கும் சமுத்திரக்கனி, பால சரவணன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.