வெளியிடப்பட்ட நேரம்: 11:49 (24/05/2017)

கடைசி தொடர்பு:11:49 (24/05/2017)

வில்லன்களுக்கும் தீம் மியூசிக் - தமிழ் சினிமாவின் தெறி மொமென்ட்ஸ்!

தீம்

ஹீரோக்களுக்கு மட்டுமில்ல பலபடங்கள்ல  வில்லனா நடிச்சவங்களுக்கும் தெறிக்கவிடுறமாதிரி சில தீம் மியூஸிக்ஸ் போட்ருக்காங்க அதுல சில தீம் மியூசிக்ஸை பார்க்கலாம்... (ப்ளே பண்ணிக்கேளுங்க)

* இது 'கத்தி' படத்துல வர்ற மியூஸிக். விஜய்க்கு போட்ட மியூசிக்குக்கு அடுத்து இந்த மியூஸிக்கும் ரொம்ப பிரபலம். மியூசிக் பிடிச்சதாலேயோ என்னவோ விஜய்யை ரசிச்சதோட இல்லாம யாரு இந்த வில்லன் ஸ்மார்ட்டா இருக்காப்புலயேனு சில யுவதிகள் ஸூம் பண்ணிப் பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க.

* சொல்லித்தெரிய வேணாம் இது 'பாட்ஷா' படத்துல மார்க் ஆண்டனியாக வர்ற ரகுவரனுக்கு போட்ட மியூஸிக். கேக்கும்போதே குரூரத்தை கண் முன்னாடி கொண்டுவந்து நிறுத்தும் இந்த மியூஸிக். பாட்ஷாவுல ரஜினிக்கு போட்டிருந்த தீம் மியூஸிக்கை ரசிச்சவங்க யாரும் ரகுவரனோட இந்த மியூஸிக்கை அவ்வளவு சீக்கிரம் மறந்துட மாட்டாங்க.

 

 

* இந்தப்படத்துல ஜெயம் ரவியை விட அதிகமாக ஸ்கோர் பண்ணுனது அரவிந்த்சாமியாகத்தான் இருக்கும். சமீபத்துல வந்த படங்களில் வில்லன் கேரக்டரை அதிகமாகக் கொண்டாடின ஒரு படம்னா அது இந்த 'தனி ஒருவன்'தான். படத்துல அவர் ஏற்றிருந்த  சித்தார்த் அபிமன்யூ கேரக்டர்தான். அவர் வரும்போதெல்லாம் ஒலிக்கும் இந்த மியூஸிக் அவரோட கேரக்டரை இன்னும் வலுப்படுத்தி இருக்கும்.

* ஹீரோவுக்குக்கூட இந்த  'ஜிகர்தண்டா' படத்துல தீம் மியூசிக் இருக்கான்னு தெரியலை மக்களே. ஆனா அசால்ட்டு  சேது கேரக்டர்ல நடிச்ச பாபி சிம்ஹாவுக்கு இருக்கும். திடீர்னு ப்ளாக் ஹியூமர், திடீர்னு கோபம், திடீர் சென்டிமென்ட் திடீர் குரூரம்னு மொத்த வித்தையையும் இறக்கி இருப்பார் பாபி சிம்ஹா. அவரோட கேரக்டரைப் பார்த்தாலே பயம்வருதுனா அதுக்கு இந்த தீம் மியூஸிக் மிக முக்கியக் காரணம்.

* 'ஏழாம் அறிவு' படத்துல போதி தர்மர் மாதிரி இன்னொரு கேரக்டரும் ஃபேமஸ்; அது டாங்க்லீ. கண்ணாலேயே பார்த்து வசியம் பண்ணுறது அசால்ட்டா அடிச்சி பறக்கவிடுறதுனு வருவார். என்ட்ரி ஆகும்போதெல்லாம் இந்த மியூஸிக்க்கும் பேக் ரவுண்ட்ல வந்து கிலி உண்டாக்கும்.

* இது 'துப்பாக்கி' படத்துல வித்யுத் ஜாம்வால் வர்றப்போ எல்லாம்  போடுற தீம் மியூஸிக். விஜய்யோட தீம் மியூஸிக் மாதிரியே இந்த மியூஸிக்கையும் படம் பார்த்த யாரும் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க மாட்டாங்க. இந்தமாதிரி இன்னும் பல படங்கள் இருக்குது அதை எல்லாம் இன்னொரு பார்ட் ல பார்க்கலாம் மக்களே...

 

 


டிரெண்டிங் @ விகடன்