Election bannerElection banner
Published:Updated:

நடிகர் சங்கத்துக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

நடிகர் சங்கத்துக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
நடிகர் சங்கத்துக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

நடிகர் சங்கத்துக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

சென்னை தியாகராய நகரில் 26 கோடி செலவில், நான்கு மாடிகளுடன் நடிகர் சங்க கட்டடம் தயாராகி வருகிறது. இந்தக் கட்டடத்தில் தியேட்டர், ஜிம், கூத்துப்பட்டறை போன்றவை தயாராகவுள்ளது.

சில நாள்களுக்கு முன்னர்தான் இதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. கட்டடப் பணிகள் நடந்து கொண்டு வருகிறது. கட்டடம் கட்டுவதற்கு சினிமாவைச் சேர்ந்த பல பிரபலங்கள் நிதியுதவி செய்து வரும் வேளையில் நடிகர் சங்கத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கட்டடம் கட்டுவதற்கு பொதுச் சாலையை ஆக்கிரமித்ததாக ஶ்ரீரங்கன் அண்ணாமலை என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளதால் உயர் நீதிமன்றம் நடிகர் சங்கத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நடிகர் சங்கம் பொதுச் சாலையில் 40 அடியை ஆக்கிரமித்துள்ளதாம். இதன் மதிப்பு 8 கோடி ஆகும். அரசுக்கு சொந்தமான மூன்று கிரவுண்ட் இடத்தை நடிகர் சங்கம் ஆக்கிரமிப்பு செய்துள்ளதற்கு சங்கத்தை சார்ந்த சிலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு