Published:Updated:

வடிவேலுவின் ஃபேமஸ் டயலாக்குகள்தான் இந்தப் படங்களின் டைட்டில்ஸ்!

தார்மிக் லீ
வடிவேலுவின் ஃபேமஸ் டயலாக்குகள்தான் இந்தப் படங்களின் டைட்டில்ஸ்!
வடிவேலுவின் ஃபேமஸ் டயலாக்குகள்தான் இந்தப் படங்களின் டைட்டில்ஸ்!

வடிவேலுவின் ஃபேமஸ் டயலாக்குகள்தான் இந்தப் படங்களின் டைட்டில்ஸ்!

டிவேலுவின் காமெடிகள் என்று சொன்னாலே சிரிப்பு வரும். இவர் நடித்த படங்களின் பெயர் கூட ஞாபகம் இருக்காது. ஆனால் இவரின் காமெடி வசனங்களை ஷார்ட் டெர்ம் மெமரி லாஸ் வந்தாலும் மனப்பாடமாய் ஒப்பிக்கலாம். அப்படி வடிவேலுவின் பேமஸ் பன்ச் டயலாக்குகளை டைட்டிலாக வைத்து வெளியான படங்களின் லிஸ்ட் இது!

நானும் ரௌடி தான் :

விஜய் சேதுபதி, நயன்தாரா நடிப்பில் வெளியான படம் 'நானும் ரௌடி தான்'. இந்த டயலாக்குக்கு சொந்தக்காரர் வடிவேலு. தலைநகரம் படத்தில் இடம்பெற்ற காமெடியில் 'ஏய் நான் ஜெயிலுக்கு போறேன்... ஜெயிலுக்கு போறேன், நானும் ரௌடி தான்' என்று சொன்ன டயலாக் அந்த சமயத்தில் பேமஸ் ஆனதோ இல்லையோ தற்பொழுதுள்ள மீம் க்ரியேட்டர்களின் முக்கியமான டெம்ப்லேட்களுள் இந்த வசனமும் ஒன்று. அப்படி இந்த பெயர் எல்லார் மனதிலும் பதிந்து போனதாலும், கதைக்கும் இந்த வசனத்திற்கும் தொடர்பு இருப்பதாலும் இயக்குநர் 'விக்னேஷ் சிவன்' இந்த டைட்டிலையே தேர்ந்துதெடுத்து வைத்துவிட்டார். படமும் டயலாக்கைப் போலவே தெறி ஹிட் அடித்தது.

த்ரிஷா இல்லேன்னா நயந்தாரா :

ஜி.வி. பிரகாஷ், ஆனந்தி, மனிஷா, சிம்ரன் நடிப்பில் வெளியான படம் 'த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா'. அதே தலைநகரம் படத்தில் த்ரிஷாவை வெறித்தனமான ரசிகனாக காதலிப்பார் வடிவேலு. ஆனால் ஒரு சமயத்தில் அவரது அத்தை பொண்ணைப் பார்த்தவுடன் த்ரிஷா இல்லேன்னா திவ்யா என்று சொல்லுவார், கடைசியில் திவ்யாவும் இல்லை என்று தெரிந்தவுடன் க்ளைமாக்ஸில் நயன்தாராவுக்கு தாவிவிடுவார். அந்தப் படத்தில் வடிவேலுவின் கதை என்னவோ, அதேதான் ஜி.வி. பிரகாஷின் கதையும். ஹீரோயிசம் செய்கிறேன் என வடிவேலுவுக்கு சமமாக காமெடி செய்திருப்பார் ஜி.வி. ஆனந்தியையும், மனிஷாவையும் அவர் விரட்டி விரட்டி காதலிக்க, முடிவில் யாருமே கிடைக்க மாட்டார்கள். இவரும் மனம் தளராமல் அனுஷ்கா, ஹன்சிகா என போய்க்கிட்டே இருப்பார்.

ஜில் ஜங் ஜக் :

பிரபு தேவா, நக்மா நடிப்பில் வெளியான படம் 'காதலன்'. வடிவேலுவின் காமெடிகள் அதில் அதிரி புதிரிதான். அந்தப் படத்தின் எவர்க்ரீன் டயலாக்தான் 'ஜில் ஜங் ஜக்'. இந்த மூன்று பெயரையும் வைத்து பெண்களுக்கு தனி டெஃபனிஷனே தருவார். அந்த டெஃபனிஷனை நானும் நண்பன் விஜய் மாதிரி சொல்லலாம், ஆனால் சிம்பு நிலைமைதான் பாஸ் எனக்கும் வரும். அந்த வசனத்தை டைட்டிலாக வைத்து சித்தார்த் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் 'ஜில் ஜங் ஜக்'. அந்த காமெடியில் இடம்பெற்றதைப் போலவே இந்தப் படத்தின் கதாநாயகர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு ரகம். அதனால் படத்தின் பெயரையும் இயக்குநர் தீரஜ் வைத்தி 'ஜில் ஜங் ஜக்' என்றே வைத்துவிட்டார்.

வெள்ளையா இருக்கவன் பொய் சொல்ல மாட்டான் :

பிரவீன், ஷாலினி நடிப்பில் 2015-ல் வெளியான படம் 'வெள்ளையா இருக்கவன் பொய் சொல்ல மாட்டான்'. இந்த வடிவேலு டயலாக் இடம்பெற்ற படம் 'ஆர்யா'. இதில் கவுன்சிலராக வரும் வடிவேலுவிற்கு பிரச்னை கொடுக்கும் வகையில் ஏரியா மக்களிடம் மாட்டிவிட்டு போய்விடுவார் மாதவன். அப்பொழுது இடம்பெறும் டயலாக்தான் 'சிகப்பா இருக்கவன் பொய் சொல்ல மாட்டான்டா'. அதையே கொஞ்சம் பட்டி, டிங்கரிங் பார்த்து படத்திற்கு டைட்டிலாக வைத்தனர். துரதிர்ஷ்டவசமாக அந்தப் படம் வெளியே தெரியாமலேயே பெட்டிக்குள் அடைந்தது. 

காதலும் கடந்து போகும் (க.க.போ) :

விஜய் சேதுபதி, மடோனா நடிப்பில் வெளியான படம் 'காதலும் கடந்து போகும்'. இதுக்கும் வடிவேலு வசனத்திற்கு என்னடா சம்பந்தம்? இதானே பாஸ் உங்க கேள்வி? இந்த டைட்டிலை கொஞ்சம் சுருக்கினால் வடிவேலுவின் டயலாக் கிடக்குமே அதான். 'புலிகேசி' படத்தில் அடிக்கடி இடம்பெறும் டயலாக் க.க.க.போ. 'கருத்துக்களை கச்சிதமாக கவ்விக்கொண்டீர் போங்கள்' என்ற வசனத்தை சுருக்கி அவ்வாறு சொல்லுவார் வடிவேலு. இந்த வசனத்திற்கும் படத்தின் கதைக்கு சம்பந்தம் இல்லைதான். இருந்தாலும் அந்த டைட்டிலை சுருக்கினால் இவர் டயலாக் தானே கிடைக்கிறது. படக்குழு செய்த புரொமோஷனைப் பார்த்து க.க.க.போ என்றே ஒரு படம் வெளியானது தனிக்கதை.

கூடிய சீக்கிரம் இவரது ஃபேமஸ் டயலாக்குகளுள் ஒன்றான 'ஆஹான்' என்ற டைட்டிலைக் கொண்ட படமும் ரிலீஸ் ஆகும் பாருங்க மக்களே. இவரது வசனங்கள் இருக்கும் வரை தமிழ் படங்களின் டைட்டில்களை தனியே ரூம் போட்டு யோசிக்கத் தேவையே இல்லை.

அடுத்த கட்டுரைக்கு