Published:Updated:

'பாகுபலி' இவ்வளவு ஹிட் அடிக்கும் என்று எதிர்ப்பார்க்கவில்லை! சொல்பவர் யார் தெரியுமா ?

'பாகுபலி' இவ்வளவு ஹிட் அடிக்கும் என்று எதிர்ப்பார்க்கவில்லை! சொல்பவர் யார் தெரியுமா ?
'பாகுபலி' இவ்வளவு ஹிட் அடிக்கும் என்று எதிர்ப்பார்க்கவில்லை! சொல்பவர் யார் தெரியுமா ?

'பாகுபலி-2' திரைப்படம் நாடு முழுவதும் 9,000 திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. இந்தப் படம் வெளியான 9 நாள்களில் 1,000 கோடி வசூல் செய்து, உலக சாதனை படைத்துள்ளது. 

படத்தின் இயக்குநர் ராஜமௌலி, தந்தை விஜயேந்திர பிரசாத். இவர்தான் 'பாகுபலி' படத்தின் கதையை உருவாக்கியவர் ஆவார். குறிப்பாக, இவரின் கதை வண்ணத்தில்  வெளியான பல படங்கள் ஹிட் அடித்துள்ளன. மகதீரா, பஜ்ரங்கி பைஜான், நான் ஈ உள்ளிட்ட படங்களுக்கு விஜயேந்திர பிரசாத் கதை எழுதியுள்ளார்.

இந்நிலையில் பாகுபலியின் அதிரடி வெற்றி குறித்து விஜயேந்திர பிரசாத் கூறுகையில், "இன்னும் திரையரங்குகளில் ஹவுஸ்புல் காட்சிகளாய் நிரம்பி வழியும் பாகுபலி இவ்வளவு ஹிட் அடிக்கும் என்று சற்று எதிர்ப்பார்க்கவில்லை. படம் வெற்றி பெறும் என்று எதிர்பார்த்தோம். ஆனால், படம் 9 நாள்களில் 1,000 ரூபாய் கோடி வசூல் செய்யும் என்று எதிர்ப்பார்க்கவில்லை. இது இந்த படத்துக்கு கிடைத்த பெருமை. படத்தில் பணிபுரிந்த தொழில் நுட்பக் கலைஞர்கள், நடிகர்கள், நடிகைகள் அனைவருக்கும் இந்த பெருமை பொருந்தும். குறிப்பாக, படத்தை வெற்றிப் படமாக்கிய அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி"  என்றார்.