Published:Updated:

"வாவ்... நயன்தாரா என்னை தேடிப் பிடிச்சு பாராட்டினாங்க!" மியா ஜார்ஜ்

"வாவ்... நயன்தாரா என்னை தேடிப் பிடிச்சு பாராட்டினாங்க!" மியா ஜார்ஜ்
"வாவ்... நயன்தாரா என்னை தேடிப் பிடிச்சு பாராட்டினாங்க!" மியா ஜார்ஜ்

"எங்க குடும்பத்துல யாரும் சினிமால இல்லை. எனக்கும் சினிமால யாரையுமே தெரியாது. நான் நடிக்க யார்கிட்டயும் போய் வாய்ப்பு கேட்கலை. நடிப்பதற்காக சின்ன பயிற்சி கூட எடுத்தது கிடையாது. ஆனாலும் நான் நடிகை ஆகிட்டேன். எப்படினு கேட்கறீங்களா? அதுக்கான விடையை கடைசியில சொல்லுறேன்." என அமர்க்களமாக ஆரம்பிக்கிறார் நடிகை மியா ஜார்ஜ். இவர் மலையாளத்தில் பல படங்கள் நடித்த பின்தான் 'அமரகாவியம்' படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார். 

"மல்லுவுட்ல அறிமுகமானதை கடைசியில சொல்லுறேன்னு சொல்லிட்டீங்க. கோலிவுட்ல எப்படி அறிமுகமானீங்க?"

"நான் கேரளாவுல நடிக்க ஆரம்பிச்சதுமே இங்க நிறைய படத்துல நடிக்க கூப்பிட்டாங்க. ஆனா, எனக்கு தமிழ் சரியா பேச வராததுனால, வந்த வாய்ப்பை எல்லாம் வேண்டாம்னு சொல்லிட்டேன். அப்புறம் என் தமிழ் ஃப்ரெண்ட்ஸ் கூட பேசி பேசி கொஞ்சம் கொஞ்சமா தமிழ் கத்துகிட்டேன். எனக்கே பேச முடியும்னு நம்பிக்கை வந்த பிறகுதான் இங்க நடிக்க வந்தேன். முதல் படம் 'அமரகாவியம்' கமிட் ஆனேன். நல்ல கேரக்டர் எனக்கு. உடனே என்னை எல்லாரும் கவனிச்சு பாராட்டினாங்க. சரி, இப்ப நான் தமிழ் கொஞ்சம் நல்லா பேசுறேன்ல..."

"அந்த படத்துக்காக நடிகை நயன்தாரா எல்லாம் கூப்பிட்டு பாராட்டினாங்களாமே?"

"ஆமாங்க. அதுதான் என் வாழ்க்கையில மறக்க முடியாத பாராட்டு. 'அமரகாவியம்' படத்தைப் பார்த்துட்டு என் நம்பரை தேடி பிடிச்சு கூப்பிட்டாங்க. 'நான் நயன்தாரா பேசுறேன். ரொம்ப இயல்பா நடிச்சு இருக்கீங்க'னு தொடங்கி தொடர்ந்து பாராட்டி தள்ளிட்டாங்க. எனக்கு என்ன சொல்லுறதுன்னே தெரியலை. 'ரொம்ப நன்றி.ரொம்ப நன்றி'னு மட்டும் சொல்லிட்டு இருந்தேன். நான் முதன்முதலில் தமிழில் நடிச்சு இருக்கேன். என்னை கூப்பிட்டு பாராட்டணும்னு அவங்களுக்கு எந்த அவசியமும் இல்லை. ஆனா, மனசார பாராட்டினாங்க. அதுதான் சார் நயன்தாரா..."

"இப்பவும் நயன்தாரா கூட டச்சுல இருக்கீங்களா?"

"இல்லைங்க. அவங்களை நேர்ல பார்த்தே ரொம்ப நாள் ஆச்சு. வாய்ப்பு கிடைச்சா சீக்கிரம் மீட் பண்ணுவேன்."

"மலையாளம், தமிழ்னு மாறி மாறி நடிக்கறீங்க. ரெண்டுக்கும் என்ன வித்தியாசம்?"

"நிறைய வித்தியாசம் இருக்குங்க. மலையாளத்துல ஒரே  ஷெட்யூலில் படத்தை எடுத்து முடிச்சுடுவாங்க. ஆனா, இங்க ரெண்டு, மூணு ஷெட்யூலில் படம் எடுப்பாங்க. அங்க பட்ஜெட் கொஞ்சம் கம்மி. இங்க அதிகம். அங்க குறைவான தியேட்டர்களில் தான் படம் ரிலீஸ் ஆகும். ஆனா, இங்க எக்கசக்கமான தியேட்டர்களில் படம் ரிலீஸ் ஆகும். இப்படி இன்னும் நிறைய சொல்லலாம்."

"இன்னமும் எந்த ஹீரோ கூட நடிக்கணும்னு ஆசை?"

"அப்படி குறிப்பிட்டு ஒருத்தர் கூட மட்டும் நடிக்கணும்னு எந்த ஆசையும் இல்லைங்க. நல்லா பேரு சொல்லுற மாதிரி நிறைய கேரக்டர் பண்ணனும். மியா ஜார்ஜ்னு ஒரு நடிகை செமய்யா நடிச்சானு காலம் கடந்தும் என் பேரு சொல்லணும். அதுதான் எனக்கு வேணும்."

" 'ஒருநாள் கூத்து' படத்துக்கு பிறகு நீங்க இன்னமும் எந்த படத்துலயும் கமிட் ஆகலையே ஏன்?"

"எனக்கு படபடனு நிறைய படங்கள் நடிக்கணும்னு ஆசை இல்லைங்க. 'ஒருநாள் கூத்து', 'அமரகாவியம்' மாதிரி ஹீரோயின் ஸ்கோப் உள்ள சப்ஜெக்ட் பண்ணனும்னு ஆசை. இப்ப ரெண்டு, மூணு கதைகள் கேட்டு இருக்கேன். இன்னமும் எதுனு முடிவு பண்ணலை."

"சரி, உங்களுக்கு நிறைய பேர் லவ் புரோபோசல் பண்ணி இருப்பாங்களே?" 

"ஆங்... அது எல்லாம் எக்கச்சக்கமா வந்திருக்குங்க. நான் ஜஸ்ட் ஸ்மைல் பண்ணிட்டு வந்திடுவேன். பெரிசா எடுத்துக்கமாட்டேன்."

"அதில், மறக்க முடியாதது எது?"

"அட, இம்ப்ரஸ் பண்ணுற மாதிரி, மறக்க முடியாத மாதிரி எல்லாம் ஒண்ணுமே வந்தது இல்லைங்க."

"உங்க அழகு சீக்ரெட் என்ன?"

"தினமும் உடற் பயிற்சி செய்வேன். ரொம்ப கம்மியா தான் சாப்பாடு சாப்பிடுவேன். டைமுக்கு தூங்கி டைமுக்கு எழுந்திருச்சுடுவேன். அவ்வளவுதான். இதை எல்லாருமே ஃபாலோ பண்ணலாம். சரி, பேட்டி முடியபோகுதுனு நினைக்கறேன். நான் நடிக்க வந்த கதையை சொல்லிடறேன். நான் சின்னதா மாடலிங் பண்ணிட்டு இருந்தேன். அதுல ஒரு போட்டோ ஒரு பத்திரிக்கையில வந்திருந்தது. அதைப் பார்த்துட்டுதான் என் வீட்டுக்கே வந்து நடிக்க கூப்பிட்டாங்க. யோசிச்சு 'ஒ.கே'னு சொன்னேன். இதுதான் நான் சினிமால இன்ட்ரோ ஆன ஸ்டோரி."