Election bannerElection banner
Published:Updated:

விக்ரமுக்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்

விக்ரமுக்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்
விக்ரமுக்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்

விக்ரமுக்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்

முன்னணி நடிகர்கள் பலருடன் ஜோடியாக நடித்துக்கொண்டிருக்கிறார், நடிகை கீர்த்தி சுரேஷ். பைரவா, ரெமோ, ரஜினிமுருகன், தொடரி என முன்னணி நடிகர்களுடன் இவர் நடித்த படங்கள் நல்ல வரவேற்பைப்பெற்றன.  

விக்ரமுக்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்

இப்போது இவர், விக்ரமுடன் டூயட் பாட ரெடியாகிவிட்டார்.  ஹரி இயக்கத்தில்  2003-ஆம் ஆண்டு வெளிவந்த படம், 'சாமி'. இந்தப் படம் பாக்ஸ் ஆபீஸ் ஹிட் அடித்த நிலையில், 'சாமி' படத்தின் பார்ட்-2 -வை இயக்கத் திட்டமிட்டுள்ளார், ஹரி. இதில், விக்ரம் மற்றும் த்ரிஷா நடிப்பது உறுதிசெய்த நிலையில், இப்போது இந்தக் கூட்டணியில் கீர்த்தி சுரேஷும் சேர்ந்துள்ளார்.

மற்ற தொழில்நுட்பக் கலைஞர்களின் தேர்வு நடந்துகொண்டிருக்கிறது. ஆகஸ்ட் மாதம் இந்தப் படத்துக்கான படப்பிடிப்பு ஆரம்பமாகிறது. 'சாமி' படத்தின் முதல் பாகத்துக்கு இசையமைத்த ஹாரிஸ் ஜெயராஜ்,  சாமி-2-க்கும் இசையமைக்கிறார். ‘தமீன்ஸ் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் சார்பில், சிபு தமீன்ஸ் பிரமாண்டமாக இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். இது பற்றி கீர்த்தி சுரேஷ் தன் ட்விட்டர் பக்கத்திலும் தெரிவித்துள்ளார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு