Published:Updated:

ரஜினி அரசியலுக்கு வருவாரா - அவரது ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள்?

ரஜினி அரசியலுக்கு வருவாரா - அவரது ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள்?
ரஜினி அரசியலுக்கு வருவாரா - அவரது ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள்?

ரஜினி அரசியலுக்கு வருவாரா - அவரது ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள்?

சிகர்களைச் சந்தித்து போட்டோ எடுத்துக்கொள்ளும் நிகழ்ச்சியின் தொடக்க விழாவிலே, சினிமா, அரசியல் என அனைத்தைப் பற்றியும் ரசிகர்களுடன் பகிர்ந்துகொண்டார் ரஜினிகாந்த். இதற்கு ரசிகர்களின் ரியாக்‌ஷன்...

கரூர் மாவட்ட ரஜினி ரசிகர் மன்றத் தலைவர் கே.எஸ்.ராஜா "நான் 38 ஆண்டுகளாக கரூர் மாவட்ட ரஜினி ரசிகர் மன்றத் தலைவரா இருக்கேன். சூப்பர் ஸ்டார்னா எனக்கு உயிர். ரசிகர்கள்கூட தலைவர் போட்டோ எடுத்துக்கிறார்னு சொன்னதும் எங்களுக்கு ஏக குஷி. மாவட்டத்துக்கு 200 பேரை அழைத்துவரச் சொன்னாங்க. நாங்க மொத்தம் 206 பேர் தனியா வேன், கார் பிடிச்சு சென்னைக்கு வந்தோம். 15-ம் தேதி காலையில 7 மணிக்கே மண்டபம் முன்னாடி ஆஜர். இந்தச் சந்திப்பு எங்ககூட போட்டோ எடுக்கிறதுக்காக இருந்தாலும், அரசியல் பற்றிப் பேசுவார்னு நாங்க நினைச்சுகூட பார்க்கலை. நாங்க செம ஹேப்பி! அரசியலைப் பற்றி தலைவர் ரொம்பத் தெளிவாப் பேசினார். `நான் அரசியலுக்கு வருவது அந்த ஆண்டவன் கையிலதான் இருக்கு. வந்தால் பணம் சம்பாதிக்கணும்னு நினைக்கிறவங்களை பக்கத்துல வெச்சுக்க மாட்டேன்'னு சொல்லியிருக்கிறார். இதுக்கு மேல அவர் எப்படித் தெளிவா சொல்ல முடியும்? ஆனா, சிலர் `அவர் பேசுறது புரியலை. பல வருஷங்களுக்கு முன்னாடி சொன்னதையே திரும்பவும் சொல்லியிருக்கிறார்'னு சொல்றாங்க. இதுல என்ன குழப்பம்னு எங்களுக்குப் புரியலை. ஆனா ஒண்ணு சார், தமிழ்நாட்டு மக்கள் இனி நிம்மதியா வாழணும்னா அது சூப்பர் ஸ்டார் கையிலதான் இருக்கு. அவர் நிச்சயம் அரசியலுக்கு வருவார்னு எங்க எல்லாருக்குமே நம்பிக்கை இருக்கு" என்றார். 

அண்ணாமலை "எனக்கு பேரு வைச்சதே ரஜினி சார்தாங்க. விவரம் தெரிய ஆரம்பிச்ச வயசுல இருந்தே நான் அவரோட ரசிகர். 18 வயசு ஆனதும் ரஜினி ரசிகர் மன்றத்துல இணைந்துவிட்டேன். இப்ப நான் ஐ.டி கம்பெனியில வேலை செய்றேன். சார், ரசிகர்கள்கூட போட்டோ எடுத்துக்கிறார்னு நியூஸ் வந்ததும், முதல் ஆளா போய் என் பேரைக் கொடுத்துட்டேன். 15-ம் தேதி காலையில 6 மணிக்கே மண்டபத்துக்கு வந்துட்டேன். அன்னிக்கு வந்திருந்த 600 பேர்களில் நான்தான் கடைசியா போட்டோ பிடிச்சேன். `நீங்கதான் எனக்கு 25 வருஷங்களுக்கு முன்னாடி பெயர் வைச்சீங்க. என் பேரு அண்ணாமலை. இன்னிக்கு என் பிறந்த நாள்'னு சொன்னேன். 'வாழ்த்துகள் கண்ணா'னு சொன்னவர்.  'நான்தான் உனக்கு பேரு வைச்சேனா.. சூப்பர்'னு ஒரு குழந்தை மாதிரி சொன்னார். அவர் அரசியலுக்கு வந்தால், என் வேலையை விட்டுட்டுகூட அவருக்குச் சேவை செய்ய தயங்க மாட்டேன். என்னைப்போல யங்ஸ்டர்களுக்கு ரஜினி சார் நிச்சயமா ரோல்மாடல் மாதிரி இருப்பார். இதுவரை அவரிடம் கேட்கப்பட்ட அனைத்து கேள்விகளுக்குமே விரிவாகவே அவரது பேச்சில் பதில் இருந்தது. தலைவர் அரசியலுக்கு வந்தால் தமிழக இளைஞர்களுக்குப் புது ரத்தம் பாய்ச்சியதுபோல இருக்கும்" என்றார். 

திண்டுக்கல் மாவட்ட ரஜினி மன்றத் தலைவர் பாணி, "எங்க ஊர்ல இருந்தும் மொத்தம் 200 பேர் வந்திருந்தாங்க. `யாரும் தலைவர் காலில் விழக் கூடாது. கையைப் பிடிச்சு முத்தம் கொடுக்கக் கூடாது. தலைவரைத்  தொந்தரவு செய்யாம போட்டோ பிடிக்கணும்'னு வரும்போதே அவங்களுக்கு ஆலோசனை சொல்லித்தான் கூப்பிட்டு வந்தோம். அதே மாதிரிதான் எல்லாரும் நடந்துகிட்டாங்க. `தலைவர், படம் வரும்போது மட்டும் அரசியல் பேசுறார்' என்பதை ஏத்துக்க முடியாது. அவருக்கான அரசியல் அழைப்பு எப்போதுமே இருக்கு. அவர் வந்தால் வரவேற்க தமிழக மக்களும் தயாரா இருக்காங்க. `அரசியலுக்கு வந்தால், ஊழல் பண்ணாதவர்களை, பணம் சம்பாதிக்கணும்னு நினைப்பவர்களைப் பக்கத்துல வைச்சுக்க மாட்டேன்'னு அரசியலுக்கு வருவதற்கு முன்பே இப்படிச் சொல்றார்னா... அரசியலுக்கு வந்தால் எவ்வளவு தூய்மையா இருப்பார்னு பார்த்துக்கோங்க. விரைவில் அரசியல் பற்றி அதிகாரபூர்வமான அறிவிப்பு வரும்" என்றார் உறுதியாக.

அடுத்த கட்டுரைக்கு