Published:Updated:

'இந்த சிஸ்டம் கெட்டுக்கிடக்கு..!' எதைச் சொல்கிறார் ரஜினி?

விகடன் விமர்சனக்குழு
'இந்த சிஸ்டம் கெட்டுக்கிடக்கு..!' எதைச் சொல்கிறார் ரஜினி?
'இந்த சிஸ்டம் கெட்டுக்கிடக்கு..!' எதைச் சொல்கிறார் ரஜினி?

'இந்த சிஸ்டம் கெட்டுக்கிடக்கு..!' எதைச் சொல்கிறார் ரஜினி?

"ன்னை வாழ வைக்கும் தெய்வங்கள் நீங்கள் ..வாழவைத்த தெய்வங்கள் நல்லா இருக்கணும் நெனைக்கிறதுல என்ன தப்பு ..அதில் தப்பு இருக்கிறதா எனக்கு எதுவும் தெரியல ..நீ என்ன கரெக்ட் செய்வது.அதை சரி செய்ய மத்தவங்க இருக்காங்க." என்று ரசிகர்கள் மத்தியில் ரஜினி பேசியது, அரசியல் களத்தில் விமர்சனங்களை எழுப்பியுள்ளது. அதுமட்டுமன்றி "தளபதி ஸ்டாலின் என் நெருங்கிய நண்பர். நல்ல திறமையான நிர்வாகி. சோ சொல்வார், அவரை சுதந்திரமா செயல்பட விட்டா நல்லா செயல்படுவார்னு, அன்பு மணி ராமதாஸ் நல்லா படித்தவர். உலகமெல்லாம் சுற்றுகிறவர். நல்லகருத்துகளை வச்சிருக்கார். மாடர்னா சிந்திக்கிறார். திருமாவளவன் தலித்துகளுக்கு ஆதரவாக் குரல் கொடுத்து உழைச்சிக்கிட்டு இருக்கிறார். சீமான் போராளி அவருடைய கருத்துகளைக் கேட்டு பிரமிச்சி போயிருக்கேன்.தேசிய கட்சிகள் எல்லாம் இருக்காங்க. ஆனா இந்த சிஸ்டம் கெட்டுப் போயிருக்கே " என்பதுதான் ரஜினி பேச்சின் ஹாட் டாப்பிக் "அவருடைய இந்தப் பேச்சில் சற்று வெளிப்படைத் தன்மை இருப்பதாகவே தோன்றுகிறது. ஆனால் அவருடைய பேச்சில் சில திட்டங்களும் மறைத்துள்ளது" என்று சொல்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

"கெட்டுப்போயுள்ள இந்த சிஸ்டத்தை இப்போது இருப்பவர்களால் சரி செய்ய முடியவில்லை. அதனை சரிப்படுத்த வேண்டிய கடமை நமக்கு ஏற்பட்டுள்ளது" என்பதைதான் ரஜினி சொல்லியிருக்கிறார்.மேலும் அரசியலுக்கு வரும் முடிவை எடுத்து விட்டேன் என்றும் அதற்கு நீங்களும் தாயராக இருக்கவேண்டும் என்றும் ரசிகர்களுக்கு மறைமுகமாக கூறியுள்ளார் என்கிறார்கள். 

அதுமட்டுமன்றி யார் விமர்சனம் செய்து பேசினாலும் அதற்கு முக்கியத்துவம் அளிக்காமல் அடுத்த கட்டத்துக்குச் செல்வதே நமது இலக்கு. அதற்கான பக்குவமான மனிதனாக நான் இருக்கிறேன் என்பதையும் அவருடைய பேச்சில் காண முடிந்ததாகக் கூறுகின்றனர். ஸ்டாலின், அன்புமணி ராமதாஸ்,திருமாவளவன் ,சீமான் ஆகியோர் ரஜினியை விமர்சித்து பேசியுள்ளனர்.இந்நிலையில் அவர்களைப் பாராட்டிப் பேசியிருப்பது என்பது தமக்கு அரசியல் பக்குவம் வந்துகொண்டிருக்கிறது என்பதை ரஜினி உணர்த்துகிறார் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். அதுமட்டுமன்றி உடனடியாக அரசியல் பற்றி பேசினால் அது சரியாக இருக்காது. எனவே அரசியலும் சமூகமும் வேறு வேறு அல்ல.சமூகச் சித்தாந்ததைக் கையில் எடுத்தால்தான் அரசியலுக்குள் நுழைவதை உறுதிபடுத்தபடுத்த முடியும் என்ற நோக்கத்திலும் அவர் அவ்வாறு பேசியிருக்காலம் என்கின்றனர்.. 

மோடி வெற்றிகரமாக்கியதைதான் ரஜினி பேசுகிறார்...

ரஜினி, ரசிகர்களைச் சந்திக்கப் போகிறார் என்று அறிவிப்பு வந்தவுடன் அவர் பி.ஜே.பி-யில் இணையப்போகிறார். அதற்கு தன் ரசிகர்களை ஒன்று திரட்டவே இந்நிகழ்வுக்கு ஏற்பாடு செய்துள்ளார் என்று பலரும் கருத்துத் தெரிவித்திருந்தனர். இன்று அவருடைய பேச்சு குறித்து பி.ஜே.பி-யின் மாநிலத் தலைவர் தமிழசை சவுந்திராஜனிடம் பேசியபோது , 

"சிஸ்டம் கெட்டுப்போய் உள்ளது என்று ரஜினி சொல்லியிருப்பது சரியான கருத்துதான். மத்தியில் கெட்டுப்போன சிஸ்டத்தை கையில் எடுத்து பிரதமர் மோடி சரி செய்துள்ளார். மோடியின் அந்தத் திட்டத்தைத் தமிழகத்திலும் நடைமுறைப்படுத்தவே நாங்களும் முயற்சித்து வருகிறோம்.சிலரைப் பற்றி குறிப்பிட்டு ரஜினி பேசியுள்ளார். அவர்கள்ஆட்சியில் இருந்தவர்கள். 

ஸ்டாலின் துணை முதல்வராக இருந்தவர். அன்புமணி மத்திய அமைச்சராக இருந்தவர். திருமாவளவன் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். இவர்கள் எல்லாரும் இந்த சிஸ்டத்துகுள் இருந்தவர்கள் தானே அப்படி இருக்கும்போதே இவர்கள் சரியில்லாத சிஸ்டத்தை சரி செய்யவில்லையே என்ற கேள்வி எழுகிறது."

"இந்த அரசியல் தலைவர்கள் யாரும் இந்த சிஸ்டத்தைச் சரிபடுத்தவில்லை என்று சொல்கிறாரா ?" என்று கேள்வி எழுப்பிய போது, " ரஜினி அப்படிச் சொல்லவில்லை. ஆனால், இவர்கள் அனைவரும். இந்த சிஸ்டத்தில்இருந்தவர்கள்தான் என்ற கருத்தை அவர் வைப்பது போல் எனக்குத் தோன்றுகிறது. இந்த சிஸ்டம் சரியில்லை என்பதால், மத்தியில் அதைச் சரி செய்யும் பணிகளைத் தொடங்கி விட்டோம். ரஜினியின் எண்ணத்தை நாங்கள் ஏற்கனவே செயல்படுத்தத் தொடங்கி விட்டோம். மத்தியில் அது வெற்றிகரமாக போய்க் கொண்டிருக்கிறது. தமிழகத்திலும்அந்த நடவடிக்கை தொடங்கி விட்டது" என்றார் ..

பி.ஜே.பியில் இணையவே இவ்வாறு பேசியுள்ளார்.. 

மோடி வெற்றிகரமாக்கிய திட்டத்தைதான் தற்போது ரஜினி பேசியிருக்கிறார் என்று தமிழிசை சவுந்திரராஜன் கூறுகையில், ரஜினி

பி.ஜே.பி-யில் இணையப் போகிறார் என்பதையே இன்றைய அவருடைய பேச்சு காட்டுவதாக கூறுகிறார் அரசியல் விமர்சகர் பாலு,

 "அரசியல் ஆர்வம் ரஜினிக்கு வந்துவிட்டது.நேரடியாக பி.ஜே.பி-யில் சேர்கிறேன் என்றால் விமர்சனங்கள் எழும் என்பதால் இவ்வாறு பேசியுள்ளார். அதன் காரணமாக சிஸ்டம் சரியில்லை என்று கூறுகிறார். சிஸ்டம் என்றால் என்ன என்பது ரஜினிக்குத் தெரியுமா?அவருடைய இந்தப் பேச்சு பி.ஜே.பி-யில் இணைவதற்கு தயாராகி வருகிறார் என்பதையே காட்டுகிறது. அதனை இப்போது தெரிவிக்க முடியாது என்பதால் சிஸ்டம் சரியில்லை என்று கொளுத்திப் போட்டுள்ளார். சிஸ்டம் சரியில்லை என்று சொல்வது வெறும் டிரெய்லர்தான்.

இன்னும் அவரிடமிருந்து வரவேண்டிய மெயின் பிக்சர்ஸ் நிறைய இருக்கிறது. பி.ஜே.பி சொல்கிற ஊழல்,கறுப்புபணம் ஆகியவற்றைதான் தற்போது ரஜினி சிஸ்டம் சரியில்லை என்று சொல்லியிருக்கிறார்.மோடியும் ரஜினியின் கருத்தைத்தான் சொல்லிக் கொண்டிருக்கிறார். அதிகாரிகள் நல்லவர்கள்தான் அவர்களைச் செயல்பட விடாமல் அரசியல்வாதிகள் தடுக்கிறார்கள் என்று மோடி கூறும் கருத்தைதான் ரஜினி சிஸ்டம் என்று கூறுகிறார்.நேரடியாக அரசியலுக்கு வரமுடியாது என்பதால் இவ்வாறான கருத்துகளை உருவாக்கி வருகிறார்.இதற்குப் பெயர் " Mind Making " (மைண்ட்மேக்கிங் ) என்று பெயர். ரஜினி அரசியலுக்கு வருவார் என்று பேச வைக்கவேண்டும். அவர் பி.ஜே.பி-க்குச் சென்று விடுவார் என்று பேசவைக்க வேண்டும்.

ரஜினியின் ரசிகர்கள் என்பவர்கள் பல்வேறு கட்சிகளில் இருக்கிறார்கள். அவர்களிடம் உடனடியாக அரசியல் முடிவு குறித்து அறிவித்தால் அவர்கள் ஏற்பார்களா ? என்பதையெல்லாம் அறியவே இவ்வாறு பேசி வருகிறார். அவர் திசையைத் தீர்மானித்து விட்டார். அந்தத் திசைகளை நோக்கி அனைவரையும் அழைத்துச் செல்லவே இதுபோன்று சிஸ்டம் சரியில்லை என்று பேசியுள்ளார்"என்றார். 

அடுத்த கட்டுரைக்கு