Election bannerElection banner
Published:Updated:

கமல்ஹாசனுக்கு எதிரான வழக்கை விசாரிக்க உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை

கமல்ஹாசனுக்கு எதிரான வழக்கை விசாரிக்க இடைக்காலத் தடை விதித்து உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. 

கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் தனியார் தொலைக்காட்சிக்கு நடிகர் கமல்ஹாசன் பேட்டி அளித்தார். அப்போது அவர், மஹாபாரதம் குறித்து தனது கருத்துகளை தெரிவித்திருந்தார். மஹாபாரதம் குறித்த கமல்ஹாசன் பேச்சுக்கு இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அப்போது கமலுக்கு எதிராக ஆதிநாத்சுந்தரம் என்பவர் வள்ளியூர் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த குற்றவியல் நீதிமன்றம், மே 5-ம் தேதி வள்ளியூர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று கமலுக்கு உத்தரவிட்டது. இந்த நிலையில் வழக்கை ரத்து செய்யக்கோரியும், நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்ககோரியும் கமல் சார்பில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், கமல்ஹாசன் நேரில் ஆஜராக வேண்டாம் என்றும் வழக்கை விசாரிப்பதற்கு இடைக்காலத் தடையும் விதித்துள்ளனர். 

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு