Published:Updated:

பாகுபலி ஒட்டுமொத்த கதைக்குமே காரணம் பெண்தான்!

தார்மிக் லீ
பாகுபலி ஒட்டுமொத்த கதைக்குமே காரணம் பெண்தான்!
பாகுபலி ஒட்டுமொத்த கதைக்குமே காரணம் பெண்தான்!

ளத்தில் இறங்கி வேலை பார்ப்பது ஆணாக இருந்தாலும், அதற்குக் காரணம் ஒரு பெண்ணாகத்தான் இருக்க முடியும். இது பிரமாண்ட படம் ‘பாகுபலி’க்கும் இது பொருந்தும். ஏன்னு புரியலைன்னா கீழே படிச்சுப் பாருங்க! 

‘பாகுபலி’ முதல்பாகம்: 

பல்வாள் தேவனிடமிருந்து தப்பித்து, நீர்மலை மேல் இருந்து, மகேந்திர பாகுபலியைக் கீழே கூட்டிவருவார் சிவகாமிதேவி. உயிர் பிரியும் நேரத்திலும் மேலிருக்கும் மகிழ்மதியைக் காட்டிவிட்டு ஆறோடு ஆறாகப் போய்விடுவார். அந்தக் குழந்தையைக் கண்ட அம்புலி கிராமத்து சங்கா, தன்னுடைய மகனாக பாகுபலியை எடுத்து வளர்ப்பார். ‘ஷிவு’ என்று பெயரிடப்பட்ட மகேந்திர பாகுபலிக்கு சிறு வயதில் இருந்தே நீர்மலை மேல் என்ன இருக்கிறது என்று தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அதிகமாக இருக்கும். ஆனால் எவ்வளவு போராடியும் ஷிவுவால் அந்த மலையின் மேல் ஏறமுடியாது. ஒரு நாள் மலையின் மேல் இருந்து கீழே விழும் முகமூடிக்குச் சொந்தக்காரர் யார் என்று தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில் சட்டென்று கிளம்பிவிடுவார் ஷிவு. 'தீரனே' பாட்டு ஒலிக்கக் கொஞ்சம் கொஞ்சமாகக் கற்பனையில் தோன்றிய அவந்திகாவைப் பின் தொடர்ந்து நீர் மலையின் மேல் இருக்கும் கிராமத்தை அடைந்துவிடுவார். அவந்திகாவைக் கண்ட பின் இருவரும் ஒருவரின் மீது ஒருவர் காதலில் விழுவார்கள். ஆனால் அவந்திகாவுக்குச் செய்து முடிக்க வேண்டிய கடமை பாக்கி இருப்பதால் ஷிவுவை விட்டுவிட்டுக் கிளம்பிவிடுவார். அதன் பின்னர் ஆபத்தில் சிக்கிக்கொள்ளும் அவந்திகாவைக் காப்பாற்றி அவரது லட்சியத்தைக் கேட்பார். 

'நீ என்னோட அவந்திகா... உன்னோட எல்லாமே என் சொந்தம், உன் லட்சியம் கூட என்னுடையதுதான்' என்றுச் சொல்லிவிட்டு, தனிஒருவனாக தேவசேனையைக் காப்பாற்ற மகிழ்மதிக்குப் புறப்படுவார். ஆனால் தேவசேனைதான் இவரைப் பெற்று எடுத்த தாய் என்று ஷிவுவுக்குத் தெரியாது. இவர் காலடி எடுத்து வைத்த உடனேயே தேவசேனைக்குத் தெரிந்துவிட, 'மகிழ்மதியே உயிர்கொள், என் மகன் வந்துவிட்டான்' என்று கர்ஜிக்கும் குரலில் சொல்லுவார். பல இடையூறுகளுக்குப் பின் தேவசேனையைக் காப்பாற்றுவார் ஷிவு. இவரைப் பின் தொடர்ந்து வரும் பல்வாள் தேவனின் மகன் பத்ரா, ஷிவுவை அடித்து துவைத்தது மட்டுமல்லாமல், தேவசேனையைக் கொச்சையாகப் பேசி அடிப்பார். அதைப் பார்த்துப் பொறுமை இழக்கும் ஷிவு, பத்ராவின் தலையைத் துண்டித்துவிடுவார். தேவசேனைதான் தன்னைப் பெற்றெடுத்த தாய் என்ற உண்மை, ஷிவுவுக்கு அதன் பின்னர்தான் தெரிய வரும்.  தன் உயிரைப் பணையம் வைத்துக் காப்பாற்றப் போகும் தேவசேனையும் ஒரு பெண், அதற்குக் காரணமாக இருக்கும் அவந்திகாவும் ஒரு பெண்ணே! 

‘பாகுபலி’ இரண்டாம் பாகம் :

திக்விஜயத்திற்காக அமரேந்திர பாகுபலி ஊர் மக்களை சந்தித்துவர நகர்வலம் செல்வார். அப்படிச் செல்லும்போது தேவசேனையைச் சந்திக்கிறார். அவரின் வீரத்தையும் வாள்வீச்சையும் கண்டு காதலில் விழுகிறார் பாகுபலி. தேவசேனையின் ராஜ்ஜியத்திற்கேச் சென்று அப்பாவி போல் நடித்து தேவசேனையைக் காதலித்துகொண்டிருப்பார். இந்த உண்மை தெரிந்து கொள்ளும் பல்வாள் தேவன் நூதனமாக யோசித்து சிவகாமி தேவி வாயிலிருந்தே ‘தேவசேனையை உனக்குத் திருமணம் முடித்து வைக்கிறேன்’ என்று சொல்லச் செய்வார். சிவகாமியின் ஆணைக்கிணங்க தேவசேனையை மகிழ்மதிக்கு அழைத்து வந்த பின்னரே எல்லா உண்மைகளும் பாகுபலிக்குத் தெரியவரும். காளகேயரை கொன்ற மாவீரன், மகிழ்மதியின் இளவரசன் என்று பல புகழ்கள் இருந்தாலும், காதலுக்காக காளையிடம் முட்டுவாங்குவது, பலரிடம் திட்டுவாங்குவது என்று அப்பாவியாகவே இருந்தவர், மகிழ்மதிக்குள் நுழைந்ததும், கொடுத்த வாக்கிற்காக அரியாசனத்தையே பல்வாள் தேவனுக்கு விட்டுக்கொடுப்பார். உயிருக்கு உயிராய் நினைத்த வளர்ப்புத் தாய் சிவகாமி தேவியின் எதிர்ப்பையும் சம்பாதிப்பார். தேவசேனையை திருமணமும் செய்துகொள்வார் பாகுபலி. இவை எல்லாவற்றுக்கும் மேலாக தன்னை ஆசையாக சோறூட்டி வளர்த்த தன் தாய் சிவகாமி தேவியின் கட்டளைக்கிணங்க கட்டாப்பாவின் கையில் தன் உயிரை மாய்த்துக் கொள்வார். இதற்கெல்லாம் காரணம் பாகுபலியின் காதலி தேவசேனை. இவரும் பெண்ணே.

முதல் பாகத்தில்...காதலித்த அவந்திகாவிற்காக தேவசேனையைக் காப்பாற்றுவார் மகேந்திர பாகுபலி. இரண்டாம் பாகத்தில்...காதலித்த தேவசேனைக்காக ராஜ்ஜியத்தையே விட்டுக்கொடுப்பார் அமரேந்திர பாகுபலி. அவந்திகாவும், தேவசேனையும்தான் இந்த முழுக் கதைக்கு காரணம்னு இப்போ புரியுதா பாஸ்..!