Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அஜித் நடிக்க மறுத்த கேரக்டர் எது? - ‘அஜித்தை அறிந்தால்’ #Ajith25 மினிதொடர் பாகம் 9

அஜித்

பாகம் 1 / பாகம் 2பாகம் 3  / பாகம் 4  / பாகம் 5  / பாகம் 6  / பாகம் 7 / பாகம் 8

‘என் வீடு என் கணவர்’ என்ற படத்தில் ஒரு பாடல் காட்சியில் சில விநாடிகள் வந்து போனது மூலம் அமைந்ததுதான் அஜித்தின் முதல் சினிமா வாய்ப்பு. ஆனால் அடுத்து வந்த ‘பிரேம புஸ்தகம்’ என்ற தெலுங்கு பட வாய்ப்புதான் மிகச்சரியான அறிமுகம். 1992  ஆகஸ்ட் 3ல் அந்தப் பட, ஷூட்டிங் ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து கணக்கிட்டால், இன்னும் சில மாதங்களில் 25 வது வருடத்தைத் தொடுகிறார் அஜித். அன்றைய தெலுங்கு பட அறிமுக அஜித், ‘வேறு மொழிப் படங்களில் நடிக்க மாட்டேன். தமிழில் மட்டும்தான் நடிப்பேன்’ என்று சொல்லும் இன்றைய ‘விவேகம்’ அஜித்தாக வளர்ந்தது எப்படி? இந்தக் கேள்விக்கான பதிலை அவரின் இந்த கால்நூற்றாண்டு கால திரைப்படங்களின் வழியாக நாம் உணர முடியும். அதற்கான ஒரு ரீவைண்ட் தான்.. இந்த ‘அஜித்தை அறிந்தால்’ #Ajith25 மினி தொடர்! 

ரஜினி தொடங்கிவைத்த அஜித் படம், ‘மங்காத்தா’வுக்கும் ‘ஜி’க்கும் உள்ள தொடர்பு, அஜித் நடிக்க மறுத்த கேரக்டர், நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி பிரிந்த படம், உடன்பாடே இல்லாமல் நடித்த படம்... அஜித்தின் அடுத்த ஐந்து படங்களைப் பார்ப்போம்.

41. ‘ஜி’

லிங்குசாமியும் அஜித்தும் சேர்ந்து படம் பண்ண வேண்டும் என்று வெகுநாள்களாகப் பேசி கமிட் ஆன படம் இது. தயாரிப்பாளர் எஸ்.எஸ்.சக்கரவர்த்தி. இவர் ஏகப்பட்ட பிரச்னைகளில் இருந்ததால், குறிப்பிட்ட காலகட்டத்துக்குள் படத்தை முடிக்க முடியவில்லை. தவிர, அஜித்தும் அப்போது கார் ரேஸில் பிஸியாக இருந்தார். குறித்த காலத்துக்குள் படத்தை முடித்திருந்தால், படம் ஓரளவுக்கு வெற்றிபெற்றிருக்கும். பின்னாளில் வந்த ‘மங்காத்தா’வுக்கும் ‘ஜி’க்கும் சின்ன தொடர்பு இருக்கிறது. ‘ஜி’யில் இவரின் நண்பராக நடித்தது வெங்கட் பிரபு. அவர் முழு நேர இயக்குநராக மாறியதற்கும் பிறகு ‘மங்காத்தா’வை இயக்கியதற்கும் ‘ஜி’யில் அஜித்துடன் ஏற்பட்ட நட்பே காரணம். 

அஜித்

42. ‘பரமசிவன்’

பாலாவின் ‘நான் கடவுள்’ படத்தில் அஜித் கமிட் ஆகி, உடல் இளைத்து, முடி வளர்த்துக்கொண்டிருந்த காலகட்டம். சிலபல கருத்துவேறுபாடுகளால் அந்தப் படத்தில் அஜித் நடிக்கவில்லை. அந்தப் படத் தயாரிப்பு நிறுவனமான ‘பி ஸ்டூடியோஸு-க்கு ஒரு படம் பண்ண வேண்டும் என்ற கமிட்மென்டால் பி.வாசு இயக்கத்தில் அஜித் நடித்த படம்தான் ‘பரமசிவன்’. அக்ரிமென்ட்டின்படி பாலாவின் ‘பி ஸ்டூடியோஸ்’தான் தயாரிப்பு நிறுவனம் என்றாலும், இந்தப் படத்தை உண்மையிலேயே தயாரித்தவர், ‘போக்கிரி’ படத்தைத் தயாரித்த ரமேஷ்பாபு. `சந்திரமுகி’யைத் தொடர்ந்து பி.வாசு இயக்கிய இந்தப் படத்தின் பூஜையை ரஜினி தொடங்கிவைத்தார். 

பரமசிவன்

43. ‘திருப்பதி’

ஏ.வி.எம் நிறுவனத்துக்காக ஒரு படம் பண்ண வேண்டும் என்பது அஜித்தின் நெடுநாள் விருப்பம். இந்தச் சமயத்தில் அவர்களும் அழைக்க, அந்த அழைப்பை உடனடியாக ஏற்றுக்கொண்டார். பேரரசு இயக்கத்தில் வழக்கத்தைவிட அதிக கமர்ஷியல் காரத்தோடு வந்த படம். சுமாராகப் போனது. 

திருப்பதி

44. ‘வரலாறு’

இந்தப் படத்தின் கதையை ரவிச்சக்கரவர்த்தி சொல்லும்போது அஜித் உள்பட பலருக்கும் ‘இது கரெக்டா வருமா’ என்ற சந்தேகம் இருந்தது. மேலும், ‘டெலிவர் பண்ண முடியாத அளவுக்கு ஹெவியா இருக்கே’ என்ற யோசனை வேறு. ஆனால், இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் மட்டும், ‘உங்களால் பண்ண முடியும் அஜித். பண்ணுங்க’ என்று நம்பிக்கையோடு இருந்தார். இருப்பினும், பல காரணங்களால் இழுத்துக்கொண்டே போய், தாமதமாகத்தான் இந்த புராஜெக்ட் நடந்தது. ஆனால், பெரிய வெற்றி. இந்த ‘வரலாறு’ வேறொரு விஷயத்திலும் வரலாறு படைத்தது. ‘பிரியவே பிரியாத நட்பு’ என சினிமா உலகமே நினைத்துக்கொண்டிருந்த அஜித்துக்கும் தயாரிப்பாளர் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்திக்குமான நட்பு ‘வரலாறு’ படத்தில் பிரிந்தது. அதன் பிறகு இவர்கள் இருவரும் சேர்ந்து இதுவரை படம் பண்ணவே இல்லை. 

வரலாறு

45. ‘ஆழ்வார்’


‘அரசியலுக்கு வருவார்’, `அ.தி.மு.க-வில் சேருவார்’, `பா.ஜ.க அழைக்கிறது’ என இவரைப் பற்றி இன்றும் சொல்லப்படுவதற்கு ஆரம்பம் இந்தப் படம்தான். அப்போது இவர் சாமி கும்பிட்டுக் கொண்டிருப்பதுபோல் வந்த ஒரு போஸ்டர்தான், இதுபோன்ற அரசியல் செய்திகளைப் பரப்பியது. இந்தப் படத்தைப் பண்ண அஜித்துக்கு உடன்பாடே இல்லை. சில வணிகக் காரணங்களுக்காகப் பண்ணினார். இந்தப் படத்தின் இயக்குநர் ஷெல்லா, இயக்குநர் எஸ்.ஜே.சூர்யாவிடம் இருந்தவர். இந்தப் படம் சரியாகப் போகவில்லை. அதுவரை புது இளம் இயக்குநர்களுக்கு நிறைய வாய்ப்புகளைக் கொடுத்துக்கொண்டிருந்த அஜித், இந்தப் படத்துக்குப் பிறகு சீனியர்களையே அடுத்தடுத்த படங்களுக்கு கமிட் செய்கிறார். 

ஆழ்வார்

அஜித் ஆசைப்பட்டு ஒப்புக்கொண்ட ப்ராஜெக்ட், ‘கபாலி’யில் ரஜினி பேசியதை ‘பில்லா’விலேயே பேசிய அஜித், கவுதம் மேனன் முதன்முதலில் அஜித்துடன் சேர்ந்திருக்க வேண்டிய படம், ‘கதை, திரைக்கதை, வசன உதவி - அஜித்குமார்’ எந்தப்படத்தில்? அஜித் தன் 50வது படத்தை எப்போது முடிவு செய்தார் தெரியுமா?... நாளை பார்ப்போம்.

அஜித்தை அறிவோம்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்