Published:Updated:

“15 வருஷத்துக்கு அப்புறம் சீரியல் மூலமா என்ட்ரி!” - ‘ஜெமினி’ பாடல் புகழ் ராணி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
“15 வருஷத்துக்கு அப்புறம் சீரியல் மூலமா என்ட்ரி!” - ‘ஜெமினி’ பாடல் புகழ் ராணி
“15 வருஷத்துக்கு அப்புறம் சீரியல் மூலமா என்ட்ரி!” - ‘ஜெமினி’ பாடல் புகழ் ராணி

“15 வருஷத்துக்கு அப்புறம் சீரியல் மூலமா என்ட்ரி!” - ‘ஜெமினி’ பாடல் புகழ் ராணி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

'வில்லுப்பாட்டுக்காரன்', 'நாட்டாமை', 'அவ்வை சண்முகி', 'ஜெமினி' போன்ற படங்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்த நடிகை ராணி, சன் டிவியின் 'வம்சம்' சீரியல் மூலம் சின்னதிரையிலும் களமிறங்கி கலக்கி வருகிறார். பழைய உற்சாகத்துடனும் நடிப்பின் மீதான அளவில்லா ஆர்வத்துடனும் பேசத் தொடங்கினார்.

" 'ஜெமினி' படம்தான் என்னோட கடைசித் தமிழ்ப் படம். எனக்குப் பிடிச்ச மாதிரியான கதைகள் வரலை. ஆனா, தெலுங்கில் நல்ல நல்ல கேரக்டர்கள் கிடைச்சதால், அங்கே மட்டும் நடிச்சுட்டு இருந்தேன். கல்யாணமாகி கணவர், குழந்தைகள்னு ஹைதராபாத்திலேயே செட்டில் ஆனதால், தமிழ்நாட்டுக்கும் எனக்குமான தொடர்பு குறைஞ்சுடுச்சு. அப்பா ஒரு சினிமா தயாரிப்பாளராக இருந்ததால், ஆரம்பத்தில் எனக்கான சினிமா வாய்ப்புகள் ஈஸியா வந்துச்சு. கிளாஸிக்கல் டான்ஸ்ரா, குரூப் டான்ஸரா இருந்த எனக்கு 'வில்லுப்பாட்டுக்காரன்' படத்தில் ஹீரோயின் வாய்ப்பு கிடைச்சது. முதல் படத்திலேயே அப்போ ஹிட் நடிகரா இருந்த ராமராஜன் சாரோடு ஜோடியா நடிச்சேன். அந்தப் படம் எனக்கு நல்ல பெயரைக் கொடுத்துச்சு. சினிமாதான் நம்ம உலகம்னு இந்த ஃபீல்டை உயிரா நேசிக்க ஆரம்பிச்சேன். 

தொடர்ந்து தெலுங்கு, மலையாளம், இந்தி படங்களில் நடிச்சேன். தமிழ் 'நாட்டாமை' படத்தில் நடிச்ச டீச்சர் கேரக்டரின் இந்தி ரீமேக்கிலும் நானே நடிச்சேன். அந்த டீச்சர் கேரக்டரும், 'ஜெமினி' படத்தின் 'காமினி' கேரக்டரும் கொடுத்த ரீச் அதிகம். 'ஓ போடு' பாட்டு பெரிய ஹிட்டாச்சு. அப்போதுல இருந்து இப்போ வரைக்கும் அதுமாதிரியான பாட்டுக்கு நடிக்க பல மொழிகளிலும் வாய்ப்புகள் வந்துட்டு இருக்கு. ஆனால், ஒரு பாட்டுக்கு மட்டும் டான்ஸ் ஆடுறதுல எனக்கு விருப்பம் இல்லை. அதனால், அந்த வாய்ப்புகளை தவிர்த்துட்டே இருந்தேன். குத்துப்பாட்டுக்கு மட்டும்தான் ராணி என்கிற மைண்ட்செட்டை மாற்ற ரொம்ப நாள் தேவைப்பட்டுச்சு. அதுக்குப் பிறகு நிறைய முயற்சிகள் செஞ்சும் வெரைட்டியாக கேரக்டர்கள் அமையலை. ஒருவர் இந்த கேரக்டருக்கு மட்டுதான் செட் ஆவாங்கன்னு யாரையும் முத்திரை குத்திடாதீங்க. ஒவ்வொருத்தருக்கும் தனித் திறமைகள், ஆசைகள் இருக்கும். அதுக்கான வாய்ப்பை கொடுக்கணும்'' என்கிற ராணி குரலில் மெல்லிய வருத்தம். 
 

ஆனால், தெலுங்கில் விருது வாங்கும் அளவுக்கு பல்வேறு வேடங்களில் தொடர்ந்து நடித்துக்கொண்டிருக்கிறார். ''சமீபத்தில், நானும், நடிகை ரம்யா கிருஷ்ணனும் சந்திச்சுப் பேசினோம். நாங்க ரெண்டு பேரும் ஹீரோயினா சேர்ந்து நடிச்ச காலத்தில் இருந்து நல்ல ஃப்ரெண்ட்ஸ். 'சன் டிவியின் 'வம்சம்' சீரியலில் நடிக்கிறீங்களா?'னு கேட்டாங்க. அந்த கீர்த்தி ஐபிஎஸ் கேரக்டர் பிடிச்சுப்போக, நடிக்க சம்மதிச்சேன். தமிழில் 15 வருஷங்களுக்குப் பிறகு நடிக்கிறது ரொம்பவே சந்தோஷமா இருக்குது. சினிமாவைவிடவும் இப்போ சீரியல்தான் பெரிய ரீச் கொடுக்குது. கொஞ்ச நாளிலேயே மக்கள் நம்மை கவனிக்க ஆரம்பிச்சுடறதால, எங்கே போனாலும் பாராட்டுகளா குவியுது. தொடர்ந்து தமிழ் படங்களை கவனிச்சுட்டுதான் இருக்கேன். நிறைய மாற்றங்கள், புதுப்புது முயற்சிகள் எடுக்கிறாங்க. பல படங்களில் வரும் கேரக்டர்களைப் பார்க்கும்போது நாம செஞ்சிருக்கலாமேன்னு ஆசைப்பட்டிருக்கேன். சினிமா மீதும் நடிப்பு மீதும் இன்னமும் பெரிய காதலோடுதான் இருக்கேன். என்னோட கடைசி காலம் வரைக்கும் நடிச்சுகிட்டே இருக்கணும்னு ஆசைப்படுறேன். என்னோட கணவர் பிரசாந்த், முழு ஒத்துழைப்புக் கொடுத்து ஊக்கப்படுத்துறார். அதனால், நல்ல கதையோடு சினிமா, சீரியல் வாய்ப்புகள் எது வந்தாலும் நடிப்பேன்'' என்கிறார் ராணி. 

நோட் பண்ணிக்கோங்க... தமிழ் சினிமா இயக்குநர்களே! 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு