Published:Updated:

வசூல் மன்னனான 'பாகுபலி-2'

வசூல் மன்னனான 'பாகுபலி-2'
வசூல் மன்னனான 'பாகுபலி-2'

ஒரு கேள்விக்கான பதிலைத் தெரிந்துகொள்ள ரசிகர்கள் காட்டிய ஆர்வம், 'பாகுபலி'யின் வசூலை எகிறவைத்துவிட்டது. படம் வெளியான முதல் நாளே, படத்தின் வசூல் 100 கோடியைத் தாண்டியது. 

வசூல் மன்னனான 'பாகுபலி-2'

படம் வெளிவந்து இன்னும் ஒரு வாரம்கூட ஆகாத நிலையில், படத்தின் வசூல் பாக்ஸ் ஆபீஸ் ஹிட் அடித்துள்ளது. நான்கு நாள்களில் படத்தின் மொத்த வசூல் 600 கோடியைத் தாண்டியுள்ளதாகத் தகவல்கள் வருகின்றன. அதிகாரபூர்வத் தகவல் இன்னும் வெளியாகாத நிலையில், பாலிவுட் உலகில் இந்தப் படத்தை வெளியிட்ட கரண் ஜோகர், மூன்று நாள்களில்  'பாகுபலி' படத்துக்கான மொத்த வசூல் மட்டும்  303 கோடி எனத் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத்தில் இந்தப் படத்துக்கான வசூல் 175 கோடி எனவும் அவர் தெரிவித்திருந்தார். இந்தி மார்க்கெட் உலகில் மட்டும், முதல் நாளில் 40.75 கோடி, இரண்டாவது நாள் 40.25 கோடி, மூன்றாவது நாள் 46.5 கோடி, நான்காவது நாள் 39 கோடி என இந்தப் படம் வசூல்செய்துள்ளது. 'பாகுபலி'யின் வசூல் வேட்டை இன்னும் தொடரும் என சினிமா உலகில் பேசப்படுகிறது.