வெளியிடப்பட்ட நேரம்: 17:20 (12/05/2017)

கடைசி தொடர்பு:18:05 (12/05/2017)

திரையரங்கம் இனி உங்கள் உள்ளங்கைகளில்! (Sponsored Content)

 

 

ஏர்போர்ட்டில் இருந்து தந்தையைக் காரில் அழைத்து வந்துகொண்டிருந்த வருண், தந்தையைப் பார்த்தபடியே வாகனத்தைச் செலுத்திக் கொண்டிருந்தான். சிறுவயதில் தன்னை சைக்கிளில் வைத்து அழைத்துக் கொண்டு தியேட்டருக்குச் சென்றதும், அங்கே சூப்பர் ஸ்டாரின் அறிமுகத்திற்கு தந்தை விசிலடித்ததும் ஆர்ப்பரித்ததும் இன்றும் அவன் நினைவில் இருக்கிறது. அன்று படம் பார்த்துக் கொண்டிருக்கும்போது ஒருமுறையாவது சிங்கப்பூர் சென்று ‘அக்கரைச் சீமை அழகினிலே’ பாடலில் வரும் இடங்களை எல்லாம் பார்த்துவிடவேண்டும் என்று அவர் கூறியதும் அவன் நினைவில் வந்துபோனது. இன்று அதே சிங்கப்பூரில் தன்னுடைய காரில் அந்த இடங்களை எல்லாம் காண்பித்துக் கொண்டே சென்று கொண்டிருந்தான்.

heroTalkies

 

சினிமா ரசிகரான அப்பாவிற்கு இப்போதும் ரஜினி படங்கள் என்றால் அலாதி பிரியம். எந்தத் தொலைக்காட்சியில் போட்டாலும் அமர்ந்து பார்க்க ஆரம்பித்துவிடுகிறார் என்று தங்கை கூறுவாள். எப்போதும் திரையரங்கம் சென்று பார்க்கும் வழக்கமுடைய அப்பா, ‘திரைப்படங்களை திரையரங்கில் பார்க்கும்போதுதான் அதன் துல்லியமான ஒலிகளையும், அழகான காட்சியமைப்புகளையும் கண்டு ரசிக்க முடியும்’ என்று கூறுவார். பல கிலோமீட்டர்கள் சைக்கிளில் பயணம் செய்து நல்ல ஒளி/ஒலியமைப்புடைய திரையரங்கிற்கு அழைத்துச் செல்வார். அதனால்தானோ என்னவோ அவருக்கு திருட்டு விசிடிக்களில் பார்ப்பதோ, ஆன்லைனில் தரவிறக்கம் செய்து பார்க்கும் படங்களையோ பார்ப்பது பிடிக்காது. அதில் படம் பார்த்த திருப்தி இருக்காது என்பதுடன் ‘பைரசி’ முறையில் படங்களைப் பார்க்கும்போது அந்த திரைப்படத்தில் பணிபுரிந்தவர்கள் குடும்பத்திற்கு நம்மையும் அறியாமல் துரோகம் செய்கிறோம் என்று கூறுவார்.

HeroTalkies

 

அப்பா பழைய படங்கள் என்றால் மிகவும் ரசித்துப் பார்ப்பார். எண்பது, தொண்ணூறுகளில் வந்த படங்களில் உள்ள கதையம்சம், இன்றைய திரைப்படங்களில் இருப்பதில்லை என்பது அவர் கருத்து. அதனால் அவருக்கு ஒரு சில புதிய படங்கள் மட்டுமே பிடிக்கிறது. அவர் இங்கே தங்கியிருக்கும் நாட்களில் அவருக்கு விருப்பமான படங்களைக் காண்பிக்கவேண்டும் என்று எண்ணினான் வருண். நல்ல தரத்துடன் பழைய படங்களை பார்க்க என்ன வழி இருக்கிறது என்று நண்பன் சீனுவிடம் கேட்டபோதுதான் முதல்முறையாக ஹீரோ டாக்கீஸ்.காம் (www.herotalkies.com)  பற்றிக் கேள்விப்பட்டான்.

 

ஹீரோ டாக்கீஸில் 850 திரைப்படங்களுக்கு மேல் காணக்கிடைக்கிறது. அதில் ஏராளமான பழைய திரைப்படங்களும் நல்ல ஒலி/ஒளிக் கலவையுடன் கிடைக்கிறது. வெளிநாட்டில் வாழும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு, நல்ல திரைப்படங்களை தரமான 1080P HD குவாலிட்டியில் பார்க்க இது ஒரு சிறந்த தளம். ரொமேன்ஸ், ஆக்க்ஷன், பாடல்களுக்கென பிரபலமான படங்கள், நகைச்சுவைப் படங்கள் என பல்வேறு வகை திரைப்படங்களையும் வீட்டில் இருந்தபடியே 5.1 Surround Sound தொழில்நுட்பத்துடன் காணலாம். இந்த தளத்திற்கென ஆன்ட்ராய்டு, ஆப்பிள் ஆப்புகள் இருப்பதால் மொபைல் போன், டேப்லெட், லேப்டாப் என எதில் வேண்டுமானாலும் கண்டுகளிக்கலாம்.

HeroTalkies

 

குரோம்காஸ்ட், ஆப்பிள் டிவி, ரோகு போன்றவற்றின் உதவியுடன் உங்கள் வீட்டு தொலைக்காட்சியிலும் குடும்பத்துடன் அமர்ந்து, பார்த்து ரசிக்கலாம் என்று சீனு கூறியபோதே ஒரு சிறிய தொகையைச் செலுத்தி ரெஜிஸ்டர் செய்துகொண்டான் வருண். 82 நாடுகளில் பயனாளர்களைக் கொண்டுள்ள ஹீரோ டாக்கீஸ்.காம் 2-6 வாரங்களுக்குள் வெளியான புதிய திரைப்படங்களையும், எண்பதுகளின் பசுமையான நினைவுகளையும்  நம் கண்முன் நிறுத்துகிறது. தன் தந்தைக்கு இது ஒரு நல்ல பரிசாக இருக்கும், தனக்கும் புதிய திரைப்படங்களை பார்க்க வசதியாக இருக்கும் என்ற மனநிறைவுடன் சென்றான் வருண்!

வெளிநாடுகளில் மக்களின் சிறப்பான வரவேற்பைப் பெற்றுவரும் ஹீரோ டாக்கீஸ், விரைவில் இந்தியாவிற்கும் வர இருக்கிறது.


டிரெண்டிங் @ விகடன்