Published:Updated:

ரஜினி, ரசிகர்களை சந்திக்கிறது எதுக்குன்னு தெரியுமா..?!

ஜெ.வி.பிரவீன்குமார்
ரஜினி, ரசிகர்களை சந்திக்கிறது எதுக்குன்னு தெரியுமா..?!
ரஜினி, ரசிகர்களை சந்திக்கிறது எதுக்குன்னு தெரியுமா..?!

மே 15 முதல் தன்னுடைய ரசிகர்களை சந்திக்கப்போறதாக சொல்லிருக்கார் ரஜினிகாந்த். சரி இந்த தடவை ரசிகர்களைச் சந்திக்க இருக்குற ரஜினிகாந்த் என்னவெல்லாம் சொல்ல வாய்ப்புகள் இருக்குதுன்னு பார்க்கலாமா மக்களே ...

* தலைவர் எதோ புதுசாக சொல்லப் போறார்னு ஆவலோட போன ரசிகர்களை உட்காரவைத்து, 'ரசிகர்களை மீட் பண்ணுறேன்னு கொஞ்சநாளைக்கு முன்னாடி எல்லார்கிட்டயும் வாக்குக்கொடுத்தேன். அது மிஸ் ஆகிடுச்சு. அதனாலதான் இப்பக்கூப்பிட்டு மீட் பண்ணுறேன். கொடுத்தவாக்கைக் காப்பாத்தணும்னுதான் இப்படி செஞ்சேன் மத்தபடி என்னத்தப் பேசுறது?' என பால்கனியிலேயே நின்று கொண்டு அறிக்கை விட்டு  'பல்ப்' கொடுத்தாலும் கொடுக்கலாம்.

* ஆளாளுக்கு விதவிமாக படத்துக்கு புரொமோட் பண்ணிக்கிறாங்க. அதுமாதிரி வித்தியாசமாக  தனது அடுத்த படத்துக்கான புரோமோசனுக்காகக்கூட ரசிகர்கள் எல்லாரையும் கூப்பிட்டு ஹைப் ஏத்தி ட்ரிக்காக மீட்டிங்கிலே அறிவிப்பை வெளியிடலாம். அட, படத்துக்கு புரோமோசன் பண்றதுல என்னங்க தப்பு இருக்குன்னு ரசிகர்களும் முண்டி அடித்துக்கொண்டுபோய் அவரைச் சந்தித்துவிட்டு வரலாம். ஏன்னா அவரை பார்த்தா மட்டும் போதும்.

* யாருக்குத் தெரியும், “துபாய்க்கே போகலாமா இல்ல ஓரஞ்சாரமா உட்கார்ந்து தொழில் பண்ணலாமா''ன்னு வடிவேலு கிளி சோசியம் பார்ப்பது போல, சீரியசாகவே வரலாமா வேணாமா, நம்பலாமா நம்பக்கூடாதா, இருக்குதா இல்லையா என ரசிகர்களிடம் அரசியல் பற்றி டிஸ்கஸ் செஞ்சாலும் கூட செய்யலாம். ஆனா அந்தமாதிரி எல்லாம் நடக்க வாய்ப்புகள் மிக மிகக்குறைவு என்பதுதுதான் பழைய வரலாறுகள் நமக்கு சொல்கிற குறுந்தகவல்கள். வரலாற்றைப்புரட்டிப் போடுவாரான்னு இனிமேல்தான் தெரியும்.

* 'கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்னாரு'ங்கிறதுக்கு எல்லாம் முன்னாடி இருந்தே  ஃபேமஸாக இருக்கிற 'அரசியலுக்கு வருவீங்களா மாட்டீங்களா'ங்கிற 10856***.... வது தடவையாக கேட்கப்படுகின்ற அந்த எபிக்  கேள்விக்கு, 'எல்லாம் ஆண்டவன் கையில தான் இருக்கு'ங்கிற அந்த பதிலையே 10856***... வது தடவையாகவும் சொல்லிவிட்டு ஏதோ முதல் முறையாக இப்பதான் அந்தக் கேள்வியைக் கேட்டு அதுக்கு இந்தப்பதிலைச் சொன்னதுபோல முகத்தை வைத்துக் கொண்டு சிரித்து, தனது தாடியைச் சொறியவும் அதிக வாய்ப்புகள் இருக்கிறது.

* 'நான் கூப்பிட்டதை மதிச்சு அம்புட்டுப் பேரும் வந்துருக்கீங்க. சரி வந்தது வந்துட்டீங்க. அப்டியே எல்லோரும் நான் நடிக்கப்போகிற அடுத்த படத்துக்கான பஞ்ச் டயலாக்குகளை துண்டுச் சீட்டுகள்ல தனித்தனியா  எழுதிக்கொடுத்துட்டுப் போங்க. யாரோடது பெஸ்ட்டோ அதை படத்துல யூஸ் பண்ணிக்கிறேன்' என தமிழ் சினிமாவில் ஒரு புது ட்ரெண்டையே உருவாக்கி ரஜினியை 2.0 வாக அப்டேட் செய்துகொள்ளலாம்.

* 'எதுக்காக உங்களைக் கூப்பிட்டுருக்கேன்னா... உங்க எல்லார்கிட்டயும் ஒரு குட்டிக்கதை ஒண்ணு சொல்லணும்னு நினைச்சேன், அதுக்காகத்தான் வரச்சொன்னென்' எனச் சொல்லிவிட்டு 'ஆனா அந்தக்குட்டிக்கதையை சொல்றதுக்கு முன்னாடி உங்க எல்லார்கிட்டயும் குட்டிக்கதை ஒண்ணு சொல்றேன்' எனச் சொல்லி சர்காஸம் செய்து சாம்பாரை ஊற்றலாம்.

* இதையெல்லாம் விட 'ஏற்கனவே சந்திப்பதாகச் சொல்லி பிறகு சந்திக்க முடியாமல் போனது போல, இந்த தடவையும் 15ம் தேதி ரசிகர்களைச் சந்திப்பதாகச் சொன்னதை நான் வாபஸ் வாங்குகிறேன். மீண்டும் ஒருநாளைக்கு சந்திக்கிறேன், அந்த தேதியை விரைவில் அறிவிப்பேன்' என சொன்னாலும் சொல்லி மீட்டிங்கையேகூட ரத்து செஞ்சாலும் செய்யலாம்.