Published:Updated:

'சும்மா இருக்குறதுகூட அறிவியல்தான்..!' இது வடிவேலு சயின்ஸ்

ஜெ.வி.பிரவீன்குமார்
'சும்மா இருக்குறதுகூட அறிவியல்தான்..!' இது வடிவேலு சயின்ஸ்
'சும்மா இருக்குறதுகூட அறிவியல்தான்..!' இது வடிவேலு சயின்ஸ்

அறிவியல்ல சில விதிகளை எல்லாம் பாடமாக  நடத்துறப்போ ஒண்ணுமே புரியாமல்  ‘இதெல்லாம் நம்ம விதி’னு உட்கார்ந்து படிச்சிருப்போம். அதையெல்லாம் ரியல் லைஃப்புல நடக்குற சம்பவங்களோட கனெக்ட் பண்ணி, ஈஸியாக மைண்டுல வச்சு எப்படி டீல் பண்ணுறதுன்னு பார்க்கலாம் வாங்க...

நியூட்டனின் முதல் விதி: விதின்னா நம்மளுக்கு உடனே ஞாபகத்துக்கு வர்றது நியூட்டன் தானே. அதனால அங்கே இருந்தே ஆரம்பிக்கலாம் மக்களே. வடிவேலு ஒரு படத்துல சும்மாவே உட்கார்ந்து இருப்பார் பார்த்தீங்களா அதேதான் இது. அதாவது நாம வெட்டியாக சும்மாவே உட்கார்ந்திருந்தாலும்கூட சும்மாவே தொடர்ந்து உட்கார்ந்து இருக்கிறோம். பார்த்தீங்களா? அதுவும்கூட ஒரு வேலைதான்னு சொல்ல வர்றதுதான் இந்த விதி. ஆக்‌சுவலி நியூட்டனுக்கு நிறையப் பேர் நன்றி சொல்ல வேண்டிய ரூல்ஸ் இதுதான். இனி யாராச்சும் உங்களை டீஸ் பண்ணினா, இந்த ரூல்ஸை சொல்லி வாயில பிளாஸ்திரி ஒட்டுங்க!

நியூட்டனின் மூன்றாம் விதி: இது ஓரளவுக்கு எல்லோருக்கும் தெரிஞ்ச விதிதான். நமக்கு ஒருத்தன் ஆப்பு அடிக்கிறான்னா பதிலுக்கு நாம அவனுக்கு  ரிவீட் அடிக்கிறது. இதை டைட்டிலாக வச்சு எஸ்.ஜே சூர்யா படமே நடிச்சிருக்கார்ங்கிறதால இதுக்கு மேல விளக்கம் தேவையில்லனு நினைக்குறேன்.

கெப்ளரின் முதல் விதி: அதாவது இந்த விதியை நம்ம ஏரியாவுலேயே கூட பார்க்கலாம் மக்களே. சிம்பிளா சொல்லணும்னா, மொட்டைமாடியில் ஒரு பொண்ணு துணி காயப் போட்டுக்கிட்டோ, போன் பேசிக்கிட்டோ இருக்குனு வைங்க. அந்த வீட்டு காம்பவுண்டையே எல்லாப் பயலுகளும் பைக்குல ரவுண்டா சுத்தி சுத்தி  வட்டம்போட்டுக்கிட்டு வருவாங்க பார்த்திருக்கீங்களா. அதான் அதேதான்!

லென்ஸ் விதி: ஒரு பொண்ணுமேல நமக்கு அது இருக்குதுன்னு வைங்க... அட அதாங்க அந்த இது இருக்குதுன்னு வைங்க, நாம ஒரு லவ் கேம் ஆட ஸ்டார்ட் பண்ணுவோம். ஆனா, சரியாக அப்ளை ஆகாம கேனத்தனமா ஏதாவது பண்ணி அந்தப் பொண்ணே காண்டாகிற மாதிரி ஆகிடுச்சுனு வைங்க. அந்தப் பொண்ணே காரித்துப்பிட்டு கடையைச் சாத்திட்டுப் போயிடும். நாட்டுல இப்போ அதிகமா அப்ளை ஆகிட்டு இருக்கிற விதி இந்த விதியாதான் இருக்கும். ஸ்ஸ்ஸ்ஸப்பா... என்னா அடி!

இராமன் விளைவு: பெருசா ஒண்ணும் இல்லைங்க. ஏற்கெனவே நல்லாத் தெளிவா இருக்கிற நம்ம போட்டோவை ஏதாவது ஆன்லைன் போட்டோ எடிட்டர்ல ஃப்ரீ எடிட்டிங் பண்ணோம்னா இன்னும் கொஞ்சம் பார்க்கிற மாதிரி இருக்கும்ல. அதுதான் இராமன் விளைவு. பலபேரு இதைத்தானே பண்ணிக்கிட்டு இருக்குறாங்க .

பரப்பு இழுவிசை: இதுக்கு வேற எங்கேயும் லாம் போக வேண்டியது இல்லை மக்களே. நம்ம ஊர் ஹோட்டல்களே போதும். ஆஃப்பாயில் போட முட்டையை உடைச்சுக் கல்லுல ஊத்தும்போது சூட்டுல  அந்த சைஸ் மாறி அப்படியே எல்லாப் பக்கமும் சம அளவில் உள்ளே இழுத்து சுருங்கும் பார்த்திருக்கீங்களா (பார்க்கலைனா இனிமே பாருங்க) அந்த மேட்டர்தான் இந்த மேட்டர்.

ஓம் விதி: க்ளைமேட் நல்லா இருக்கும்போது கரன்ட் இருந்துச்சுனாகூட அப்படி ஒண்ணும் பெருசா தெரியாது. கரன்ட் கட் ஆச்சுனா செம கடுப்பு ஆகும்ல, அதுதாங்க இது. இருக்கிறதிலேயே கொஞ்சம் டேஞ்சரான விதிதாங்க இது. நம்ம ஊர்ல ஆட்சிமாற்றமே நடந்திருக்குனா பார்த்துக்கோங்க.

நியூட்டனின் பொது ஈர்ப்பு விதி: ரொம்ப ரொம்ப முக்கியமான, நாம கவனிக்க வேண்டிய விதி இதுதாங்க. ஏன்னா உலக தத்துவத்தையே இது சொல்லி வச்சிருக்குது. அதாவது, உலகத்துல உள்ள யார் மேல எது மேல வேணும்னாலும் அன்பு செலுத்துனா அதேமாதிரி  ஈர்ப்போட அவங்களும் ட்ரீட் பண்ணுவாங்க. ஆனா, நாம டிஸ்டர்ன்ஸ் மெயின்டெயின் பண்ணுறோம்னு வைங்க, நாம காட்டுகிற டிஸ்டன்ஸைவிட விட அவங்க இரண்டு மடங்கு தூரம் நம்மை ட்ரீட் பண்ண ஆரம்பிச்சுடுவாங்க... ஏன்னா அவங்களுக்கும் அச்சம், மடம், நாணம், அது, இதெல்லாம் இருக்கத்தானே செய்யும்.  ஸோ... எல்லாரையுமே லைக் பண்ணுவோமே மக்களே..