Election bannerElection banner
Published:Updated:

'பாகுபலி' படம் பற்றி வெங்கய்ய நாயுடு என்ன சொன்னார் தெரியுமா?

'பாகுபலி' படம் பற்றி வெங்கய்ய நாயுடு என்ன சொன்னார் தெரியுமா?
'பாகுபலி' படம் பற்றி வெங்கய்ய நாயுடு என்ன சொன்னார் தெரியுமா?

'பாகுபலி' படம் பற்றி வெங்கய்ய நாயுடு என்ன சொன்னார் தெரியுமா?

ராஜமௌலி இயக்கத்தில், மிகப் பிரமாண்டமாக வெளிவந்துள்ள 'பாகுபலி - 2'  படம், பாக்ஸ் ஆபீஸ் ஹிட் அடித்து, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப்பெற்றுள்ளது. 

ரசிகர்கள் மட்டுமல்லாமல், சினிமா மற்றும் அரசியல் பிரபலங்களும் 'பாகுபலி-2' படத்தை பாஸிட்டிவ்வாக விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில், 64-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா, டெல்லி விஜய பவனில் நேற்று நடந்தது. இதில், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உடன் மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடுவும் கலந்துகொண்டார். 

விழாவில் பேசிய வெங்கய்ய நாயுடு, 'பாகுபலி-2' படத்தை வெகுவாகப் புகழ்ந்தார். 'மேக் இன் இந்தியா' பிரசாரத்துக்கு மிகச் சிறந்த உதாரணம் பாகுபலி. இந்தப் படம், உலகம் முழுவதும் அலைகளை உருவாக்கிவருகிறது. இந்தத் தலைமுறைக்கு ஏற்றவாறு  உருவாக்கப்பட்டுள்ளது. பிரமாண்டமான ஒரு திரைப்படம், இந்திய சினிமாவால் உருவாக்கப்பட்டுள்ளது. இதைத் தயாரித்தவர்களும் இந்தியர்கள். இதற்காக இவர்களை வாழ்த்துகிறேன். இது, நம் அனைவரையும் பெருமைப்படவைக்கிறது.

இதனால், அனைத்து மதத்தைச் சார்ந்தவர்களும் இந்திய சினிமாவைக் கொண்டாடுகிறார்கள். சினிமாவின் மொழி, உலகளாவியது. நாட்டின் கலாசாரத்தை, மொழியை, இயற்கையை, ஒற்றுமையை வெளிப்படுத்தும் சாதனமாக சினிமாவைப் பயன்படுத்த வேண்டும் என கூறினார். 

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு