Published:Updated:

''திரிஷா, தமன்னாவுக்காக கொஞ்சிப் பேசுறது நான்தான்!’’ மானஸி

''திரிஷா, தமன்னாவுக்காக கொஞ்சிப் பேசுறது நான்தான்!’’ மானஸி
News
''திரிஷா, தமன்னாவுக்காக கொஞ்சிப் பேசுறது நான்தான்!’’ மானஸி

''திரிஷா, தமன்னாவுக்காக கொஞ்சிப் பேசுறது நான்தான்!’’ மானஸி

'' 'நீ நிதானமா இல்லை. உன் கால் தரையில படல. முதல்ல வந்து நில்லு. அப்புறமா வந்து சொல்லு' அஞ்சான் படத்துல சமந்தாவுக்கு நான் பேசின இந்த டயலாக்கை, எனக்கு தெரிஞ்ச நிறையப் பேரு அடிக்கடி பேசிக்காட்டச் சொல்லிட்டே இருப்பாங்க. இந்த ஒரு படத்துக்குதான் சமந்தாவுக்கு டப்பிங் கொடுத்தேன். ஆனா, 'நீங்கதானே சமந்தாவுக்கு ரெகுலரா டப்பிங் கொடுக்கிறீங்க'னு கேட்குற அளவுக்கு எல்லோரின் மனசுலேயும் இந்த டயலாக் பதிஞ்சிருச்சு. ஆனா என்னோட மெயின் கரியர் பாட்டுப்பாடுறதுதான்" எனும் மானஸியின் குரல் அத்தனை இனிமையாக இருக்கிறது.   

" 'வனமகன்' ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிற 50-வது படம்.  நான் அதுல 'டான் டான்'னு ஒரு பாட்டு பாடியிருக்கேன். சில தினங்களுக்கு முன்னாடி ரிலீஸ் ஆன இந்த பாட்டு இப்போ ரொம்பவே ஹிட் ஆகியிருக்குது. இன்னைக்கு ஜீவா ஹீரோவா நடிக்குற சங்கிலி புங்கிலி கதவத்தொற'' படத்துல 'குக்குறக்கூ'ங்கிற ஒரு பாட்டை நானும், நடிகர் சிலம்பரசனும் சேர்ந்து டூயட் பாடியிருக்கிறோம். அடுத்தடுத்து ரிலீஸ்க்கு நிறையப் படங்கள் வெயிட்டிங்ல இருக்கு.  இதனால தொடர்ச்சியான வெற்றிப் பாடல்கள் பாடுறது, வெற்றிப் படங்களுக்கு டப்பிங் கொடுக்குறதுன்னு கரியர் ரொம்பவே சந்தோஷமா போயிட்டு இருக்கு. 

குறிப்பா ஒரு பாடகியாகணும்னு லட்சியத்தோட சன் டிவி 'அதிரடி சிங்கர்' நிகழ்ச்சியில கலந்துகிட்டு, டைட்டில் வின்னர் ஆனேன். தொடர்ந்து எனக்கான ஒரு இடத்தை தக்கவெச்சுக்க, என்னோட ஆசைக்கு உயிர்கொடுக்க நிறையவே கஷ்டப்பட்டேன். அதுக்காக மும்பையில இருந்து கடந்த நாலு வருஷத்துக்கு முன்னாடி சென்னைக்கே வந்து செட்டில் ஆகிட்டேன்.

தொடர்ந்து நிறைய சிங்கிள்ஸ், டிராக் பாடிட்டு இருந்தேன். அப்படியே கொஞ்சம் கொஞ்சமா என்னைப் பத்தி பலருக்கும் தெரிய ஆரம்பிச்சுது. ஆரம்பம் படத்துல 'ஸ்டைலிஸ் தமிழச்சி', காக்கிச்சட்டை படத்துல 'கட்டிக்கிட', தாரை தப்பட்டை 'ஆட்டுக்காரி மாமன் பொண்ணு', வாலு படத்துல 'எங்கதான் பொறந்த'னு பல ஹிட் சாங்க்ஸ் என் லிஸ்ட்ல இருக்கு" என்பவர் டப்பிங் ஆர்டிஸ்ட் ஆன கதையைக் கூறுகிறார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

'''நிர்ணயம்' படத்துக்கு பாட்டுப் பாட யோயிருந்தேன். அப்போ என் வாய்ஸைக் கேட்ட டைரக்டர் சரவணன், 'உங்க வாய்ஸ் ரொம்ப நல்லாயிருக்கு. ஹிரோயினுக்கு டப்பிங் கொடுக்கறீங்களா'ன்னு கேட்டாரு. சும்மா தமாசுக்கு சொல்றார்னு நினைச்சேன். ஒருவாரத்துல நிஜமாவே டப்பிங் கொடுக்கக் கூப்பிட்டாரு. அப்படித்தான் நான் டப்பிங் ஆர்டிஸ்டாவும் ஆனேன். நான் டப்பிங் பேசின 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பால குமாரா' படம்தான் முதல்ல ரிலீஸ் ஆச்சு. ஆனா 'அஞ்சான்' கொடுத்த ரீச் ரொம்பவே பெருசு. சமந்தா கூட, 'எனக்கு உங்க வாய்ஸ் ரொம்பவே நல்லா செட் ஆகியிருக்குது'ன்னு சொன்னாங்க. அந்த படம் ரிலீஸ் ஆன சமயத்துல லிங்குசாமி சாரும் போன் பண்ணி, 'இனி நீங்கதான் சமந்தாவுக்கு வாய்ஸ் கொடுக்கணும்'னு பாராட்டினார். 

தொடர்ந்து தமிழ் 'பாகுபலி'யில தமன்னாவுக்கு டப்பிங் கொடுத்தேன். அதுக்குப் பிறகு 'பாகுபலி 2' தவிர 'தோழா', 'கத்தி சண்டை', 'தர்மதுரை'ன்னு தமன்னா நடிக்குற எல்லா படத்துக்கும், விளம்பரப் படங்களுக்கும் நான்தான் டப்பிங் கொடுத்துகிட்டு இருக்கேன். அதேப்போலதான் 'கொடி'யில இருந்து, த்ரிஷா நடிக்கும் எல்லா படத்துக்கும் அவங்களுக்கு டப்பிங் கொடுத்துகிட்டு இருக்கேன். இப்போ சமீபத்துல 'மாநகரம்' படத்துல ரெஜினாவுக்கும், 'குற்றம் 23' படத்துல மஹிமா நம்பியாருக்கும் டப்பிங் கொடுத்தேன். அடுத்து மோகினி, சதுரங்க வேட்டை, நெஞ்சம் மறப்பதில்லைன்னு ரிலீஸ் படங்கள் தயாராகிட்டு இருக்கு.  சிங்கிங், டப்பிங்னு  என்னோட ரெண்டு கண்ணு மாதிரியான வொர்க்கும் ரொம்பவே பிடிச்சிருக்குது. ரெண்டுமே சூப்பராவும் வருது. அதனால உற்சாகமா ஒவ்வொரு படத்துலயும் வொர்க் பண்ணிட்டு இருக்கேன் எனச்  சிரிப்பவரிடம், உங்களுக்கு நடிப்பு வாய்ப்புகளும் வந்திருக்காமேன்னு கேட்டதும் மீண்டும் சிரிக்கிறார்.

"நீங்க பார்க்க சின்ன தம்பி படத்துல வர்ற குஷ்பூ மாதிரியே இருக்கீங்கன்னு நிறையப் பேரு சொல்லுவாங்க. அப்படியா? சந்தோஷங்கன்னு நானும் அமைதியா போயிருவேன். அதுமாதிரியே எனக்கு நடிக்குற வாய்ப்பும் பல முறை வந்திருக்குது. ஆனா எனக்கு அந்த நடிக்குறதுல அவ்வளவா விருப்பம் இல்லை. அதனால எனக்குப் பிடிச்ச சிங்கிங், டப்பிங்ல கூடுதல் கவனம் செலுத்திகிட்டு இருக்கேன்" என்று மெல்லிய குரலில் புன்னகைக்கிறார் மானஸி.

- கு.ஆனந்தராஜ்