விஜய் வசனத்தை அஜித் பேசி பார்த்திருக்கீங்களா?

விஜய் படத்து பஞ்ச் டயலாக்கை எல்லாம் அஜித்தும், அஜித் படத்து பஞ்ச் டயலாக்கை எல்லாம் விஜய்யும் பேசி நடிச்சு இருந்தா எப்படி இருக்கும்னு பாக்கலாமா மக்களே...

விஜய் அஜித்

விஜய் படங்கள்ல அஜித்...

பூவே உனக்காக : ''செடி இருக்கும், செடியில பூ இருக்கும், பூ உதிரும், ஆனா அந்த பூவை எடுத்து திரும்ப செடியில ஒட்ட வைக்க முடியாது. அது!''

திருமலை: ''எனக்கு நண்பன்னா  அவன் என் தோள் மேல கை போட எந்த தகுதியும் தேவை இல்லை, எனக்கு எதிரியா இருக்கணும்னா என் தோலை உரிக்கிற அளவுக்கு அவனுக்கு தகுதி வேணும்.. மீட் பண்ணலாமா?''

கில்லி: ''தம்மாத்துண்டு பிளேடு மேல நம்பிக்கை வச்சு இவங்களை தொட வந்துருக்கியே... அவங்களைத் தொடணும்னா என்னையத்தாண்டி போய்த் தொடுடா  பாக்கலாம்.''

தல தளபதி

போக்கிரி: ''ஒருவாட்டி முடிவு பண்ணிட்டேன்னா என் வாழ்க்கையில ஒவ்வொரு நாள்லயும்  ஒவ்வொரு நிமிசத்துலயும் ஏன்  ஒவ்வொரு நொடியிலயும் அதுல இருந்து மாறவே மாட்டேன்.. ஏன்னா அது நானா முடிவு பண்ணுனதுடா.. நெவர்... எவர்... கிவ்அப்!''


விஜய் அஜித்

 

அஜித் படங்களில் விஜய்...

பில்லா: ''சரித்திரத்தைப் புரட்டிப்பாரு. வாழ்க்கை ஒரு வட்டம்டா... நாம வாழணும்னா யாரை வேணா எத்தனை பேரை வேணா கொல்லலாம்னு  இன்னைக்கு  நாம முடிவு பண்ணிட்டோம்னா நாளைக்கே அவனும் அதே மாதிரி முடிவு பண்ணிடுவான்.''

திருப்பதி: ''இந்த திருப்பதி பால்பாக்கெட்  வாங்கவும், நியூஸ் பேப்பர் வாங்கவும், ரீசார்ஜ் பண்ணவும், கீழே இறங்கிப்போறவன்டா..  ஆனா,   துணிகாயப்போடவும், டிஷ் ஆன்டெனா மாட்டவும் காயப்போட்ட வடகம், வத்தலை எடுக்கவும் மொட்டை மாடிக்கு ஏறிப்போறவன்டா..''

தல தளபதி

வீரம்: ''என்னைய நீ சூறாவளினு நினைச்சினா நான் சுனாமி, திருக்கை மீன்னு நினைச்சினா நான் திமிங்கலம், பெரியாறுனு நினைச்சினா நான் காட்டாறு,  மொத்தத்துல நீ நினைக்குற எதுக்கு உள்ளேயும் நான் இருக்க மாட்டேன்.. நான் எதுல இருக்குறேனோ அதை நீ நினைச்சுருக்கவும் மாட்ட!''

வேதாளம்: ''பொண்ணுங்க போகட்டும் சார் விடுங்க. பார்க்குக்கு போகட்டும் சார், பீச்சுக்கு போகட்டும் சார், படத்துக்குப் போகட்டும் சார்  எல்லாரையும் லவ் புரபோஸ் பண்ண விடுங்க சார். லவ்வை சொல்ல வெட்கப்படுறவங்க வாழவே வெக்கப்படுறவங்கனு கேள்விப்பட்டுருக்கேன் சார்.''
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!