Election bannerElection banner
Published:Updated:

ஸ்ருதிஹாசனின் புதிய அவதாரம்

ஸ்ருதிஹாசனின் புதிய அவதாரம்
ஸ்ருதிஹாசனின் புதிய அவதாரம்

ஸ்ருதிஹாசனின் புதிய அவதாரம்

இன்றைய தமிழ் சினிமாவில் ஒரு படத்துக்கு நடிகர்கள் எடுக்கும் ரிஸ்க்கைவிட, நடிகைகள் எடுக்கும் ரிஸ்க்கும், பயிற்சியும் கொஞ்சம் அதிகம்தான். சிவகார்த்திகேயனுடன் பெயரிடப்படாத ஒரு படத்தில் நடிப்பதற்காக நடிகை சமந்தா சிலம்பம் கற்று வந்தார். இந்நிலையில் நடிகை ஸ்ருதிஹாசனும் இயக்குநர் சுந்தர்.சி படத்தில் நடிப்பதற்காக வாள் சண்டை பயிற்சியில் ஈடுபட்டு வருகிறாராம். அதுவும் லண்டனில் கற்று வருகிறாராம். 

இந்தப் படத்தில் இவர் இளவரசியாக நடிக்கிறார். அதற்குத் தன்னை முழுமையாக தயார்படுத்திக் கொள்ளும் விதமாக, இவர் லண்டனில் வாள் சண்டையில் நிபுணத்துவம் பெற்ற கலைஞரிடம் பயிற்சி பெற்று வருகிறார். முதல் பயிற்சியாக வாள் சண்டையின் நுணுக்கங்களைக் கற்று வருகிறார். படத்தின் சண்டைக் காட்சிகளில் நடிக்கும்போது ரசிகர்களுக்கு சண்டைக் காட்சிகள் தத்ரூபமாக இருக்க வேண்டும் என்பதற்காக இவர் இந்த பயிற்சியை எடுத்து வருகிறார். 

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு