Published:Updated:

‘பாகுபலி தேவசேனாவாக உணர்ந்தேன்!’ சேலையில் அனுஷ்கா மேஜிக்

‘பாகுபலி தேவசேனாவாக உணர்ந்தேன்!’ சேலையில் அனுஷ்கா மேஜிக்
‘பாகுபலி தேவசேனாவாக உணர்ந்தேன்!’ சேலையில் அனுஷ்கா மேஜிக்

‘பாகுபலி தேவசேனாவாக உணர்ந்தேன்!’ சேலையில் அனுஷ்கா மேஜிக்

ந்திய சினிமாக்களின் சாதனைகளை முறியடித்து வெற்றிநடை போடுகிறது பாகுபலி. பிரமாண்ட அரண்மனை, கொஞ்சும் இயற்கைக் காட்சிகள், மிரட்டும் போர்க்காட்சிகள் என கிராபிக்ஸில் உச்சம் தொட்டுள்ளது. தங்களுக்குப் பிடித்த நாயகன் படம் வெளியாகும்போது பாலாபிஷேகம் செய்வது, மொட்டை போடுவது என ரசிகர்கள் அதகளம் செய்வார்கள். திரைப்படத்தை கொண்டாட்டமாகப் பார்ப்பதில் ஆண் ரசிகர்களுக்குச் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபித்துள்ளார் ஒரு பாகுபலி ரசிகை. தனது சேலையில் பாகுபலி அனுஷ்காவின் மேஜிக்கை செய்து காட்டி பலரையும் கவர்ந்துள்ளார்.

இயக்குநர் ராஜமௌலியின் தீவிர ரசிகை, சென்னையைச் சேர்ந்த தீபலெட்சுமி. பாகுபலி 2 ரிலீஸ் ஆகும்போது, ஏதாவது வித்தியாசமாகச் செய்ய வேண்டும் என முடிவெடுத்தார். அதன்படி, தானே உருவாக்கிய சேலையை அணிந்து, ஃபேஸ்புக்கில் புகைப்படங்களை வெளியிட்டு வைரலாக்கி இருக்கிறார். அந்த சுவாரஸ்யத்தை பகிர்ந்துகொண்டார். 

'‘இயக்குநர் ராஜமௌலியின் படங்களை மிஸ் பண்ணவே மாட்டேன். பாகுபலி 1 தயாராகும்போதே இந்தப் படம் பிரமாண்ட வெற்றிபெறும் என நினைத்தேன். அதுபோலவே படம் சூப்பர் ஹிட்டானது. பாகுபலி 2 வருவதற்கு முன்பிருந்தே ராஜமௌலி சாரை டிவிட்டரிலும், ஃபேஸ்புக்கிலும் ஃபாலோ செய்தேன். அவரைப் பற்றி தமிழ் மீடியாக்களில் வரும் அனைத்துச் செய்திகளையும் அவருக்கு அனுப்பிவைப்பேன். அவர் சொல்லி, ஆனந்த் நீலகண்டன் எழுதிய ‘த ரைஸ் ஆப் சிவகாமி’ புத்தகத்தைத் தேடிப்பிடித்து வாங்கி வைத்தேன். 

'பாகுபலி 2' ரிலீஸ் ஆகும்போது நாமும் மற்றவர்களின் கவனத்தை கவர என்ன செய்யலாம் என யோசித்தேன். என் அம்மா சாந்திதான் எனக்கான ஆடைகளை டிசைன் செய்து கொடுப்பார். இருவரும் சேர்ந்து இப்படத்தை வைத்து புது சேலை டிரெண்டை உருவாக்க முடிவெடுத்தோம். இரண்டு பக்கமும் பார்டர் வைத்த பிளைன் சேலையை வாங்கினேன். இப்படத்தில் வரும் கேரக்டர்களை அதில் பிரின்ட் செய்ய, பிரின்ட் செய்பவர்களை அணுகினேன். அதற்கான அச்சு இல்லை என்றார்கள். உடனே, அந்த அச்சுக்கான காப்பி ரைட்ஸ் பெற்று பிரின்ட் செய்தேன். பிளாக் அண்டு ஒயிட் பிரின்ட் என்பதால், என் அம்மா அவரது கையாலேயே கோல்டன் பிரின்ட் செய்தார். அதேபோல கதாபாத்திரங்களுக்கான அணிகலன்களையும் வரைந்தார். இப்படிப் பல சவால்களோடு பாகுபலி சேலையை உருவாக்கினோம்’ என்கிறார் குதூகலமாக. 

சேலையின் முந்தானை மற்றும் முன்புறத்தில் பிரபாஸ் யானையின் மீது வரும் பிரமாண்டமான படம் இடம்பெற்றுள்ளது. சேலையின் கோல்டன் பார்டருக்கு இருபுறமும் பிரபாஸ், சிவகாமி, அனுஷ்கா, ராஜமௌலி, தமன்னா, கட்டப்பா படங்கள் இருக்கும். பாகுபலி ரிலீஸ் அன்று அலுவலகத்துக்குச் சேலையை அணிந்து சென்றேன். வழியெல்லாம் அனைவரின் கண்களும் என் மீதுதான். அலுவலகத்திலும் அன்றைய ஹீரோயின் நான்தான். என்னோடு செல்ஃபி எடுத்துக்கொண்டார்கள். புடவையில் அனுஷ்கா எங்கே? தமன்னா எங்கே என்றெல்லாம் கேட்டு கலாய்த்தார்கள். அந்தச் சேலையை அணிந்ததுமே என்னையும் பாகுபலியில் வரும் தேவசேனாவாக கம்பீரமாக உணர்ந்தேன். சேலைக்கான செலவும் உழைப்பும் அதிகம்தான் என்றாலும், நம் மகிழ்ச்சிக்கு முன்பு அது பெரியதில்லையே'' என்கிறார். 

பாகுபலி 2 படம் பற்றியும் சிலாகித்த தீபலெட்சுமி, ''இப்படி ஒரு பிரமாண்டத்தோடு யாராலும் எடுக்க முடியாது என்றே தோன்றியது. தி கிரேட் ராஜமௌலி. படத்தில் வரும் சண்டைக் காட்சிகளும் சரி, காதல் அரும்பும் தருணங்களும் சரி, ஒவ்வொன்றையும் அவ்வளவு ரசனையாக எடுத்திருக்கிறார். படம் பார்த்த பிறகுதான் ‘த ரைஸ் ஆப் சிவகாமி’ புத்தகத்தைப் படிக்க வேண்டும் என நினைத்திருந்தேன். இப்போது புத்தகத்தை படிக்க ஆரம்பித்துவிட்டேன். 'பாகுபலி' படங்களில் சொல்லப்படாத ஏராளமான விஷயங்களின் பொக்கிஷம் இந்தப் புத்தகம்’ என நெகிழ்கிறார் தீபலெட்சுமி.

அடுத்த கட்டுரைக்கு