Published:Updated:

''நாங்க ஹீரோயினா இருக்க, எங்க அம்மாக்கள்தான் கஷ்டப்படுறாங்க!" - ஹீரோயின்கள் வாய்ஸ் #MothersDay

''நாங்க ஹீரோயினா இருக்க, எங்க அம்மாக்கள்தான் கஷ்டப்படுறாங்க!" - ஹீரோயின்கள் வாய்ஸ் #MothersDay
''நாங்க ஹீரோயினா இருக்க, எங்க அம்மாக்கள்தான் கஷ்டப்படுறாங்க!" - ஹீரோயின்கள் வாய்ஸ் #MothersDay

`மெக்கஃபீ இன்டெல் செக்யூரிட்டி' என்ற சர்ச் இன்ஜினில் 2017-ம் ஆண்டில் அதிகம் தேடப்பட்ட செலிபிரிட்டிகளில் ஒருவர்தான் நிக்கி கல்ராணி. தன் அம்மாவுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட போட்டோக்களை சமூக வலைதளங்களில் அதிகம் பகிரும் நடிகையும் இவர்தான்.``அம்மான்னா உங்களுக்கு எவ்வளவு பிடிக்கும்?'' என்ற கேள்வியைக் கேட்டபோதுதான் தெரியவந்தது இவரின் மதர்ஸ் டே ப்ளான்.

``மதர்ஸ் டே ஸ்பெஷலா அம்மாவுக்கு ஒரு சர்ப்ரைஸ் தரணும்னு ஒரு குட்டி ஆசை இருக்கு'' என்று வெட்கப்பட்டுச் சிரித்தபடியே பேச ஆரம்பிக்கிறார். "ஷி இஸ் நாட் ஒன்லி மை மதர்... ஷி இஸ் மை எவ்ரிதிங். அம்மாவைப் பற்றிக் கேட்டா ஒரு நாள் முழுக்கப் பேசிக்கிட்டே இருப்பேன். நான் கொஞ்சம் அம்மா சென்டிமென்ட் பொண்ணு" என்றார்.

``சினிமாவுக்குப் போகப்போறேன்னு நீங்க சொன்னப்போ, அம்மாவோட ரியாக்‌ஷன் என்ன?''

"ரொம்ப சந்தோஷப்பட்டாங்க. ஏன்னா... சின்ன வயசுல இருந்தே செஞ்ச தப்புகளை எல்லாம் திருத்தி, சரியான பாதையில் என்னை அழைச்சுக்கிட்டுப் போனதுனால, இப்போ நான் என்ன முடிவு எடுத்தாலும் சரியா இருக்கும்னு நம்புறாங்க. இதைத் தவிர வேற என்ன வேணும் ஒரு பொண்ணுக்கு?''

``அப்படி என்னென்ன தப்புகள் செஞ்சிருக்கீங்க... கியூட் ஸ்டோரீஸ் ப்ளீஸ்!''
``நான் சின்ன வயசுல இருந்தே ரொம்ப சேட்டை பண்ணுவேன். மாத்திரை சாப்பிடுறதுனா எனக்குப் பிடிக்கவே பிடிக்காது. அம்மா முன்னாடி மாத்திரை சாப்பிடுற மாதிரி போங்காட்டம் ஆடிட்டு, அவங்க போன பிறகு வீட்டுக்குப் பின்புறம் மாத்திரையைப் போட்டுப்  பொதைச்சிருவேன். இதை ஒருநாள் அம்மா பார்த்துட்டாங்க. அன்னியில இருந்து இன்னிக்கு வரைக்கும் மாத்திரை சாப்பிடுறதுல இருந்து தப்பவே முடியலை. அம்மா அவ்வளோ ஸ்ட்ரிக்ட் ஆபீஸர்.''

``ரோட்ல இறங்கி நோட்டீஸ் கொடுக்கிறது உள்பட, நீங்க நிறைய சமூகசேவைகள்ல ஈடுபடுறீங்களே... ஏன்?''
"ஆமா. சமூக சேவைகள்னு வரும்போது நான் ஒரு சாதாரண பொண்ணு. செலிபிரிட்டின்னு நான் ஒருநாளும் நினைச்சதே இல்லை".

```ஹரஹர மஹாதேவஹி'  ஏ-படமா... அந்த ஹஸ்கி வாய்ஸ் கேட்டிருக்கீங்களா?''
"இந்தப் படம் சைன் பண்ணதுக்கு அப்புறம்தான் அந்த வாய்ஸ் கேட்டேன். தமிழ் மக்களுக்கு நல்ல என்டர்டெயின்மென்ட்னு சொன்னாங்க. ஆனா, எனக்குத்தான் ஒண்ணும் புரியலை. எனக்கு ஏ-படம் பண்றது பற்றி எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனா, இந்தப் படம் அப்படி கிடையாது. இதுவரைக்கும் காமெடி, சீரியஸ், டிராமா, ஆக்‌ஷன்னு எல்லா சப்ஜெக்ட்களும் பண்ணியாச்சு. அண்ட் ஐ டோன்ட் மைண்ட் டூயிங் ஹாட் ஃபிலிம்ஸ். ஒரே ஒரு ஆசை என்னன்னா... ரஜினி சாரோடு ஒரு படம் பண்ணணும் ".

``அம்மாவுக்கு என்ன ஸ்பெஷல் வெச்சிருக்கீங்க... மதர்ஸ் டேக்கு உங்களோட கருத்து...''
"எல்லாரும் தன்னோட அப்பா-அம்மாவை முதியோர் இல்லத்துல விடுறதைக் கட்டாயம் நிறுத்தணும். இதோட கர்மா  எஃபெக்ட்  அடுத்த ஜென்மத்திலும் தொடரலாம். மதர்ஸ் டேல நான் வீட்டுக்கு சர்ப்ரைஸ் விசிட் போகலாம்னு இருக்கேன். என்னைவிட அம்மாவுக்கு வேற என்ன பெரிய கிஃப்ட் வேணும்? இந்த சர்ப்ரைஸை வேற யார்கிட்டயும் சொல்லிடாதீங்க" எனக் கொஞ்சு தமிழில் பேசும் நிக்கியின் `ஹர ஹர மஹாதேவஹி' ஜூன் மாத ஹாட் வரவேற்பைப் பெரும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

`பலே வெள்ளயத் தேவா' படம் மூலம் அறிமுகமானவர் நடிகை தன்யா. இவரது முதல் படத்திலேயே தன்னுடைய கேரக்டருக்கு டப்பிங்கும் பேசியுள்ளார்.

``உங்களோட மதர்ஸ் டே சர்ப்ரைஸ் என்னவா இருக்கும்?'’ 
```கருப்பன்' படத்தோட ஷூட்டிங் எனக்கு 15-ம் தேதிதான் முடியும். நீங்க வேணும்னா வீட்டுக்கு வந்து சர்ப்ரைஸ் பண்ணுங்களேன்'' கலகலவெனச் சிரிக்கிறார்.

``மதர்ஸ் டே பற்றி உங்க கருத்து...
``மதர்ஸ் டே மட்டும் இல்லை, எல்லா நாள்களையும் மதர்ஸ்க்காக அர்ப்பணிக்கணும். இதுக்காக ஸ்பெஷல் டே கொண்டாடுறதுல்ல பெருசா என்ன இருக்கு? ஏன்னா... அம்மாக்கள் இல்லாம மகள்களால என்ன பண்ண முடியும்?''

``கருப்பனுக்கு அப்புறம் உங்களோட அடுத்த ப்ளான் என்ன?''
``ம்ம்ம்ம்... அதைப் பற்றி இன்னும் யோசிக்கலை. டப்பிங் அண்ட் ஆக்டிங் ரெண்டுலயுமே கலக்கணும்னு மட்டும் ஆசை.''

``திரைத்துறையில உங்களோட இன்ஸ்பிரேஷனா, பிடிச்ச ஹீரோவா நீங்க யாரை நினைக்கிறீங்க?''
```எனக்கு இன்ஸ்பிரேஷன், ஹீரோ, ரோல்மாடல் எல்லாமே என் தாத்தா (ரவிச்சந்திரன்)தான். அவர்கிட்ட இருந்துதான் நான் நடிக்க கத்துக்கிட்டேன்.''

``சினிமாக்குப் போகப்போறேன்னு சொன்ன உடனே உங்க அம்மாவோட ரியாக்‌ஷன் எப்படி இருந்துச்சு? ''
``என்னதான் சினிமா ஃபேமிலியா இருந்தாலும், நடிப்புக்கு மொதல்ல 'நோ'ன்னுதான் சொன்னாங்க. கஷ்டப்பட்டு கன்வீன்ஸ் பண்ணினேன். ஆனா, இப்போ அவங்கதான் எனக்கு முழு சப்போர்ட்''  என்று அம்மாவை அன்புடன் அணைத்துக்கொள்கிறார் தன்யா.

- சுஜிதா

அடுத்த கட்டுரைக்கு