Published:Updated:

சினிமா நடிகர்களில் ’எலிஜிபிள் பேச்சுலர்ஸ்’ இவங்கதானாம்!

சினிமா நடிகர்களில் ’எலிஜிபிள் பேச்சுலர்ஸ்’ இவங்கதானாம்!
சினிமா நடிகர்களில் ’எலிஜிபிள் பேச்சுலர்ஸ்’ இவங்கதானாம்!

சினிமா நடிகர்களில் ’எலிஜிபிள் பேச்சுலர்ஸ்’ இவங்கதானாம்!

`எப்போ கல்யாணம்?'னு எப்போ கேட்டாலும், சரியான பதிலும் சொல்லாம, கல்யாணமும் பண்ணிக்காம காலத்தைக் கடத்திட்டிருக்கும் சினிமா பிரபலங்களை லிஸ்ட் எடுத்திருக்கோம். வருத்தப்படுறதும்... சந்தோஷப்படுறதும் அவங்கவங்க விருப்பம்.

சிம்பு:

காதலும், காதல் சார்ந்த இடமுமாக வாழ்ந்த 'மன்மதன்' நம்ம சிம்பு. நயன்தாரா, ஹன்சிகா எனப் பளிச் காம்பினேஷனில் காதல் செய்தவர், இப்போதும் 'காதல் மீதான நம்பிக்கை எப்போதும் போகாது' என லவ் மோடிலேயே சுற்றிக்கொண்டிருக்கிறார். ''கல்யாணம் என்ன படம் எடுக்கிற மாதிரியா? என்னைப் புடிச்சுப்போய், வாழ்க்கை முழுவதும் என்கூட வாழப்போற பொண்ணு கிடைக்கணும். அதுக்காகக் காத்திருக்கேன்'' - 'பாஸ் மார்க்' வயதை நெருங்கும் சிம்பு, திருமணம் குறித்து சொன்னது இது. #அங்க என்ன சொல்லுது? 

பிரேம்ஜி:

சிம்பு 'பாஸ் மார்க்'கை நெருங்குறார்னா, பிரேம்ஜி தாண்டிட்டார். நடிப்பு, இசை, பார்ட்டி, பப் எனச் சுற்றிச் சுற்றி சுண்ணாம்பு அடிக்கும் இவருக்குப் பலரும் பெண் தேடிக்கொண்டிருக்கிறார்கள். பிரேம்ஜியின் உறவினரும், நடிகருமான சண்முகசுந்தரம், ''பழைய நடிகர் திலீப்குமாரே 45 வயசுலதான் கல்யாணம் பண்ணிக்கிட்டார். அதே மாதிரி, பிரேம்ஜிக்கும் காலம் கைகூடி வரும். பிரேம்ஜிக்குப் பொண்ணு பார்க்கிறோம். கூடியசீக்கிரம் நல்ல சேதி வரும்'' என்றிருக்கிறார். #வரட்டும்...டும்! 

எஸ்.ஜே.சூர்யா:

காதல் படங்களின் ஸ்பெஷலிஸ்ட்டான இயக்குநர், நடிகர் எஸ்.ஜே.சூர்யாவும் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை. நல்ல நடிகர் ஆகவேண்டும் என்பது அவருடைய இலக்குகளில் ஒன்றாம். அதைக் கொஞ்சம் கொஞ்சமாக அடைந்துகொண்டிருக்கிறார். அவருடைய இலக்கு 100 சதவிகிதம் அடையும்போது, திருமணம் செய்துகொள்வாராம். #மேரேஜ் லோடிங்? 

ஆர்யா:

நடிகராக அறிமுகம் ஆனதிலிருந்து இன்று வரை அடிக்கடி கிசுகிசு க்ரீம் பூசப்படும் ப்ளேபாய் ஆர்யா. '`கல்யாணம் நடக்கும். அது, காதல் திருமணமாத்தான் இருக்கும்''னு சொல்லும்போதுகூட பரவாயில்லை. சமயத்துல, '`எனக்கான பொண்ணு இன்னும் பிறக்கவே இல்லை''னும் சொல்றார் ஆர்யா. #ரைட்டு

விஷால்:

சில பல வருடங்களாக, கல்யாணக் கேள்வியைச் சமாளித்தவர், '`நடிகர் சங்கத்துக்குக் கட்டடம் கட்டி முடித்த பிறகுதான் திருமணம்'' என சபதம் செய்திருக்கிறார். சங்கக் கட்டடத்துக்கு இப்போதுதான் செங்கல் புதைத்து அடிக்கல் நாட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது. #தயாரிப்பாளர் சங்கத்துக்கும் கட்டடம் கட்டி முடிக்கணும்னு கெளம்பிடாதீங்க!

ஜெய்:

நடிகை அஞ்சலியுடன் அதிகம் கிசுகிசுக்கப்பட்டவர். எங்கே இருக்கிறார், எப்படி இருக்கிறார் என அடிக்கடி தேடவேண்டிய நடிகர்களில் ஒருவர். காமெடியோ, சீரியஸோ... '`என் நண்பர்கள் ஆர்யா, விஷால், சிம்பு எல்லோரும் கல்யாணம் பண்ணிக்கிட்ட பிறகுதான் என் கல்யாணம். முக்கியமா, பிரேம்ஜிக்குக் கல்யாணம் ஆனபிறகுதான், நான் கல்யாணம் பண்ணிப்பேன்'' எனப் பொட்டில் அடித்துவிட்டார். #இப்ப என்ன செய்வீங்க? 

அதர்வா:

பார்த்தாலே பச்சை முகம்தான். கல்யாணப் பேச்சு எடுத்தால், '`இப்போ என்னங்க வயசாகிடுச்சு... முதல்ல நிறைய படங்கள் நடிப்போம். பிறகு கல்யாணத்தைப் பற்றிப் பேசலாம்'' என சிம்பிளாக சீன் வைத்திருக்கிறார். #மகிழ்ச்சி

அனிருத்:

சின்ன வயதிலேயே சாதனைகளையும் சர்ச்சைகளையும் தோளில் தூக்கிப்போட்டுத் திரிபவர் அனிருத். இவர்கிட்ட கல்யாணப் பேச்சை எடுக்க முடியாது. ஏன்னா, ''ஒரு இசையமைப்பாளரைப் புரிஞ்சிருக்கிறது ரொம்ப கஷ்டம். என் சமூக வட்டத்துக்கு அவங்களும், அவங்க சமூக வட்டத்துக்கு நானும் மேட் ஆகுறது ரொம்ப கஷ்டம். சுருக்கமா சொன்னா, எனக்குத் தெரிஞ்சு எனக்குக் கல்யாணம் ஆகுறதுதே கஷ்டம்தான்!''னு இவரே சொல்லியிருக்கார். #என்னத்த சொல்றது?

காளிவெங்கட்:

கல்யாணம் மீது என்ன கோபமோ? சமீபத்திய பேட்டி ஒன்றில், 'கல்யாணக் கேள்வியை ஸ்கிப் பண்ணிடுங்க பிரதர்' என்றிருக்கிறார். அவரது அம்மா விடலையே... 'அதெல்லாம் ஸ்கிப் பண்ண முடியாது. பொண்ணு பார்க்கிறோம். சீக்கிரமே கல்யாணம்' என, சுபமாக முடித்துவைத்திருக்கிறார். #கூடியசீக்கிரம் இந்தப் பட்டியலிலிருந்து வெளியேறிவிடுவார் என நம்புவோமாக! 

இவங்க மட்டுமல்ல, 'எப்போ பாஸ் கல்யாணம்?'னு கேட்க, 'அட்டகத்தி' தினேஷ், அஷோக்செல்வன், கெளதம் கார்த்திக், ஶ்ரீ, காமெடி நடிகர் சதீஷ்... என சினிமா பிரபலங்கள் ஏராளம். 

எப்போ பாஸ் கல்யாணம்?

அடுத்த கட்டுரைக்கு