Published:Updated:

“ஜோதிகாவுக்கு 10 வயசு குறைச்ச ரகசியம் இதுதான்!” - ‘மகளிர் மட்டும்’ பூர்ணிமா!

“ஜோதிகாவுக்கு 10 வயசு குறைச்ச ரகசியம் இதுதான்!” - ‘மகளிர் மட்டும்’ பூர்ணிமா!
“ஜோதிகாவுக்கு 10 வயசு குறைச்ச ரகசியம் இதுதான்!” - ‘மகளிர் மட்டும்’ பூர்ணிமா!

“ஜோதிகாவுக்கு 10 வயசு குறைச்ச ரகசியம் இதுதான்!” - ‘மகளிர் மட்டும்’ பூர்ணிமா!

“மகளிர் மட்டும் படம் எனக்கொரு பெரிய திருப்புமுனைன்னு சொல்லலாம். ஜோதிகா அண்ணியோட வேலை பார்க்கிறது எப்பவுமே ஜாலி அனுபவமா இருக்கும். அப்படித்தான் 'மகளிர் மட்டும் ' படமும் அமைஞ்சிருக்கு” என்கிறார் ’மகளிர் மட்டும்’  படத்தின் ஆடை வடிவமைப்பாளரான பூர்ணிமா ராமசாமி. தற்போது அமெரிக்காவில் மகளுடன் விடுமுறைக்கொண்டாட்டத்தில் இருந்தவரை வாட்ஸ்அப் அழைப்பில் பிடித்தோம். 

இவர்தான் '36 வயதினிலே' படத்தில் ஜோதிகாவை பருத்திப்புடவையில் பாந்தமாகக் காட்டியவர். ஆனால் 'மகளிர் மட்டும்' படத்தின் ஸ்டில்களில் ரிவர்ஸாக, செம யூத் அண்ட் யங் ஜோதிகாவாக மாற்றியிருப்பதைப் பற்றிப் பேசினார்.

“ஒரு உண்மைய சொல்லட்டுமா, 36 வயதினிலே படத்துக்கு, அவங்களுக்கான  டிரஸ், ஸ்டைல் எப்படிப் பண்ணலாம்னு ஐடியா பண்ணவே நிறைய நாள்கள் எடுத்துக்கிட்டோம். ஏன்னா அது ஜோதிகாவோட கம்பேக் ஃபிலிம். ஸோ எப்படி எப்படினு மண்டையைப் போட்டு உடைச்சுக்கிட்டேன். ஆனா 'மகளிர் மட்டும்' கதையைக் கேட்டதும் ஜோ அண்ணியோட ஸ்டைல் இதுதான்னு பட்டுனு மனசுக்குள்ள ஃபிளாஷ் அடிச்சது. அதை அண்ணிகூட உட்கார்ந்து பேசி நாங்க இரண்டு பேரும் சேர்ந்து டிரஸ் ஸ்டைல் இதுதான்னு பிக்ஸ் பண்ணினோம். அதுக்கு நாங்க எடுத்துக்கிட்டது ஒருநாள்தான்னா நம்புவீங்களா?!

'மகளிர் மட்டும்' படத்துல ஜோ அண்ணி பிலிம் மேக்கரா; பத்திரிகையாளரா நடிக்கிறாங்க. டைரக்டர் பிரம்மா இந்தப் படத்தோட முழுக் கதையையும் என்கிட்ட மூன்றரை மணிநேரம் சொன்னாரு. ஜோதிகா இப்படித்தான் சட்டைக்கையை மடிக்கணும், இப்படித்தான்  காலரை சரி பண்ணணும்னு ஒவ்வொரு  விஷயத்தையும் தெளிவா சொல்லிட்டாரு. காஸ்டியூம் விஷயத்தில அவ்வளவு மெனக்கெட்டவர் படத்துக்காக எவ்வளவு மெனக்கெட்டிருப்பார்னு பார்த்துக்கோங்க" என்று சிலாகிக்கிறார் பூர்ணிமா.

’மகளிர் மட்டும்’ பிரபாவதி அப்படியே 'சிநேகிதியே' படத்தில் பார்த்த ஜோதிகாவை நினைவுபடுத்துகிறாரே...’ என்று நாம் கேட்டுமுடிப்பதற்குள்,

 “அட ஆமா! இந்தப் படத்துக்காக, ஜோ அண்ணி  கொஞ்சம்  வெயிட் குறைச்சாங்க. அவங்க எப்பவுமே துறுதுறுப்பா இருப்பாங்கில்ல... அதுக்குத் தீனி போடுற கேரக்டர் இதுல! மேக்அப்கூட அதிகம்   போடல.. துறுதுறுனு ஊர் சுத்துற பொண்ணு, நிறைய மேக்அப் போட்டு நடிச்சா அது ரியாலிட்டியா இருக்காதுனு  இரண்டு பேருமே யோசிச்சோம். அதனால, இயல்பா தெரியற மாதிரி பேஸிக் மேக் போட்டுக்கிட்டாங்க. அவங்களுக்கு செலக்ட் பண்ணின டிரஸ் கலர்ஸ் எல்லாம் டார்க்தான். ஏன்னா, பிரபாவதியா அவங்க கேரக்டர் ரொம்ப தைரியமான, போல்டான  பொண்ணு! அதை  வெளிப்படுத்தற மாதிரி, கறுப்பு, சிவப்புனு  கலர்ஸ் யூஸ் பண்ணினேன். பத்துபன்னண்டு டி-ஷர்ட்கிட்ட யூஸ் பண்ணியிருப்பாங்க.

இந்தப் படத்துக்காக ஜோதிகா யூஸ் பண்ணின ஷூ எத்தனை தெரியுமா? ரெண்டே ரெண்டு ஜோடிதான்! அதுல ஒண்ணு கறுப்பு, இன்னொண்ணு நீலநிறம்! எவ்வளவு சிம்பிளா பக்கத்து வீட்டுப் பொண்ணா காட்ட முடியுமோ அந்தளவுக்கு மெனக்கெட்டேன். எதுவும் அபரிமிதமா தெரிஞ்சிடக்கூடாதுனு உறுதியா இருந்தோம்" என்பவருக்கு கிளாஸிக் ஸ்டைல் காஸ்டியூம்தான் சாய்ஸாம்

‘பொதுவா எல்லா பெண்களும் ட்ரண்டியா இருக்கணும்னு நினைப்பாங்க. பேஷன் உலகத்துல ட்ரண்டுங்கிற விஷயமே இல்ல. வரலாற்றில உள்ள விஷயத்தை திரும்பவும் நடைமுறைக்குக் கொண்டு வந்திட்டிருக்கோம். அதனால, ட்ரண்டுங்கிற வார்த்தையே தப்பு" என்கிறார் யதார்த்தமாக.

‘அப்படியே டைரக்டர் பாலா படத்துல ஜோதிகாவுக்கு நீங்க டிசைன் பண்ணியிருக்கிற காஸ்டியூம் பத்தியும் சொல்லலாமே’ என்றால், சிரித்தபடியே ''சாமீ, ஆளை விட்டிருங்க. பாலா சார் அனுமதியில்லாம மூச்'' என்றபடியே விடுமுறைக்கொண்டாட்டத்தில் ஐக்கியமானார் பூர்ணிமா.

அடுத்த கட்டுரைக்கு