அஜித் நடித்த ‘வெண்ணிலா’ படம் என்ன ஆனது தெரியுமா? ‘அஜித்தை அறிந்தால்’ #Ajith25 மினி தொடர் பாகம் 8

Ajith

 

பாகம் 1 / பாகம் 2பாகம் 3  / பாகம் 4  / பாகம் 5  / பாகம் 6  / பாகம் 7 

‘என் வீடு என் கணவர்’ என்ற படத்தில் ஒரு பாடல் காட்சியில் சில விநாடிகள் வந்து போனது மூலம் அமைந்ததுதான் அஜித்தின் முதல் சினிமா வாய்ப்பு. ஆனால் அடுத்து வந்த ‘பிரேம புஸ்தகம்’ என்ற தெலுங்கு பட வாய்ப்புதான் மிகச்சரியான அறிமுகம். 1992  ஆகஸ்ட் 3ல் அந்தப் பட, ஷூட்டிங் ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து கணக்கிட்டால், இன்னும் சில மாதங்களில் 25 வது வருடத்தைத் தொடுகிறார் அஜித். அன்றைய தெலுங்கு பட அறிமுக அஜித், ‘வேறு மொழிப் படங்களில் நடிக்க மாட்டேன். தமிழில் மட்டும்தான் நடிப்பேன்’ என்று சொல்லும் இன்றைய ‘விவேகம்’ அஜித்தாக வளர்ந்தது எப்படி? இந்தக் கேள்விக்கான பதிலை அவரின் இந்த கால்நூற்றாண்டு கால திரைப்படங்களின் வழியாக நாம் உணர முடியும். அதற்கான ஒரு ரீவைண்ட் தான்.. இந்த அஜித்தை அறிந்தால்’ #Ajith25 மினி தொடர்! 

‘வில்லன்’ கதையை எழுதிய அந்த பிரபலம், அஜித் நடித்த போர்ஷனை இன்னொரு நடிகரின் படத்தில் சேர்த்து ரிலீஸ் செய்த படம், அஜித் காவல்துறை அதிகாரியாக நடித்த முதல் படம், அஜித் சினேகாவுடன் நடித்த ஒரே படம், அஜித் தூத்துக்குடி ஸ்லாங் பேசி நடித்த படம்... அஜித்தின் அடுத்த ஐந்து படங்களைப் பற்றி இன்று பார்ப்போம்...

36. வில்லன்

இயக்குநரும் நடிகருமான யூகிசேது, அஜித்தைப் பற்றிப் பேசும்போது ‘அஜித்திடம், ஒரு ரஜினியும் இருக்கிறார்; ஒரு கமலும் இருக்கிறார். அதேபோல ஒரு எம்.ஜி.ஆரும் இருக்கிறார்; ஒரு சிவாஜியும் இருக்கிறார்’ என்று சொல்வார். தான் சொன்னதை அடிப்படையாகவைத்து அவர் எழுதிய  கதைதான் ‘வில்லன்’. அதாவது ‘ரஜினியும் கமலும் ஒரு படத்தில் சேர்ந்து நடித்தால் எப்படி இருக்குமோ அதுதான் ‘வில்லன்’. 

அஜித்

37. ‘என்னை தாலாட்ட வருவாளா’

இது, அஜித்தின் ஆரம்பநாளில் உருவான படம். இதன் தலைப்பு ‘வெண்ணிலா’. இந்தச் சமயத்தில்தான் அஜித்துக்கு பெரிய விபத்து நிகழ்ந்தது. சில மாதங்கள் படுத்த படுக்கையாக இருந்தார். அதனால் படத்தை முடிக்க முடியாத சூழல். பிறகு, ஏழெட்டு ஆண்டுகள் கழித்து இந்தப் படத்தை ரிலீஸ் செய்தனர். அதாவது, அஜித் அடிபட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதையே கதையாக்கி, பிறகு அவருடைய தம்பியாக விக்னேஷ் வருகிறார் என்று ஆரம்பத்தில் அஜித் நடித்த போர்ஷனையும் விக்னேஷ் போர்ஷனையும் சேர்த்து ஒரே படமாக்கிவிட்டார்கள். 

என்னை தாலாட்ட வருவாளா

38. ‘ஆஞ்சநேயா’

இயக்குநர் மகராசன், விஜயகாந்தை வைத்து ‘வல்லரசு’ என்ற ஹிட் படம் கொடுத்தவர். அவர் டைரக்‌ஷனில் வந்த படம்தான் ‘ஆஞ்சநேயா’. அஜித் காவல்துறை அதிகாரியாக நடித்த முதல் படம். ‘நான்தான் அடுத்த சூப்பர் ஸ்டார்’ என்று பகிரங்கமாக அறிவித்துவிட்டு இந்தப் படத்தில் நடித்தார். பெரிய எதிர்பார்ப்புகளுக்கிடையே வந்தாலும் ‘ஆஞ்சநேயா’ பெரிதாக ரீச் ஆகவில்லை. ஆனால், இதன் ஆக்‌ஷன் சீக்வென்ஸ் பெரிதாகப் பேசப்பட்டது. 

ஆஞ்சநேயா

39. ‘ஜனா’

ஷாஜி கைலாஷும் விஜயகாந்தை வைத்து ‘வாஞ்சிநாதன்’ என்ற வெற்றிப் படத்தை இயக்கியவர்தான். அதைத் தொடர்ந்து அவர் தமிழில் ‘ஜனா’வில் அஜித்தை இயக்கினார். இது, அஜித் சினேகாவுடன் நடித்த ஒரே படம். இந்தப் படம் சரியா போகவில்லை. ‘பாட்ஷா’ மாதிரியே கதை இருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. 

ஜனா

40. ‘அட்டகாசம்’

தென் தமிழக மக்கள் ரசிக்கிறார்கள் என்பதற்காக, தூத்துக்குடி வட்டார வழக்குமொழி பேசி நடித்த படம். இதில் வரும் ‘தல போல வருமா...’ பாடல் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தில் வரும் ‘பொள்ளாச்சி இளநீரே...’ என்ற பாடல் காட்சியைப் படம்பிடிக்க படக்குழு ஆஸ்திரேலியா சென்றிருக்கிறது. ஆனால், தயாரிப்பாளருக்கு பணச் சிக்கல். அப்போது படக்குழுவினர் அனைவரையும் அஜித் தன் சொந்த செலவிலேயே சென்னைக்கு அழைத்து வந்தார். 

அட்டகாசம்

ரஜினி தொடங்கிவைத்த அஜித் படம், ‘மங்காத்தா’வுக்கும் ‘ஜி’க்கும் உள்ள தொடர்பு, அஜித் நடிக்க மறுத்த கேரக்டர், அஜித்-நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி காம்பினேஷன் பிரிந்த படம், அஜித் உடன்பாடே இல்லாமல் நடித்த படம்... நாளை பார்ப்போம்.

அஜித்தை அறிவோம்...
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!