Published:Updated:

இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் 'விஸ்வரூபம் 2'

சனா
இறுதிக்கட்டப்  படப்பிடிப்பில் 'விஸ்வரூபம் 2'
இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் 'விஸ்வரூபம் 2'

கமல்ஹாசன் ஒரு படத்தில் நடிக்கிறார் என்றாலே, ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பு அதிகமாக இருக்கும், அவரே படத்தை இயக்கி நடிக்கிறார் என்றால் சொல்லவே வேண்டாம். பல தடங்கல்களைத் தாண்டி இவர் இயக்கிய 'விஸ்வரூபம்' படம்,  மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. 'விஸ்வரூபம்' படத்தின் முதல் பாகம் எடுக்கப்பட்டபோதே, இரண்டாம் பாகத்துக்கான 40 சதவிகித படப்பிடிப்பு முடிந்துவிட்டது.

இறுதிக்கட்டப்  படப்பிடிப்பில் 'விஸ்வரூபம் 2'

ஆனால், படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிசந்திரனுடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, 'விஸ்வரூபம்2' எடுப்பது தள்ளிப்போனது. இதனால், 'விஸ்வரூபம்2' படத்துக்குப் பின்பு கமல்  நடித்த 'உத்தமவில்லன்', 'பாபநாசம்', 'தூங்காவனம்' என மூன்று படங்களும் வெளிவந்து விட்டன. அடுத்து, 'சபாஷ் நாயுடு' படத்திலும் நடிக்க ஆரம்பித்துவிட்டார். இந்த நிலையில், ஒரு சிறிய விபத்தில் அவர் காலில் அடிபட்டதன் காரணமாக, 'சபாஷ் நாயுடு' படத்தில் தற்போது நடிக்க முடியவில்லை. அதனால் அவர், 'விஸ்வரூபம்-2' படத்தின் மீதமுள்ள வேலைகளைத் தானே செய்ய ஆரம்பித்துவிட்டார்.

கமல் தனது ட்விட்டர் பக்கத்தில், நேற்று மாலை 7 மணிக்கு 'விஸ்வரூபம்-2' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார். இது, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. படப்பிடிப்பு முடிய இன்னும் 10 நாள்களே இருக்கிறதாம். கூடியவிரைவில் 'விஸ்வரூபம்2' படத்தைத் திரையில் பார்க்கலாம். படத்துக்கு, ஜிப்ரான் இசையமைக்கிறார். பூஜா குமார், ஆண்ட்ரியா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.