Published:Updated:

விஷால் அறிவித்த ஸ்ட்ரைக்குக்கு ஆதரவு இல்லை : திரையரங்க உரிமையாளர்கள் சங்கம்

எம்.குணா
விஷால் அறிவித்த ஸ்ட்ரைக்குக்கு ஆதரவு இல்லை : திரையரங்க உரிமையாளர்கள் சங்கம்
விஷால் அறிவித்த ஸ்ட்ரைக்குக்கு ஆதரவு இல்லை : திரையரங்க உரிமையாளர்கள் சங்கம்

நடிகர் சங்க பொதுச் செயலாளர் மற்றும் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் என்ற இரண்டு முக்கிய பொறுப்புகளுடன் வலம் வந்து கொண்டிருக்கிறார், நடிகர் விஷால்.


இந்த நிலையில், சினிமாத்துறைக்கு  வரிவிலக்கு அளிக்கக்கோரி, மே 31-ம் தேதி முதல்  ஸ்ட்ரைக் நடத்தப்படும் என்று நடிகர் சங்க பொதுச்செயலாளரும் தயாரிப்பாளர்கள் சங்கத்தலைவருமான விஷால் அறிவித்திருக்கிறார்.


தற்போது, பரபரப்பாக புதுப் படப்பிடிப்பு நடத்திவரும், நடித்துவரும் கலைஞர்களுக்கு இந்த அறிவிப்பு அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது. குறிப்பாக, பல தயாரிப்பாளர்கள் இந்த அறிவிப்பால் அதிர்ச்சியடைந்துள்ளனர்.  இன்னொரு பக்கம், சென்னை திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் சங்கமும், கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர் மாவட்ட திரையரங்க உரிமையாளர்கள் சங்கமும் ‘நாங்கள் விஷால் நடத்தும் ஸ்ட்ரைக்கில் கலந்துகொள்ள மாட்டோம்.’ என்று அறிவித்திருக்கிறது.