Published:Updated:

தமிழ் சினிமாவின் ‘இது அதுல்ல’ காப்பிகேட் சீன்கள் - பார்ட் 1

தார்மிக் லீ
தமிழ் சினிமாவின் ‘இது அதுல்ல’ காப்பிகேட் சீன்கள் - பார்ட் 1
தமிழ் சினிமாவின் ‘இது அதுல்ல’ காப்பிகேட் சீன்கள் - பார்ட் 1

தமிழ் சினிமாவின் ‘இது அதுல்ல’ காப்பிகேட் சீன்கள் - பார்ட் 1

சில திரைப்படங்களைப் பார்க்கும்போதே, இதை நாம இதுக்கு முன்னாடி எங்கேயோ பார்த்திருக்கோமேன்னு நம்மை யோசிக்க வைக்கும். தமிழ்ப் படங்களின் காட்சிகள் ஹாலிவுட்டிலும், ஹாலிவுட் காட்சிகள் தமிழ் சினிமாவிலும் வந்திருக்கின்றன. ஒரேமாதிரியான சில காட்சிகளைப்பற்றிய சின்ன அலசல் இது.

'தனி ஒருவன்' பக் (bug) :

'தனி ஒருவன்' படத்தில் இந்த சீன் மிகவும் ஃபேமஸ். வில்லன், ஹீரோவுக்கு 'பக்' ஒன்றை உடம்பில் பொருத்திவிடுவார். ஹீரோவின் நடவடிக்கையைக் கவனிப்பதற்காக அதை வைப்பார். அதே சீன் ஒரு கொரியன் படத்தில் இடம் பெற்றிருக்கும். அதில் உல்டாவாக ஹீரோ வில்லனுக்கு 'பக்' வைத்துவிடுவார். படத்தின் பெயர் 'ஐ சா தி டெவில்'. 

'தனி ஒருவன்' நியூஸ் பேப்பர் :

'தனி ஒருவன்' படத்தில் இந்த சீனும் ஃபேமஸ் தான். ஜெயம் ரவி தனக்கென ஒரு இடத்தை அமைத்துத் தன் எதிரிகளைப் பற்றி முழு விவரங்களும் சேகரித்து அதில் ஒவ்வொரு நியூஸையும் வைத்துத் தனது எதிரி யாரென்று முடிவு செய்வார். ஆனால் அதே நியூஸ் பேப்பர் கான்செப்ட் 'ஷெர்லாக் ஹோம்ஸ்' என்ற ஒரு ஆங்கிலப் படத்தில் இடம் பெற்றிருக்கும். அவரது எதிரியான 'ஜேம்ஸ் மொரியாட்டி'-யைப் பற்றி தெரிந்துகொள்ள ஷெர்லாக் அந்த ஐடியாவைப் பயன்படுத்துவார். 

'புலி' ரோஸ் :

'புலி' படத்தில் ஹீரோவின் அக்காந்த் தன் கண் முன்னே கழுத்தை அறுத்து வில்லன் ஆட்கள் கொன்று விடுவார்கள். அதைப்பார்த்து அதிர்ச்சியும் சோகமும் கலந்து கண்ணில் நீர் வடிய நின்றுகொண்டிருப்பார். அதைப் பார்த்த ஹீரோயின் அங்குள்ள பூ ஒன்றைப் பறித்து ஹீரோவிடம் கொடுப்பார். அதே சீன் 'ப்ரேவ் ஹார்ட்' ஆங்கிலப் படத்தில் இடம் பெற்றிருக்கும்.

'துப்பாக்கி' வெயிட்டிங் :

'துப்பாக்கி' படம் இன்டர்வெல் சமயத்தில் வில்லன் ஹீரோவிடம் போன் செய்து மிரட்டுவார். அப்போது ரைமிங்காக இங்கிலீஷ் டயலாக் பேசுவார் வில்லன். அதைக்கேட்டு ஹீரோ விஜய் 'ஐ யம் வெயிட்டிங்' என்று பதிலடி கொடுப்பார். அதேபோல் 'டேக்கன்' என்ற ஆங்கிலப் படத்தில் உல்டாவாக தன் மகளை கடத்திச்சென்ற வில்லனிடம் போனில் பேசுவார் ஹீரோ. அதே ரைமிங் டயலாக்கைக் கேட்டு முடித்துவிட்டு வில்லன் 'குட் லக்' என்று சொல்வார்.

'நாணயம்' லேசர் :

'நாணயம்' படத்தில் பேங்க் கொள்ளையடிக்கப்படும் சீன் ஒன்றில் ஆபத்தான இடத்தைக் கடக்க வேண்டியிருக்கும். அதாவது ஒரு முனையில் இருந்து மறு முனைக்குச் செல்ல வேண்டும் ஆனால் அது எளிதான காரியமில்லை. நடுவில் 'லேசர் லைட்' இருக்கும். ஒளியில் சிக்கினால் உடல் துண்டாகிவிடும். அதைக் கடக்க சில டான்ஸ் மூவ்மென்ட்ஸைப் பயன்படுத்திக் கடப்பார் ஹீரோயின். அதேபோல் ஆங்கிலப் படமான 'ஓசியன் 12' என்ற படத்தில் சில நடன் அசைவுகள் மூலம் லேசரைக் கடப்பார் ஹீரோ.

ஸ்லோ பைக் :

சந்தானம் இடம்பெற்ற படத்தின் காமெடிக் காட்சி ஒன்றில் அவசரமாக ஓர் இடத்திற்குச் செல்வதற்காக ஒருவரிடம் லிஃப்ட் கேட்பார். நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் ஒரு வண்டியை   திருடிச் சென்று விடலாம் என்று எண்ணி அதை ஓட்ட ஆரம்பிப்பார் சந்தானம். ஆனால் அந்த வண்டியோ 20 கிலோமீட்டர் வேகம் தாண்டாது. பைக் ஓனரோ பின்னாலே ஓடிவந்து இவரைத் தள்ளிவிட்டு தன் வண்டியை எடுத்துச் செல்வார். அதே போல் 'MR.பீன் ஹாலிடே' என்ற ஆங்கிலப் படத்தில் காட்சி ஒன்று இடம் பெற்றிருக்கும்.

'காதல் கொண்டேன்' கணக்கு :

'காதல் கொண்டேன்' படத்தில் தனுஷ் கணக்கு போடும் சீன் மிகவும் ஃபேமஸ். வகுப்பில் தனுஷ் துங்கிக்கொண்டிருப்பார். அதைப் பார்த்த ப்ரொஃபஸர் கடுப்பாக போர்டில் இருக்கும் கணக்கை சரி செய்யும்படி டஸ்டரால் அடிப்பார். ஆனால் சற்றும் எதிர்பாராதவிதமாக தனுஷ் அந்தக் கணக்கை சரி செய்துவிடுவார். அதைப் பார்த்து வியந்துவிடுவார் ப்ரொஃபஸர். அதே சாயலில் இரண்டு வருடங்களுக்கு முன்பு வெளியான 'X+Y'எனும் ஆங்கிலப் படத்தில் ஒரு காட்சி இடம் பெற்றிருக்கும்.

'பாட்ஷா' 7 செகண்ட் :

'பாட்ஷா' படத்தில் ரகுவரனும் சூப்பர் ஸ்டாரும் இணைந்து பேசிக்கொள்ளும் சீன் அல்டிமேட். இன்னும் 7 செகண்டில் உன் கதையை முடிக்கிறேன் என்று கூறி மேலே ரஜினியை நோக்கித் துப்பாக்கியை நீட்டியபடி ரகுவரனின் ஆட்களைப் பார்க்கச் சொல்வார் ரகுவரன். அதற்கு ரஜினி 'கொஞ்சம் அங்கே பாரு கண்ணா' என்று அவரின் ஆட்களைப் பார்க்கச் சொல்லி பதிலடி கொடுப்பார். அதே சாயல் சீன் ஹாலிவுட் படம் 'ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ்' படத்தில் இடம் பெற்றிருக்கும். சொந்தமா எதுவும் இல்லீங்களா சாரே..!    

பார்ட் 2வில் மேலும் சில கோலிவுட் டு ஹாலிவுட்டும், ஹாலிவுட் டு கோலிவுட்டும் காப்பிகேட் சீன்களும் பார்ப்போம். இப்போ வணக்கம் வெச்சுக்குறேன்.

அடுத்த கட்டுரைக்கு