அட! பாகுபலியில் இந்த விஷயங்களை எல்லாம் கவனிச்சீங்களா..!?

`பாகுபலி', இந்திய சினிமாவை பெருமை கொள்ள வைத்த பிரம்மாண்ட சினிமா. ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூலை வாரிக்குவித்து வெற்றி நடை போட்டு கொண்டிருக்கும் இந்த திரைப்படத்தில் இந்த விஷயங்களை எல்லாம் கவனிச்சீங்களா...

பாகுபலி

பிறக்கும்போதே தாயை இழந்துவிடும் அமரேந்திர பாகுபலியை, சிவகாமிதான் தாய்க்கு தாயாக, தந்தைக்கு தந்தையாக இருந்து வளர்த்தெடுப்பார். அதேபோல், பிறந்த இரவன்றே தாய் தேவசேனாவை பிரிந்துவிடும் மகேந்திர பாகுபலியை, `நதியம்மா கொடுத்த வரம்' என சங்காதான் பாசங்கொட்டி வளர்ப்பார். #பெற்றால் தான் பிள்ளையா

மகேந்திரனை தூக்கி வளர்க்கும் சங்கா, அவனுக்கு `ஷிவு' என பெயர் சூட்டுவார். அதேபோல் குந்தல தேசத்திற்கு தன் அடையாளத்தை மறைத்து செல்லும் அமரேந்திரனை பார்த்து `உங்கள் பெயர் என்ன?' என தேவசேனா கேட்க, `ஷிவு' என பதில் சொல்வார் அமரேந்திர பாகுபலி. #ஷிவு சன் ஆஃப் ஷிவு

`பாகுபலி' என்பதற்கு வலிமையான கரங்களை உடையவன் என பொருள். அதனால்தான், தனது கை விரலை அமரேந்திரன் இறுக்கமாக பற்றிக்கொண்டதைப் பார்த்து `பாகுபலி' என பெயர் சூட்டுவார். வளர்ந்து இளைஞனானப் பின்னர் அவ்வளவு பெரிய ரதத்தை ஒற்றை ஆளாக இழுத்து வருவார். தன் தந்தையைப் போலவே மகேந்திரனின் கரங்களும் வலிமையானதுதான் என்பதை சிவலிங்கத்தை தூக்கிச் செல்லும் காட்சியிலேயே புரிந்துகொள்ளலாம். #புள்ள போல தோள் மேல கல்லை தூக்கி போவானே..!

குந்தல தேசத்தில் இருந்து மகிழ்மதி நோக்கி பயணிக்க படகில் ஏறுகையில், படகு கவிழும். அதேபோல், மகிழ்மதி நாட்டின் எல்லைக்குள் கப்பல் நுழைகையில் யானை சிலையின் கால் பட்டு கொடிக்கம்பம் உடையும். இந்த பயணத்தால் அசம்பாவிதம் ஏற்படப்போகிறது என குறிப்பால் உணர்த்தியிருப்பார் ராஜமௌலி. #என்ன ரத்தகாவெல்லாம் வாங்குது?

அமரேந்திரன் பிறந்த அன்றே அவரது அம்மாவும் இறந்துவிடுவார். மகேந்திரன் பிறந்த அன்று அவரது தந்தை அமரேந்திர பாகுபலி கொல்லப்படுவார். இதேபோல், பல்வாள் தேவனின் பிறந்தநாளன்றுதான் அவரது மகன் பத்ரா தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்படுவான். மகிழ்மதிக்கு பதில் ரத்த பூமினு வெச்சுருக்கலாம்! #மகிழ்மதி ஒரு ரத்தபூமி

 

அனுஷ்கா

தேவசேனை வாளெடுத்து எதிரிகளை வீசி சாய்ப்பதைப் பார்த்துதான் அமரேந்திர பாகுபலிக்கு அவர் மீது காதல் மலரும். இங்கே அவந்திகா மகிழ்மதி வீரனின் நெஞ்சில் வாளை செருகுவதை பார்த்து பிரமித்துப்போவான் மகேந்திர பாகுபலி. #இந்த விசயத்தில் தனது அப்பாவை போல யோசித்திருக்கிறான் மகேந்திர பாகுபலி.

பல்வாள்தேவனின் தளபதி தேவசேனாவிடம் தவறாக நடந்துக்கொள்ள முயன்றதற்கு அவையில் வைத்து அவரது தலையை துண்டித்து விடுவார் அமரேந்திர பாகுபலி. அதேபோல், பல்வாள்தேவனின் மகன் தேவசேனாவிடம் தகாத முறையில் பேசியதற்கு அவனது தலையை கொய்துவிடுவான் தேவசேனையின் மகன் மகேந்திரன்.

குந்தல தேசத்தின் அரண்மனையில் அப்பாவியான குமாரவர்மா ஒருவனை தலைக்கு மேல் தூக்கி நிற்பது போல் ஓவியம் வரையப்பட்டிருக்கும். பின்னர், பிண்டாரிகளுடன் சண்டை நடக்கையில் அதேபோன்று ஒருவனை தலைக்கு மேல் தூக்கி ஆக்ரோஷமாய் கத்துவார் குமாரவர்மா. #சாது மிரண்டா!

அமரேந்திர பாகுபலியும், கட்டப்பாவும் திக்விஜயம் செல்லும் வழியில் ஒரு குளத்தில் பிணங்கள் மிதப்பதை காண்பார்கள். `இது பிண்டாரிகளின் வேலை. குடிமக்களை நீரில் மூழ்கடித்து கொல்வதுதான் அவர்களது பொழுதுபோக்கு' என்பார். பின்னர், பிண்டாரிகளை அதேபோன்று அணையில் இருந்து நீரை திறந்துவிட்டு மூழ்க செய்து கொல்வார் அமரேந்திர பாகுபலி. #கர்மா இஸ் எ பூமராங்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!