Published:Updated:

இளையராஜா இசையமைத்திருக்கும் 'எங்க அம்மா ராணி' : மே 5-ல் ரிலீஸ்!

ராகுல் சிவகுரு
இளையராஜா இசையமைத்திருக்கும் 'எங்க அம்மா ராணி' : மே 5-ல் ரிலீஸ்!
இளையராஜா இசையமைத்திருக்கும் 'எங்க அம்மா ராணி' : மே 5-ல் ரிலீஸ்!
இளையராஜா இசையமைத்திருக்கும் 'எங்க அம்மா ராணி' : மே 5-ல் ரிலீஸ்!

சமுத்திரகனியிடம் உதவி இயக்குனராகப் பணிபுரிந்த எஸ். பாணி இயக்கியிருக்கும் படம், ‘எங்க அம்மா ராணி’. 'இசைஞானி' இளையராஜா இசையமைத்திருக்கும் இந்த படத்தில் தன்ஷிகா, நமோ நாராயணன் உட்பட பலர் நடித்துள்ளனர். எம்.கே ஃபிலிம்ஸ் சார்பில் சி.முத்துகிருஷ்ணன் தயாரித்திருக்கும் இந்தப் படத்தில், இரண்டு பெண் குழந்தைகளுக்குத் தாயாக தன்ஷிகா நடித்துள்ளார்.

சஸ்பென்ஸ் த்ரில்லராக உருவாகியிருக்கும் 'எங்க அம்மா ராணி' படத்தின் ட்ரெய்லர், கடந்த ஆண்டு நவம்பர் மாதத்திலேயே வெளியானது என்றாலும், மே 5ல் தான் ரிலீஸாகிறது. மலேசியாவில்தான் படத்தின் ஷூட்டிங் அதிகளவில் நடைபெற்றுள்ளன. 

இளையராஜா இசையமைத்திருக்கும் 'எங்க அம்மா ராணி' : மே 5-ல் ரிலீஸ்!

ரஜினியின் மன்னன் படத்தில் வந்த 'அம்மா என்றழைக்காத உயிரில்லையே' பாட்டுக்கு அடுத்து, இந்தப் படத்திலும் அம்மாவைப் பிரதானப்படுத்தி ஒரு பாடல் இடம்பெற்றுள்ளதாம். இந்தப் படத்துக்கு இசையமைத்தது பற்றி இளையராஜாவிடம் கேட்டபோது, 'இன்று இருக்கும் சினிமா உலகில், ஒரு எதார்த்தமான கதையை, உணர்வுபூர்வமாகச் சொல்லும் தன்மை, சினிமாவில் குறைந்துகொண்டே வருகிறது.

சினிமா ஒரு பொழுதுபோக்குச் சாதனமாகப் பார்க்கப்பட்டாலும், நல்ல விஷயங்களைச் சொல்லும் விதத்தில் முற்றிலும் மாறுபட்டு, கதை அம்சத்தில் தனித்துவம் கொண்டிருக்க வேண்டும். அந்த வகையில், இந்தப் படம் சற்று மாறுபட்டு இருந்தது' என்று கூறியுள்ளார்.

இளையராஜா இசையமைத்திருக்கும் 'எங்க அம்மா ராணி' : மே 5-ல் ரிலீஸ்!