Published:Updated:

ரஜினியின் புதிய படத்தில் தனுஷ்?

ரஜினியின் புதிய படத்தில் தனுஷ்?
ரஜினியின் புதிய படத்தில் தனுஷ்?

கபாலி வெற்றிக்குப் பிறகு இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ரஜினி புதிய படத்தில் இணைக்கிறார், என்பது ஏற்கனவே தெரிந்த செய்திதான்.

இந்தப் படத்தை தனுஷ் தன் சொந்த கம்பெனி சார்பாக தயாரிக்கிறார். ஆனால் இப்போது இந்தப் படத்தில் தனுஷ் நடிப்பாரா என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இது பற்றி படக்குழுவினரிடம் இருந்து அதிகார பூர்வ தகவல்கள் எதுவும் வெளிவராத நிலையில், படத்தின் கதைக்கு தேவைப்பட்டால் தனுஷ் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் தனுஷ் ரஜினியுடன் சேர்ந்து நடித்தால் மருமகனும், மாமனாரும் சேர்ந்து நடிக்கும் படமாக ரஞ்சித் இயக்கும் இந்தப் படம் அமையும். மேலும் இந்தப் படத்தில் இந்தி நடிகை வித்யா பாலன் நடிப்பார் என்றும் எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் வித்யா  பாலன் கால்ஷீட் பிரச்னை காரணமாக நடிக்க முடியவில்லை என்று பேச்சு அடிபடுகிறது. 

ரஜினியின் லிங்கா மற்றும் கபாலி படத்தில் வித்யாபாலன் நடிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டு, கடைசியில் அதுவும் நடக்காமல் போனது. ரஜினி நடிப்பில் உருவாக போகும் இந்தப் படத்தை ரசிகர்கள் மட்டும் இன்றி கோலிவுட் உலகமே எதிர்ப்பார்க்கிறது.