Published:Updated:

பிக் பாஸ் நிகழ்ச்சி தொடர்பாக கமல் என்ன சொல்கிறார் தெரியுமா?

சனா
பிக் பாஸ் நிகழ்ச்சி தொடர்பாக கமல் என்ன சொல்கிறார் தெரியுமா?
பிக் பாஸ் நிகழ்ச்சி தொடர்பாக கமல் என்ன சொல்கிறார் தெரியுமா?

வட இந்திய சேனலில் ஹிட் அடித்த 'பிக் பாஸ்' ரியாலிட்டி ஷோ விரைவில் தமிழுக்கு வருகிறது. தமிழ் சின்னத்திரை உலகுக்கு இந்த நிகழ்ச்சி கொஞ்சம் புதுசுதான். 

இந்த நிகழ்ச்சியில் 15 பிரபலங்கள் ஒரே வீட்டில் நூறு நாள்கள் தங்க வேண்டும். போன், இணையம், கடிகாரம், நாளிதழ்கள் இப்படி எந்த தொலைத்தொடர்பு சாதனங்களும் அந்த வீட்டில் இருக்காது. வீட்டின் கழிவறை, குளியலறை தவிர அனைத்து இடங்களிலும் கேமரா பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்படும்.  யார் நூறு நாள்கள் தங்கி இந்தப் போட்டியில் வெற்றி பெறப் போகிறார்கள் என்பது தான் போட்டியின் கான்செப்ட். இந்த போட்டி விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாகப்போகிறது. இந்தப் போட்டியை தொகுத்து வழங்குவது மூலம் தொகுப்பாளராக சின்னத்திரையில் அறிமுகமாகிறார் கமல்ஹாசன்.

இவர் தொகுப்பாளராக முதல் முறையாக களம் இறங்குவதால் பிக் பாஸ் நிகழ்ச்சியின் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. மேலும், இதைப் பற்றி கமல் கூறுகையில், 'என் வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு அசைவும் கண்காணிக்கப்பட்டுதான் வருகிறது. தற்போது, எதிர்மறையாக நான் மற்றவர்களின் அசைவுகளை கண்காணிக்கப் போகிறேன். யார் நூறு நாள்கள் ஒரு வீட்டில் தங்கி இந்த சவால்களை வென்று வெற்றிப் பெற போகிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள நானும் ஆர்வமாக இருக்கிறேன்' என்று கூறியுள்ளார். 

பிக் பாஸ் நிகழ்ச்சி விஜய் டி.வி.யில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கும், சனி மற்றும் ஞாயிறு அன்று இரவு 8.30 மணிக்கும் ஒளிபரப்பாகும் என்று விஜய் தொலைக்காட்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.