வெளியிடப்பட்ட நேரம்: 15:09 (29/04/2017)

கடைசி தொடர்பு:00:38 (30/04/2017)

கட்டப்பா பாகுபலியைக் கொல்லலைன்னா, இதெல்லாம்தான் நடந்திருக்கும்..!

பாகுபலி

`கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்னாரு?'ங்கிறதுதான் கடந்த ரெண்டு வருசமா மக்கள் கேட்டுக்கிட்டு இருந்த கேள்வி. அதுக்கும் இப்போ விடை தெரிஞ்சிடுச்சு. சரி, ஒருவேளை கட்டப்பா பாகுபலியையே கொல்லாம இருந்திருந்தால் என்னவெல்லாம் நடந்திருக்கும்னு கற்பனை குதிரையை தட்டிவிடுவோமா மக்களே... 

* முதல் விஷயம், இந்தக் கட்டப்பா மட்டும் பாகுபலியைக்கொல்லாம இருந்திருந்தார்னு வைங்க, இப்போ உள்ளூர் மீடியாவுல இருந்து உலக மீடியா வரைக்கும்  `ஹேங்' ஆக்கி துவைச்சு துவம்சம் பண்ணிட்டு இருக்கிற அந்த #WKKB (why kattappa killed bahubali) ஹேஸ்டேக்கே உருவாகி இருக்காது உறவுகளே.                 

* அப்புறம் அந்தக் கட்டப்பா கேரக்டரில் வந்த சத்யராஜ் பாகுபலியைக் கொல்லாமல் இருந்திருந்தார்னா இந்த அளவு அந்த கேரக்டரும் பிரபலம் ஆகியிருக்காது. அவர் மகன் சிபிராஜும் 'கட்டப்பாவ காணோம்'னு  டைட்டில் வெச்சி அதில் ஹீரோவாகவும் நடிச்சுருக்க மாட்டார். ஏதோ அவருக்கு ஏற்றமாதிரி  'அமாவாசையைக் காணோம்', 'சின்னப்பதாஸை காணோம்', 'தகடை காணோம் தகடு தகடு 'னு  வேற டைட்டில் வெச்சி அதில் நடிச்சிட்டு இருந்திருப்பார்.                     

*அமரேந்திர பாகுபலியைக் கொல்லலைன்னா அவர் பாட்டுக்க மகிழ்மதியிலேயே  உயிரோடு இருந்திருப்பார். ரம்யாகிருஷ்ணனும் அந்த நட்ட நடு ராத்திரியிலே நட்டாத்துக்குள்ளே இறங்கி மகேந்திர பாகுபலியை ஒற்றைக் கையில் தூக்கிட்டுப் போய் குளிர்ல நின்னுருக்க மாட்டாங்க. ஆனா அப்படி ஒரு சம்பவம் நடந்ததால்தான் அவந்திகா கேரக்டரில் நடிச்ச தமன்னாவையே  பார்க்கமுடிஞ்சது. அதற்காகவே `#ஐ சப்போர்ட் பாகுபலி'னு ஹேஷ்டேக் போடுறதுக்காக  பல தமன்னாவின் ரத்தத்தின் ரத்தங்கள் காத்திருக்காங்கங்கிறது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும் பிரண்ட்ஸ்..?

* 'சாம்பார் வைப்பது எப்படி?', 'சத்யமில் டிக்கெட் புக் செய்வது எப்படி?'ன்னு மட்டுமே 'கூகுள்'ல தேடிக்கிட்டு இருந்த கோடானு கோடி மக்கள் இப்படி திபுதிபுன்னு கிளம்பி 'கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்னாரு'ன்னு டேப்லட் முதல் டேப்லட்டை முழுங்கிட்டு மொபைல்போன் வரைக்கும் தேடி, `அதிகம் பேர் தேடிய ஒரு கேள்வி'யாக ஆன்லைனில் சாதனை படைச்சிருக்க மாட்டாங்க.

நெட்டிசன்ஸ்

* கட்டப்பா அப்படி பண்ணாமல்  இருந்திருந்தார்னா அவரோட லுக்ஸ், ஹேர்ஸ்டைல்லாம்  இவ்வளவு பிரபலம் ஆகியிருக்காது. அப்புறம் தென் ஆப்ரிக்க கிரிக்கெட் வீரர்  ஹாசிம் அம்லாவையும், கட்டப்பாவையும் ஒண்ணா வெச்சு மீம்ஸ்லாம் போட்டிருக்க மாட்டாங்க இந்த நெட்டிசன்ஸ்.

WKKB

*'பாகுபலி பிகினிங்' எடுத்ததால்தான் அதில் கட்டப்பா பாகுபலியையே கொன்னாருங்கிறது வேற விஷயம். ஆனால் அவர் மட்டும் கொல்லாம இருந்திருந்தால் `பாகுபலி-2'வுக்கே கதை இல்லாமல் போயிருக்கும். அவர் பாட்டுக்கு நானியையும் சமந்தாவையும் வெச்சி  'சுதீப் ஏன் நானியைக் கொன்னாரு தெரியுமா?'ன்னு 'நான் ஈ' படத்தின் பார்ட் -2 வை எடுத்திருந்திருப்பார் யாருக்குத்தெரியும்.

* அப்புறம் 'எதுக்கு கொன்னார்?', 'ஏன்  கொன்னார்?''னு நாம ஏதோ சூட்டிங் ஸ்பாட் பக்கத்தில் சூப் கடை போட்டு பார்த்துட்டு உட்கார்ந்திருந்தது போல நம்மகிட்டேயே தேடிவந்து அந்தக்கேள்விகளைக் கேட்கிறவங்ககிட்ட இருந்து கிரேட் எஸ்கேப் ஆகியிருக்கலாம். ஹ்ம்ம்... ஆனா இந்தக் கட்டப்பா எங்கே அப்படி விட்டாரு...

* அப்புறம் ஒரு முக்கியமான விஷயம் பாஸ். கட்டப்பா பாகுபலியைக் கொல்லலைனா... 'கட்டப்பா பாகுபலியைக் கொல்லாம இருந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்'னு கான்செப்ட் பிடிச்சு  இப்படி ஒரு ஆர்டிகளையே நான் எழுதியிருக்கவும் முடியாது, அதை நீங்க படிச்சிருக்கவும் முடியாது மக்களே. ஆங்.


- ஜெ.வி.பிரவீன்குமார்
 


டிரெண்டிங் @ விகடன்