Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இசை மழை இங்கே பொழிகிறதே! (Sponsored Content)

'தென்றல் வந்து தீண்டும்போது என்ன வண்ணமோ, மனசுல' இந்த வரிகளைக் கேட்கும் போதெல்லாம் மனதில் ஆறுதலாய் காற்று தலையை வருடிச் செல்லும்,  நீண்ட அமைதி ஒன்று நம் மனதில் நாற்காலியிட்டு அமரும். குழந்தைக்கு அன்னை பாடும் தாலாட்டைப் போல இதமாக நம்மை உறங்க வைக்கும். அதுதான் இளையராஜா என்ற ஆளுமை, இசையால் செய்திடும். மந்திர ஜாலம். ‘மேஸ்ட்ரோ’ இளையராஜாவின் மனதை உருகவைக்கும் இசையை இன்னும் மெருகேற்றி, சிறந்த ஒலித்தரத்தில் நமக்கு அளிக்கிறது ‘மேஸ்ட்ரோஸ் மியூசிக்’ (Maestro’s music) செயலி.

இளையராஜா

 

வெளிநாட்டில் வாழும் சீனு, இளையராஜாவின் பாடல்களைத் தேடித் தேடி இணையத்தில் தரவிறக்கம் செய்து கேட்பவன். 70’s, 80’s மற்றும் 90’s பாடல்கள் என்றால் விரும்பிக் கேட்பவன். இசையமைப்பாளராக வேண்டும் என்ற துடிப்புள்ள இளைஞன் பாஸ்கர். தெருவோரம் கிடைக்கும் பாடல் சிடிக்களை, குறிப்பாக இளையராஜாவின் பாடல்களை தேடித் தேடி எடுத்து வந்து ரசிப்பவன்.  பயணம் செய்கையில் ராஜாவின் இசையையும் உடன் அழைத்துச் செல்லும் அலுவலகத்தில் பணிபுரியும் சங்கீதா. ராகதேவனின் சில அருமையான பாடல்கள் இணையத்தில் எங்கு தேடியும் கிடைக்கவில்லை என்று வருத்தப்படுபவர்கள் என தன்னுடைய பாடல்களைக் கேட்கத் துடிக்கும் ரசிகர்களுக்கென இசைஞானி அறிமுகப்படுத்தியது செயலிதான் இந்த  ‘மேஸ்ட்ரோஸ் மியூசிக்’ (Maestro’s music).  

 

ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் போன்களிலும் இந்த செயலியைத் தரவிறக்கம் செய்து எங்கும் எப்போதும் தேன்மதுரக் கானங்களைக் கேட்டு மகிழலாம். இதில் இளையராஜா இசையமைத்து வெளிவரும் புதிய பாடல்கள், எழுபதுகளிலிருந்து அவர் மாயம் செய்த ஒலி விந்தைகள், பின்னணி இசைக்குப் பெயர்பெற்ற இசைஞானி இசையமைத்த பெரும்பாலான படங்களின் ஒரிஜினல் சவுண்ட் ட்ராக்கும் இதில் உண்டு. ரொமேன்ஸ், கிளாசிக்கல், ஆன்மிகம், நாட்டுப்புற பாடல்கள், சோகம், வெஸ்டர்ன் போன்ற எல்லா ஜானர்களிலும் பாடல்களை கேட்டு ரசிக்கலாம்.  இளையராஜா, தனுஷ், பாலுமகேந்திரா, ரஜினி, கமல், பாடல்கள், டிரைவ் டூ ஒர்க்கிற்கு பிரியமான பாடல்கள் ஆகியவை தனித்தனி கலெக்க்ஷன்களாக தொகுக்கப்பட்டுள்ளது.  மேலும் இளையராஜா கலந்து கொள்ளும் லேட்டஸ்ட் நிகழ்வுகளையும் காணொளியாக பார்த்து இன்புறலாம். மேலும் ராஜாவைப் பற்றிய சுவாரஸ்யமான குறிப்புகளோடு எல்லா நேரமும் ஓடிக்கொண்டிருக்கும் மேஸ்ட்ரோ’ஸ் லைவ் புரோக்ராம் என மொத்தத்தில் ராஜாவின் ரசிகர்களுக்கு விருந்து படைத்திடும் இந்த ‘மேஸ்ட்ரோஸ் மியூசிக்’ (Maestro’s music)!

 

இசைஞானியின் இனிமையான பாடல்களை இடைவிடாமல் கேட்க வேண்டுமா? இங்கு செயலியை தரவிறக்கம் செய்யுங்கள்.

 

Maestro's Music (Google Play Store ) 

Maestro's Music (Apple Store)


 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்