Published:Updated:

‘கட்டப்பா பாகுபலியைக் கொன்றதன் ரகசியம் காத்தது எப்படி?’ - சீக்ரெட் சொல்கிறார் கமலக்கண்ணன்!

‘கட்டப்பா பாகுபலியைக் கொன்றதன் ரகசியம் காத்தது எப்படி?’ - சீக்ரெட் சொல்கிறார் கமலக்கண்ணன்!
‘கட்டப்பா பாகுபலியைக் கொன்றதன் ரகசியம் காத்தது எப்படி?’ - சீக்ரெட் சொல்கிறார் கமலக்கண்ணன்!

‘கட்டப்பா பாகுபலியைக் கொன்றதன் ரகசியம் காத்தது எப்படி?’ - சீக்ரெட் சொல்கிறார் கமலக்கண்ணன்!

ஆயிரம் கோடி வசூல், குவியும் பாராட்டுக்கள், நிறையும் திரையரங்குகள்  என சிந்தனைக்கும் அப்பாற்பட்ட ஹிட் பாகுபலி 2. படத்தின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம் பிரம்மிக்கவைக்கும் விஷுவல் எஃபெக்ட்ஸ். பாகுபலி 2-விற்கான VFX பணிகளை மேற்கொண்டவர் கமலக்கண்ணன். படத்தைப் பற்றி பேசினால் பல நெகிழ்ச்சியான விஷயங்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

உங்களை பத்திச் சொல்லுங்க? 

ஆரம்பத்தில் விளம்பரங்களுக்கு சிஜி (கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ்) பண்ணிட்டு இருந்தேன். ‘இந்தியன்’ படம் தான் என்னோட முதல் வாய்ப்பு. அதைத்தொடர்ந்து ‘காதலர் தினம்’, ‘குஷி’னு தமிழ்ல கொஞ்ச படங்கள், அதுக்கப்புறம் மலையாளப் படங்கள் நிறைய பண்ண VFX - பண்ண ஆரம்பிச்சேன். தெலுங்கில் முதல் அறிமுகம் ராஜமெளலி சார் தான். அவரின் ‘சை’ படத்தில் தான் முதல்ல வேலை செஞ்சேன். தொடர்ந்து ‘எமதொங்கா’ ,‘மகதீரா’, ‘மரியாதை ராமண்ணா’ , ‘ஈகா’ என  ராஜமெளலி சாரோட படங்கள் தான் வேலை செஞ்சேன். லேட்டஸ்ட்டா ‘பாகுபலி 2’. 

உங்களுக்கும் ராஜமெளலிக்குமான நட்பு? 

எங்க இரண்டுபேருக்குமே நிறைய விஷயங்களில் ஒத்துப்போகும். சில சமயம்  ‘ரெண்டுல எது நல்லா இருக்கு’னு கேட்பார். நாம ஒண்ணு சொல்லுவோம். அதுக்கு எதிரா எதையாவது தேர்ந்தெடுக்குறது ராஜமெளலி சாரோட ஸ்டைல். ஆனா பாகுபலி 2-வில் நான் என்ன சொல்லுறேனோ அதை அப்படியே செயல்படுத்துறதுக்கான சுதந்திரம் கொடுத்தார். குறிப்பா தமிழ் பேச நல்லா கத்துக்கிட்டார். இரண்டுபேர் ஃபேமிலியுமே ரொம்ப நட்பாதான் இருக்கோம். ஸ்பெஷல் என்னென்னா, நான், ராஜமெளலி மற்றும் கீரவாணி மூன்று பேரோட தலைமுறையையும் இந்தப் படத்துல பார்க்கலாம். ராஜமெளலியின் தந்தை விஜயேந்திர பிரசாத், பையன் கார்த்திகேயன், கீரவாணியின் மகன் பைரவா, என்னோட மகன் அபினாஷ்னு மூன்று தலைமுறைகளின் படம் பாகுபலி. வேலைன்னு வந்துட்டா, நானும் ராஜமெளலி சாரும் நிறையவே சண்டை போடுவோம். நிறைய விவாதம் இருக்கும். ஆரோக்கியமான விவாதமா இருக்கும்.  

VFX - ன்னா என்னான்னு சுருக்கமா சொல்லுங்க? 

திரையில் பார்க்குற காட்சி, நிஜமான செட்டா அல்லது விஃபெக்ஸானு உங்களால் கண்டுப்பிடிக்க முடியாத அளவுக்கு ரியலா இருந்ததுன்னா அது தான் விஷுவல் எஃபெக்ட்ஸ். கற்பனைக்கு மீறிய விஷயங்களை ரியலா உங்க மனசுக்கு நெருக்கமா கொடுக்குறது தான். 

இந்தப் படத்தில் விஷுவல் எஃபெக்ட்ஸ் வேலைகள் எப்படி பண்ணீங்க? 

வெளிநாட்டு கம்பெனிகளுக்குத்தான் எஃபெக்ட்ஸ் வேலைகள் கொடுத்திருந்தோம். கதைக்கான ஸ்டோரி போர்ட்டு, கான்செப்ட் டிசைன் இரண்டும்தான் முதல் வேலை. ஒவ்வொரு சீனுக்கு குறைந்தது மூன்று மாதம் வேலை நடக்கும்.  அதுக்கப்புறம் சிஜி மற்றும் லைவ் ஷூட்டில் என்னவெல்லாம் இருக்கணும்னு நான் முடிவு பண்ணுவேன். அதுக்கப்புறம் தான் ஷூட்டிங் போவாங்க. இதுக்கு நடுவுல நடிகர்களுக்கான ரிகர்சல், சண்டைப்பயிற்சிகள்னு நடுவுல நடக்கும். சிஜியும், லைவ் ஷூட்டிங்கும் முடிவான பிறகுதான் படத்தையே ஆரம்பிப்போம். ஷூட்டிங் முடிஞ்சதும், ஷூட்டிங்கிற்கு ஏத்தமாதிரி சிஜி தயாராகும். இறுதியா எடிட்டிங் வேலைகள் தொடங்கும். எடிட்டிங்கும், சிஜியும் மாத்தி மாத்தி வேலை செய்யவேண்டி இருக்கும். இதுக்கு நடுவுல ராஜமெளலி சார் நிறைய மாத்த சொல்லுவார். ​​​​​​ராஜமெளலி சாரிடம் ஓகே வாங்குறது ரொம்ப சேலஞ்சிங்கான விஷயம். ​

பாகுபலி 2 சிஜி-யில் நீங்க கஷ்டமா நினைச்ச சீன் எது?  

ஹீரோ வாள் வச்சி, வண்டியை உடைக்கிற சீனுக்கு சிஜி பண்ணியிருப்போம். ரொம்ப கஷ்டமான ஆனா, எனக்கு ரொம்ப பிடிச்ச சீன் அது. ஆனா அந்த ஷாட் பத்தி யாருமே பேசலைங்கிறது தான் வருத்தம். 

உங்களுக்கு ரொம்ப பிடிச்ச காட்சிகளா இருக்கும், ஆனா எடிட்டிங்கில் ராஜமெளலி வெட்டி தூக்கச் சொல்லியிருப்பார். அப்போ எப்படி ஃபீல் பண்ணுவீங்க.

நிஜமாவே ரொம்ப கஷ்டமா இருக்கும்.  ரொம்ப விரும்பி செய்திருப்போம். ஆனா அசால்டா தூக்கிடுவார். அவருக்குமே கஷ்டமாதான் இருக்கும். ஆனா வெளிக்காட்டிக்க மாட்டார். படத்துக்கு எது பெஸ்ட்னு மட்டும்தான் பார்ப்பார். ஷூட்டிங் முடிஞ்ச கடைசி நாள் ‘சந்தோஷமாவும், வலியாவும் இருக்கு’ன்னு அவரே சொன்னார். 

பிரபாஸ், ராணா பத்திச் சொல்லுங்க? 

ஷூட்டிங் ஸ்பாட் போனாலே எழுந்து பேசிட்டுதான் மத்த வேலையைப் பார்ப்பார். பெரிய நடிகர், ஆனா ரொம்ப மரியாதையா நடந்துப்பார். தினமும் சாப்பாடு அவர் வீட்டுல இருந்து தான் வரும். ரொம்ப நல்ல மனிதர். ராணாவுக்கு விஷுவல் எஃபெக்ட்ஸ் பத்தி நிறையவே தெரியும். ஆனா என்னோட வேலையில் ஒருபொழுதும் தலையிட்டது கிடையாது. என் மேல அவ்வளவு நம்பிக்கை இருவருக்குமே. 

கட்டப்பா பாகுபலியை கொன்னதுக்கான விடை நிச்சயம் உங்க டீம்ல பலருக்கும் தெரிஞ்சிருக்கும். ஆனாலும் அது பற்றி ஒரு செய்தி கூட பட ரிலீஸூக்கு முன்னாடி வெளியாகலையே! எப்படி அந்த சீக்ரெட்டை ஒட்டுமொத்த டீமும் காப்பாத்துனீங்க? 

அந்த கேள்விக்கான விடை ஒரே வரியில் சொல்லிவிட முடியாது,  ஒவ்வொரு சீனும் மாத்தி மாத்தி தான் ஷூட் பண்ணியிருப்போம். அதுமட்டுமில்லாம கதை முழுமையா யாருக்கும் தெரியவும் வாய்ப்பில்லை. தவிர, டீம்ல எல்லோருமே வார்த்தைக்கு கட்டுப்பட்டு நடக்குறவங்க.

அடுத்த கட்டுரைக்கு