Published:Updated:

'என் மாமியாரின் அந்த ஒரு கண்டிஷன்!' - கிடுகிடு அஞ்சனா

'என் மாமியாரின் அந்த ஒரு  கண்டிஷன்!' - கிடுகிடு அஞ்சனா
'என் மாமியாரின் அந்த ஒரு கண்டிஷன்!' - கிடுகிடு அஞ்சனா

'என் மாமியாரின் அந்த ஒரு கண்டிஷன்!' - கிடுகிடு அஞ்சனா

'சன் மியூசிக்' தொகுப்பாளினி அஞ்சனா என்றால் தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. கடந்த பல வருடங்களாக பலரின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்தவர். கடந்த வருடம் 'கயல்' நாயகன் சந்திரனை காதல் திருமணம் செய்து கொண்டார். அவருடைய ஒரு வருட பர்சனல் பக்கத்தைப் பற்றி கேட்டோம்,

'சந்திரன் வீட்டார் எப்படி?'

''நிஜமாகச் சொல்லணும்னா என்னோட அம்மா லதாகிட்டகூட சில விஷயங்களை சொல்லப் பயப்படுவேன். ஆனால், என்னோட மாமியார் உஷாம்மாகிட்ட தாராளமா நிறைய விஷயங்கள் பேசலாம். கேட்கலாம். அந்த அளவுக்கு சுதந்திரம் கொடுத்திருக்காங்க. ஒவ்வொரு குடும்பத்துக்கும் இருக்கக்கூடிய கலாசாரத்தை நானும் அந்த வீட்டில் உள்ள ஒருத்திங்கிறதால கடைபிடிக்கிறேன். கல்யாணத்துப் பிறகு பெரிய மாற்றம் எல்லாம் இல்ல. யாரும் அவங்களுக்காக என்னை மாற்றி கொள்ளவும் சொல்லல. என் மாமியாரோட ஒரே ஒரு கண்டிஷனை மட்டும் எப்பவும் தவறாமப் ஃபாலோ பண்ணுவேன்''

'அப்படியா.. அது என்ன புது கண்டிஷன்?'

''இன்றைக்கு இருக்கும் மார்டன் உலகத்துல நிறைய மாறிட்டு வருது. நிறைய பெண்கள் திருமணத்துக்கு பின்னாடி தாலி அணியாம இருக்காங்க. ஆனா, எங்க குடும்ப வழக்கம் அந்த விஷயத்துல ரொம்பவே கண்டிப்பா இருப்பாங்க. நான் கல்யாணம் பண்ணின பிறகு என்னோட மாமியார் சொன்ன ஒரு விஷயம், 'எந்த காரணத்துக்காவும் தாலியை மட்டும் கழற்றிடக் கூடாது. அது நம்ம குடும்பத்தோட கலாசாரம்'னு சொன்னாங்க. அதே மாதிரி திருமணத்தப்போ போட்டிருந்த தாலி சில சம்பிரதாய அம்சங்களோட பெருசா இருக்கும். நான் சில இடங்களுக்கு நிகழ்ச்சிக்காகப் போறதால எனக்குனு மெல்லிசான தாலியை செய்து கொடுத்திருக்காங்க. இப்பவும் நேரலை நிகழ்ச்சிகள்ள தாலிக் கொடியை பின் பண்ணிட்டுத்தான் ஷோ பண்றேன்''.

'திருமணத்துக்குப்  பிறகு நடிப்பதற்கான வாய்ப்பு எதும் வந்ததா?'

''வந்தாலும் எனக்கு நடிக்கிற ஆசை எல்லாம் இல்ல. எனக்கு நிகழ்ச்சித் தொகுப்பாளினியா இருக்கிற இந்த ஃபீல்டுதான் பிடிச்சிருக்கு. இதுக்கே நேரமும் சரியா இருக்கு. என்னோட மாமியார், மாமனாரை நான் எப்பவும் அம்மா, அப்பானுதுதான் கூப்பிடுவேன். அதனால அப்படியே இங்கயும் சொல்றேன். வீட்ல அம்மா, அப்பா, சந்திரன் மூணு பேருமே என்னோட ஆசைகளுக்கு மதிப்புக் கொடுக்கிறவங்கதான். அதனால, எனக்கு என்ன பிடிக்குமோ அதுக்கு அனுமதி தராங்க. அதே நேரம் அது சரியா வரலனா எடுத்துச்சொல்லிப் புரிய வைப்பாங்க. அந்த அளவுக்கு எங்களுக்குள்ள நல்ல வேவ் லென்த் இருக்கு''.

'புதுசா கம்பெனி எல்லாம் தொடங்கியிருக்கீங்க போல?'

''ஓ..அதுவா...திருமணம் ஆன  உடனே ஈவென்ட் மேனேஜ்மென்ட் கம்பெனியை நானும், என்னோட அக்காவும் சேர்ந்து ஆரம்பிச்சோம். எனக்கு நேரம் கிடைக்க்கும் போது அந்த வேலையையும் பார்ப்பேன்''. 

 'இப்போ திடீர்னு நிகழ்ச்சி முழுக்க சேலையில வந்து அசத்துறீங்களே என்ன காரணம்?'

''எனக்கு இதுதான் பிடிக்கும், பிடிக்காதுனு எதுவும் இல்ல. எனக்குப் ஃபிட் ஆகுற மார்டன் டிரெஸ்ஸை இப்பவும் போட்டுட்டுத்தான் இருக்கேன். திருமணத்துக்குப் பிறகு, சேலை கட்டி ஷோ பண்ணினது, நிறைய பேருக்குப் பிடிச்சிருந்துச்சு. என்னோட மாமியாரோட கபோர்ட் ஃபுல்லா நிறைய சேலைகள் இருக்கு. 'தினமும் ஒன்னொன்னு கட்டிட்டுப் போ'னு சொல்லிட்டுத்தான் இருக்காங்க. அவங்ககிட்ட நிறைய காட்டன் சேலைகள் சூப்பரா இருக்கும். வார கடைசி நாளான வெள்ளிக்கிழமை மட்டும் கட்டாயம் சேலை கட்டணும்னு முடிவு பண்ணி வச்சிருக்கேன். நிறைய பேருக்கு நான் சேலை அணிந்து வர்றது பிடிச்சிருக்கிறதால இனிமே கட்டினா என்னனு தோணிட்டு இருக்கு. மத்தபடி பெருசா எந்தக் காரணமும் இல்ல''. 

'சந்திரனுக்கும், உங்களுக்குமான புரிதல் எப்படி?'

''எப்படிப்பட்ட கணவன், மனைவியா இருந்தாலும் சண்டைங்கிறது பொதுவானது. எங்களுக்குள்ளயும் குடுமிப்புடி சண்டை வரைக்கும் வரும். ஆனாலும், சாயந்திரமோ அல்லது அடுத்த நாளைக்குள்ளோ அது சரியாகிடும். நாங்க ப்ரண்ட்ஸா இருந்தப்போ DUDE னுதான் கூப்பிட்டுட்டு இருந்தோம். புரபோஸ் பண்ணி லவ் பண்ண ஆரம்பிச்சதுல இருந்து 'பேபி'னு கூப்பிட ஆரம்பிச்சுட்டோம். அது எப்படி வந்ததுனே தெரியல. 'அஞ்சனா'னு அவரோ 'மெளலி'னு நானோ கூப்பிட்டா கோபமா இருக்கோம்னு அர்த்தம். 'பேபி'னு கூப்பிட்டா நார்மலா இருக்கிறதா அர்த்தம்''. 

''எந்த ஒரு பிரச்னையாக இருந்தாலும் சரி, யாராக இருந்தாலும் மூன்றாவது நபர் நமக்குள்ள வந்தா கஷ்டமா இருக்கும். என்ன பிரச்னைனாலும் முதல்ல நான் அவர்கிட்டதான் சொல்லுவேன். அது நடக்கல, அவர் கேட்கலைனா அப்பா, அம்மாக்கிட்ட சொல்லுவேன். அவ்வளவுதான். மத்தபடி, பிரண்ட்ஸ்கிட்ட சொல்றது எல்லாம் எங்களுக்குள்ள எப்பவுமே இருந்ததில்ல''.

'உங்க மாமனார், மாமியார் உங்களை எப்படி கூப்பிடுறாங்க?'

''நான் திருமணத்துக்கு முன்னாடி ஐந்து மணி ஷோ பண்ணிட்டு இருந்தேன். அதைப் பார்த்த அப்பா 'அஞ்சுமணி அஞ்சனா'னு கூப்பிடுவார். இப்போ, ஆறு மணி டைம் சேன்ஞ் ஆகிடுச்சு. இருந்தாலும் 'அஞ்சுமணி அஞ்சனா'னு தான் கூப்பிடுறார். மாமியார் எப்பவும் போல என்னோட பெயர் வச்சுத்தான் கூப்பிடுவாங்க''. 

'சந்திரனுடைய படங்கள் பற்றி?'

''ரூபாய்', 'கிரஹணம்', 'திட்டம் போட்டு திருடுற கூட்டம்' மூன்றுமே ரிலீஸாகுற நிலையில இருக்கு. அடுத்து ஒரு படமும் தயாராக இருக்கு. அவர் ரொம்ப பிஸியா இருக்கார். எவ்வளவு நேரம் இருந்தாலும் போதாது போல. சில நேரத்துல அவர் பக்கத்துல இல்லாதபோது 'ஐ ரியலி மிஸ் ஹிம்'' என்றார் புன்னகையோடு.

- வே. கிருஷ்ணவேணி 

அடுத்த கட்டுரைக்கு