Published:Updated:

'தல- தளபதி' சண்டையை நிறுத்த இதுதான் வழி!

'தல- தளபதி' சண்டையை நிறுத்த இதுதான் வழி!
'தல- தளபதி' சண்டையை நிறுத்த இதுதான் வழி!

தல-தளபதி சண்டைங்கிறது அவங்கவங்களோட படம் வந்தாதான்னு இல்லை. நாட்டில் என்ன நடந்தாலும் அதிலே புகுந்து அதை தல-தளபதி ரசிகர்கள் சண்டையாக மாத்துறதைப் பார்த்திருக்கோம். சரி அப்படிப்பட்ட தல-தளபதி ரசிகர்கள் சண்டையை எப்படியெல்லாம் நிறுத்தலாம்னு உட்கார்ந்து யோசிக்கும்போது கிடைச்ச ஐடியாஸ்தான் இதெல்லாம்.

 * விஜய்யும், அஜித்தும் இணைந்து நடிச்சிருந்த ‘ராஜாவின் பார்வையிலே’ படத்தை வாரத்துல ஒரு தடவ பார்த்து ஆக்ரோசத்தைக் குறைக்கலாம். ரொம்ப முத்திய நிலையில் இருப்பவர்கள் வாரத்தில் எட்டு தடவை  கூட பார்த்து பொங்கலை தணிக்கலாம். அதிலும் விஜய்யும், அஜித்தும் மீட்டிக்கொண்டு வசனம் பேசும் அந்தக்காட்சியை மட்டும் gif ஃபைலாகக் கூட மாற்றி கவர்போட்டோல வைச்சு அடிக்கடி பார்த்து பரவசம் அடைந்துகொள்ளலாம்.

* 'கண்ணாமூச்சி ரேரே கண்டுபிடி யாரு', 'ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார்‘ னு ரைம்ஸுகளை  எல்லாம் மனப்பாடம் செய்து வைத்துக்கொண்டு தலடாவ்வ்வ்- தளபதிடாவ்வ்வ்வ் என  சண்டை போடுகிற ரசிகர்கள், அதற்குப் பதிலாக 'அஜித்தும் விஜய்யும் ஒண்ணு; இதை அறியாதவன் எல்லாம் மண்ணு' னு  புதிதாக  ஒரு  ரைம்ஸை உருவாக்கி அதை அடிக்கடி சொல்லிப்பார்த்துக்கொண்டு 'ஹாய் ஃபிரெண்ட்ஸ்ஸ்ஸ்...' என நட்பை வளர்க்கலாம்.

 * விஜய் வேதாளமாக 'புலி'யில் நடிச்சு, அஜித் அதையே தனது படத்துக்குப் பெயராக வைச்சதுமாதிரி,  'வேதாளம்' படத்தில் 'தெறிக்கவிடலாமா...' என்கிற அஜித்தின் டயலாக்கிலிருந்தே தனது அடுத்த படத்துக்கு 'தெறி' என விஜய் வைச்சதுமாதிரி  இருவரும் பின்னிப் பிணைஞ்சு ஒட்டி உறவாடியே இனிவரும்  தங்களது  படங்களுக்கும் அதேமாதிரி பேர் வைச்சு ரசிகக் கண்மணிகளை சாந்தப்படுத்தலாம்.

* 'மனிதன்' என்கிற வார்த்தையையே தமிழ் இல்லை என அகராதியிலிருந்தே தூக்குனது மாதிரி ‘தளபதி’ங்கிற வார்த்தைப் பிரயோகத்தையே மொத்தமா தூக்கிட்டு இனிமே தலையையும் தளபதியையும் ஜாயின்ட் பண்ணி  ‘தலபதி’னு மட்டுமே சொல்லணும்னு ரசிகர்கள் தங்களுக்குள்ளாக உறுதிமொழி எடுத்துக்கொள்ளலாம். கெஸட்டிலேயே கூட 'தளபதி'யை இனிமேல் 'தலபதி' என மாத்துங்கனு அரசுக்கு கோரிக்கை வைக்கலாம். ஆனால் 'உதயநிதியோட டைட்டிலைத்தான் தமிழ் இல்லைனு சொன்னீங்கனு பார்த்தா என்னோட பேரையே தளபதின்னு சொல்லவிட மாட்டீங்க போலயே. இது அநியாயம்' என சட்டையைகிழித்துக்கொண்டு ஸ்டாலின் கத்தி தல-தளபதி சண்டையானது தி.மு.க-அ.தி.மு.க சண்டையாகவெல்லாம் மாறினால் அதற்கு நிர்வாகம் பொறுப்பேற்காது.

* ஹை..! விஜய் மூணு எழுத்து அஜித்தும் மூணு எழுத்துதான்  இடையில எதுக்கு கழுத சண்டை போட்டுக்கிட்டுன்னு இருவரும் சமாதானமாகப் போகலாம். அப்படி நல்லாப்போயிக்கிட்டு இருக்கும்போது 'ஆனா அஜித்குமார்னு சொன்னா ஆறெழுத்து தானே வருது'ன்னு யாராவது கொளுத்திப்போட்டு ஆட்டத்துல புகுந்தா, 'ஜோசப் விஜய்யும் ஆறெழுத்துதான்' னு நெவர் எவர் கிவ் அப்பாக  ரிவென்ஜ் பன்ச் அடிச்சு கேள்வி கேட்ட வாயை தெர்மாகோல் அட்டைகளை வாங்கி அடைக்கலாம்.

* விஜய் படம் வந்தால் அஜித் ரசிகர்கள் ஹேஸ்டாக் போட்டு வாழ்த்துறது, அஜித் படம் வந்தால் விஜய் ரசிகர்கள் 'ஹேஸ்டாக்' போட்டு வாழ்த்துறதுனு புதுசா எதையாவது ஆரம்பிச்சு வைக்கலாம். ஷேரிங் நல்லதுங்கிறதால ரசிகர் மன்ற டிக்கெட்டுகளைக்கூட மாறிமாறி ரெண்டுபேரும் ஷேர் பண்ணிக்கலாம்.

ஆனா இதெல்லாம் நடக்கும்னு நம்பலாமா?னு கேட்டா அதுக்குப்பதில் தெரியாது மக்களே... நம்பிக்கை அதானே எல்லாம்!