Published:Updated:

அஜித்தின் ‘V’ சென்டிமென்ட்டும்... ஆறு படங்களின் தெறி ஹிட்டும்! #Ajith

பு.விவேக் ஆனந்த்
அஜித்தின் ‘V’ சென்டிமென்ட்டும்...  ஆறு படங்களின் தெறி ஹிட்டும்! #Ajith
அஜித்தின் ‘V’ சென்டிமென்ட்டும்... ஆறு படங்களின் தெறி ஹிட்டும்! #Ajith

‘விவேகம்' டீஸர் எப்போது வெளியிடப்படும் என வெறித்தனமாகக்  காத்துக்கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள். அஜித்துக்கு ஆங்கில எழுத்தான `V' வரிசையில் வைக்கப்படும் படங்கள் தெறி ஹிட்டாகும் என்பது அஜித் ரசிகர்களின் கணக்கு. அஜித்துக்கு எத்தனை படங்கள் `V' வரிசையில் வந்திருக்கின்றன, அவற்றில் எவை ஹிட் என்பது குறித்து ஒரு ஃப்ளாஷ்பேக் பார்ப்போமா ?

அஜித்தின் ‘V’ சென்டிமென்ட்டும்...  ஆறு படங்களின் தெறி ஹிட்டும்! #Ajith

வான்மதி:

அஜித் ஹீரோவாக நடித்த ஆறாவது தமிழ்ப் படம் `வான்மதி'. இதுதான்  அஜித்துக்கு `V' வரிசையில் அமைந்த முதல் படம். `அமராவதி'யில் காலடி எடுத்து வைத்த அஜித்துக்கு, 1995-ம் ஆண்டு மணிரத்னம் தயாரிப்பில், வசந்த் இயக்கத்தில் வெளிவந்த `ஆசை' பெரிய ஹிட். பட்டிதொட்டியெங்கும் அவரை அடையாளப்படுத்தியது. ரிவ்யூ, ரெவின்யூ இரண்டிலும் `ஆசை' ஹிட்டடித்த சந்தோஷத்தில் இருந்த அஜித்துக்கு, நான்கு மாத இடைவெளியில் வந்த அடுத்த படம்தான் `வான்மதி'. 1996-ம் ஆண்டு ஜனவரி 12-ம் தேதி ரிலீஸானது. 

அகத்தியனும் அஜித்தும் இணைந்த முதல் படம் இது. கதைக்களம் பழசுதான். ஆனால், அஜித்துக்குப் புதிதாக  உருவாகியிருந்த ரசிகர்கள் பட்டாளம் படத்தைத் திரும்பத் திரும்பப் பார்த்தார்கள். `வான்மதி' அந்தக் காலத்திலேயே கோடிகளில் வசூல் செய்தது. திரையரங்கில் 175 நாள்கள் ஓடி, பிரமாண்டமான வெற்றியைப் பெற்றது. அஜித்தின் திரை வாழ்வில் முதல் மெகா ஹிட் இதுதான். இந்தப் படத்தின் வெற்றியே மீண்டும் அகத்தியனுடன் `காதல் கோட்டை'யில் சேர்வதற்கு அடித்தளம் தந்தது. 

அஜித்தின் ‘V’ சென்டிமென்ட்டும்...  ஆறு படங்களின் தெறி ஹிட்டும்! #Ajith

வாலி:

அஜித் மிகச்சிறந்த நடிப்பை வழங்கிய படங்களில் டாப் மூன்று படங்களில் ஒன்று `வாலி'. ஹீரோவைவிட வில்லத்தனத்தில் செம ஸ்கோர் செய்தார். ‘இவர் சாக்லேட் பாய், இவர் எப்படி வில்லன் ரோலுக்கு செட் ஆவார்?' எனக் கேள்வி கேட்டவர்களுக்கு அஜித்தின் நடிப்பு பதில் சொன்னது. 

‘காதல் கோட்டை'க்குப் பிறகு மூன்று வருடங்களில் அஜித் நடித்த படங்கள் பதினொன்று. இதில் ‘காதல் மன்னன்’ தவிர மற்ற படங்கள்  சுமார் / தோல்வி வகையறாக்கள்தான். தொடர் தோல்விகளால் இண்டஸ்ட்ரியில் ‘இனி அஜித் அவ்வளவுதான்!’ எனப் பேச்சு எழுந்தபோது ‘வாலி'யில் கெத்தாக வந்தார். அந்த வகையில் ‘வாலி’ அஜித்துக்கு மிகப்பெரிய கம் பேக் திரைப்படம். 

ஒவ்வொரு காலகட்டத்திலும் அஜித்துக்குப் புதிதாக ரசிகர்கள் முளைப்பார்கள். அப்படி, ‘வாலி’ பார்த்துவிட்டு உருவான ரசிகர் பட்டாளம் என்பது பெரிது. எஸ்.ஜே.சூர்யாவின் முதல் படம் இது. டிவி-யில் பார்த்துப் பார்த்துச் சலிக்காத படம் என்பதால், கதை பற்றியெல்லாம் பேசவேண்டிய அவசியம் இல்லை. 

வசந்திடம் உதவி இயக்குநராக  இருந்தவர் எஸ்.ஜே.சூர்யா. ‘ஆசை’ திரைப்படத்தின்போதே அஜித்துக்கு சூர்யா பழக்கம். சூர்யாவின் வேலைகளில் இம்ப்ரெஸ் ஆகியிருந்த அஜித், "நல்ல கதை இருந்தால் சொல்லுங்க பாஸ், நிச்சயம் இணைவோம்" எனச் சொல்லியிருந்தார். அப்படி அஜித்துக்காகவே எஸ்.ஜே.சூர்யா எழுதி இயக்கிய படம்தான் ‘வாலி’. அந்தப் படத்தில் நடித்ததற்காக ஃபிலிம்பேர்  விருது பெற்றார் அஜித். வசூலில் பின்னியெடுத்தது. 

அஜித்தின் ‘V’ சென்டிமென்ட்டும்...  ஆறு படங்களின் தெறி ஹிட்டும்! #Ajith

வில்லன்:

அல்டிமேட் ஸ்டார்   ‘தல’யாக மாறிய பிறகு, ஹாட்ரிக் ஹிட் தந்தார். ‘தீனா’, ‘சிட்டிசன்’, ‘பூவெல்லாம் உன் வாசம்’ மூன்று படங்களும் பாக்ஸ் ஆபீஸில் நியாயமான வசூல் தந்தன. ஆனால், அதற்கடுத்த மூன்று படங்களும் கிட்டத்தட்ட ஃப்ளாப். ‘அசோகா’, ‘ரெட்’, ‘ராஜா’ என ஃப்ளாப் ஷோ காட்டிய பிறகு, கே.எஸ்.ரவிகுமாருடன் இணைந்தார். 

‘வாலி’க்குப் பிறகு இதிலும் கெத்தான இரட்டை வேடம். ‘வில்லனி’ல் மீண்டும் ஃபிலிம்பேர் விருது ஜெயித்தார் 'தல' . சிவா, விஷ்ணு என இரண்டு கேரக்டர்களிலும் கலக்கினார். காமெடி, அதிரடி இரண்டிலும் விருந்துவைத்தார். `வில்லன்', அஜித் ரசிகர்களுக்கு மட்டுமின்றி ஃபேமிலி ஆடியன்ஸுக்கும் பிடித்திருந்தது. இந்தப் படத்தின் வெற்றி மைலேஜ்தான் அடுத்த சில ஆண்டுகளுக்கு அஜித்தைக் காப்பாற்றியது என்றே சொல்லலாம். 

அஜித்தின் ‘V’ சென்டிமென்ட்டும்...  ஆறு படங்களின் தெறி ஹிட்டும்! #Ajith

வரலாறு:

‘வில்லன்’ டு ‘வரலாறு’ இடையில் ஏழு படங்கள். கிட்டத்தட்ட இந்த ஏழு படங்களையும் அஜித் மறந்தேவிடலாம். அந்த அளவுக்கு ஃப்ளாப்புகள் தொடர்ந்தன. ஒருசில படங்கள் ஓரளவுக்கு வசூல் செய்திருந்தாலும், ரிவ்யூக்களில் கிழி கிழி எனக் கிழித்துத் தொங்கவிட்டார்கள். 

தொடர்ச்சியாக ஒரே மாதிரியான கதைத் தேர்வு வேலைக்கு ஆகாது என உணர்ந்திருந்த அஜித், மீண்டும் கே.எஸ்.ரவிகுமாருடன் இணைந்தார். இந்த முறை இசை ஏ.ஆர்.ரஹ்மான் என்பதால், படத்துக்கு எதிர்பார்ப்பு எகிறியது. மூன்று வேடங்களில் பட்டையைக் கிளப்பியிருந்தார் அஜித். ‘நல்ல பெர்ஃபாமர்’ என்ற பெயர் அஜித்துக்குக் கிடைத்தது. `வாலி', `வில்லனு'க்கு அடுத்தபடியாக `வரலாறு' படத்துக்காகவும் ஃபிலிம்பேர் விருது ஜெயித்தார் அஜித். பல தியேட்டர்களில் நூறு நாள்களைக் கடந்து ஓடியது படம். 

அஜித்தின் ‘V’ சென்டிமென்ட்டும்...  ஆறு படங்களின் தெறி ஹிட்டும்! #Ajith

வீரம்:

‘வரலாறு’க்குப் பிறகு  வெளிவந்த ‘ஆழ்வார்’ பாக்ஸ் ஆபீஸில் மரண அடி வாங்கியது. `கிரீடம்' சுமாராக போனது. `பில்லா' முரட்டுத்தனமான ஹிட். ஸ்டைலிஷ் அஜித்துக்குத் தனி ரசிகர்கள் உருவானார்கள். அதன் பிறகு அஜித் கோட் அணிந்து நடந்து வந்தாலே தியேட்டரில் க்ளாப்ஸ் அள்ளியது. `ஏகன்', `அசல்' தோல்விகளுக்குப் பிறகு `மங்காத்தா' வரலாறு காணாத வசூல் செய்தது. `மங்காத்தா'வின் வெற்றி, அஜித்துக்கு ரசிகர்களாக இருந்தவர்களை அஜித் வெறியர்களாக மாற்றியது. அதன் பிறகு வெற்றி-தோல்விகள் மாறி மாறி வந்தன. 

`வரலாறு' படத்துக்குப் பிறகு எட்டு வருடங்கள் கழித்து மீண்டும் `V' சென்டிமென்டில் வந்த படம் `வீரம்'. சிறுத்தை சிவா இயக்கத்தில் நாற்பது வயதுகளிலான தோற்றத்தில் நடித்திருந்த அஜித்தை, ரசிகர்கள் கொண்டாடினார்கள். முழுக்க முழுக்க மாஸ் மசாலாவில் வந்திருந்த படம் ரசிகர்களைக் கவர்ந்தது. கனிவு, கோபம், பாசம், காதல் என வெரைட்டி நடிப்பில்  தனது ரசிகர்களுக்கு விருந்துவைத்தார் 'தல' . சிறுத்தை சிவா, அஜித் இருவருக்கும் நல்ல வெற்றி தந்தது 'வீரம்'.

அஜித்தின் ‘V’ சென்டிமென்ட்டும்...  ஆறு படங்களின் தெறி ஹிட்டும்! #Ajith

வேதாளம்:

'தெறிக்கவிடலாமா...' என அஜித் ரசிகர்கள் சொல்லிச் சொல்லியே படத்தை ஹிட் ஆக்கினார்கள். மிகச் சுமாரான கதை மற்றும் மேக்கிங், ஏகப்பட்ட லாஜிக் ஓட்டைகள்  என்பதால், ரிவ்யூக்களில் அடி வாங்கினாலும், வெறித்தன ரசிகர்கள் `ஆலுமா டோலுமா...'  என தியேட்டரில் கொண்டாட்டக் குத்து போட்டதில் தயாரிப்பாளர்கள் செம மகிழ்ச்சி. 

`மங்காத்தா'வில் வசூலை நெருங்கியதாகவும், வசூலை முறியடித்துவிட்டதாகவும் உறுதிப்படுத்தபடாத இரண்டுவிதமான தகவல்கள் இன்னமும் வந்துகொண்டிருக்கின்றன. அஜித்தின் திரை வாழ்க்கையில் மிக அதிக தொகை வசூல் செய்த படம் `வேதாளம்'தான் எனச் சொல்லப்படுகிறது. 

இதுவரை `V' வரிசையில் வந்த ஆறு படங்களுமே ஹிட் லிஸ்ட்டில் இணைந்துள்ளன. `வீரம்' படத்தைத் தொடர்ந்து `வேதாளம்' படமும் தெறி ஹிட்டாகவே, மூன்றாவது முறையாக  இயக்குநர் சிவாவுடன் இணைந்திருக்கிறார் அஜித். ஆகஸ்ட் மாதம்  திரைக்கு வெளிவரும் என எதிர்பார்க்கப்படும் `விவேகம்'  படத்துக்கும் ஓப்பனிங் பயங்கரமாக இருக்கும் என நம்பலாம். அதே சமயம் `வேதாளம்' வசூலையும் தாண்டி ஹிட் அடிக்குமா,  அஜித்தின் `V' சென்டிமென்ட் வொர்க் அவுட் ஆகுமா என்பதே இப்போதைக்கு இண்டஸ்டிரியில் ஹாட் டாக்.