Published:Updated:

'துருவங்கள் 16' இயக்குநரின் அடுத்த படைப்பு!

சனா
'துருவங்கள் 16' இயக்குநரின் அடுத்த படைப்பு!
'துருவங்கள் 16' இயக்குநரின் அடுத்த படைப்பு!

வணிகரீதியாக ஹிட் அடித்த திரைப்படம்,  'துருவங்கள் 16'. திரைக்கதை மூலமாகவும் அனைவரின் பாராட்டைப் பெற்ற திரைப்படம் இது. இந்தப் படத்தைப் பார்த்த அனைவரும் முதலில் இணையத்தில் தேடியது, இந்தப் படத்தை இயக்கிய கார்த்திக் நரேனைத்தான். பார்க்க சின்ன பையனாக இருக்கும் இவருக்கு வயது 21 தான். பல குறும்படங்களை எடுத்த பிறகுதான், இந்தப் படத்தை எடுத்தார். 

'துருவங்கள் 16' இயக்குநரின் அடுத்த படைப்பு!

இப்போது, இரண்டாவது படத்தை இயக்கத் தயாராகிவிட்டார். இந்தப் படத்தை, இயக்குநர் கெளதம் மேனன் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து, தன் ‘க்நைட் நாஸ்டாலஜியா ஃபிலிமோடெயின்மென்ட்' கம்பெனி சார்பாக, கார்த்திக் நரேன் தயாரித்து இயக்கவுள்ளார். 

'நரகா சூரன்' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில், நடிகர் அரவிந்த் சாமி, மலையாள நடிகர் இந்திரஜித் சுகுமாரன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். நாகசைதன்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால், அவர் சில காரணங்களால் விலகிக்கொண்டதால், வேறு ஒரு தெலுங்கு நடிகரை நடிக்கவைக்க முயற்சிகள் நடந்துவருகின்றன. 

படத்துக்கான படப்பிடிப்பு, ஆகஸ்ட் மாதம் தொடங்கப்படும். கதாநாயகியாக ஸ்ரேயா ஒப்பந்தமாகியுள்ளார். இதுபற்றிய அதிகாரபூர்வத் தகவல் விரைவில் அறிவிக்கப்படுகிறது.