`` `விவேகம்' வெளிவந்தால் அஜித் வேற லெவலுக்குப் போய்விடுவார்’' - சிலாகிக்கும் சிவா!

இதுவரை அஜித் நடித்து வெளிவந்த எந்தத் திரைப்படத்திலும் அதன் பெரும்பகுதி வெளிநாட்டில் படமாக்கப்பட்டதில்லை. முதன்முறையாக ‘விவேகம்' படத்தின் படப்பிடிப்பு 72 நாள்கள் ஐரோப்பிய நாடுகளில் நடந்து முடிந்திருக்கிறது. இயக்குநர் சிவா உள்ளிட்ட ‘விவேகம்‘ படக்குழு, சென்னைக்குத் திரும்பிவிட்டது. வெளிநாட்டில் எடுக்கப்பட்ட காட்சிகளை ரஷ் பார்க்கும்போது, `இன்னும் சூப்பராக இருக்கிறது' என்று பிரமிக்கிறது படக்குழு.

விவேகம் - சிவா

அஜித், தன் கட்டுமஸ்தான உடலைக் காட்டியபடி நிற்கும் ‘விவேகம்'  புகைப்படம், முகநூலில் ஆயிரக்கணக்கில் லைக்ஸை அள்ளியது. ஒருசிலர் ‘இது ‘தல’ ஒரிஜினல் உடம்பு இல்லை. எல்லாம் கம்ப்யூட்டர் கைங்கர்யம்' என்று கமென்ட் போட்டதைப் பார்த்துவிட்டு அவரது நெருங்கிய நண்பர்கள் எரிச்சலடைந்தார்கள். ‘`அஜித்துக்கு பேக் பெயின் இருப்பது எல்லாருக்குமே தெரியும். `ரொம்ப ரிஸ்கெல்லாம் எடுத்து உடற்பயிற்சி செய்யக் கூடாது' என்று டாக்டர்கள் எவ்வளவோ எச்சரித்தும் கேட்காமல், தினசரி காலையில் நான்கு மணி நேரம் வியர்வை வழிய வழிய உடற்பயிற்சி செய்து உருவாக்கிய உடலைப் பார்த்து அசால்ட்டாக `கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ்'னு கமென்ட் அடிச்சா என்னங்க அர்த்தம்? ’’ என்று நம்மிடம் அங்கலாய்த்தார் அஜித்தின் நெருங்கிய வட்டாரத்தைச் சேர்ந்த ஒருவர்.

‘விவேகம்' படத்துக்காக வெளிநாட்டில் படமாக்கப்பட்டிருக்கும்  பிரமாதமான சண்டைக்காட்சி, ஹாலிவுட் படங்களுக்கே  சவால்விடுமாம். படத்தில் இடம்பெறும் ஒவ்வொரு நடிகரின் கேரக்டரையும்  பார்த்துப் பார்த்துச் செதுக்கியிருக்கிறார் இயக்குநர் சிவா. இதுவரை இவரை `சிறுத்தை' சிவா என்று அழைத்தவர்கள், இனிமேல் ‘விவேகம்' சிவா என்றே அழைப்பார்களாம்.  

படத்தின் டீசர் வெளியாகி இன்னும் ஒரு வாரம் கூட ஆகாத நிலையில், அதற்குள் 1 கோடி ஹிட்ஸை கடந்து சாதனை புரிந்துள்ளது விவேகம் டீசர். 

 

 

     

அஜித் - சிவா கூட்டணியில் வெளிவந்த ‘வீரம்' ‘வேதாளம்' படத்தில் இடம்பெற்ற நடிகர்கள் ‘விவேகம்' படத்தில்  இடம்பெறக் கூடாது என்பதில் மிகுந்த கவனம் செலுத்தியிருக்கிறார் இயக்குநர் சிவா. அதுமட்டுமல்ல, முந்தைய படங்களின் சாயல் துளிகூட இந்தப் படத்தில் இருக்கக் கூடாது என்பதிலும் தெளிவாகச் செயல்பட்டிருக்கிறார். அதனால்தான் அஜித்துடன் இதுவரை ஜோடியாக நடித்திராத காஜல் அகர்வாலை ஹீரோயினாக நடிக்கவைத்துள்ளார். ‘விவேகம்' படத்தின் மூலம் தமிழ்த் திரைக்கு முதன்முறையாக அறிமுகமாகும் அக்ஷராவுக்கு வித்தியாசமான கேரக்டர். அஜித்துடன் மோதும் வில்லனாக விவேக் ஓபராய் நடிக்கிறார். ‘`இதுவரை வெளிவந்த அஜித் படத்தின் எந்தச் சாயலும் ‘விவேகம்' படத்தில் தெரியவே தெரியாது. ‘விவேகம்' படம் ரிலீஸான பிறகு, அஜித்தின் லெவலே வேற!'' என்று தனக்கு நெருக்கமான நண்பர்களிடம் கூறி சிலாகிக்கிறார் இயக்குநர் `விவேகம்' சிவா.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!